
"நான் யாருடைய உரிமைகளையும் பறிக்கவில்லை. மாறாக, அவற்றை வழங்கவே செய்கிறேன்!" - நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #CAA #NRC #VikatanPollResults
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தேர்தல் பிரசாரத்தைத் துவங்கி வைத்து மக்களிடையே உரையாற்றினார். அதில் இந்தியாவில் தற்போது போராட்ட அலைகளை ஏற்படுத்தியிருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens - NRC) மற்றும் குடியுரிமை சட்டத்திருத்தம் (Citizenship Amendment Act - CAA) குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், "நான் யாருடைய குடியுரிமையையும் இந்தச் சட்டத்திருத்தம் மூலம் பறிக்கவில்லை. மாறாக, குடியுரிமை இல்லாதவர்களுக்கு அவற்றை வழங்கவே செய்கிறேன்!" என்று அறிவித்தார். இது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் HELO பக்கங்களில் கிடைத்த முடிவுகள் இதோ...
`உரிமைகளைப் பறிக்கவில்லை. வழங்குகிறேன்!'- மோடியின் விளக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு மக்கள் அளித்த பதில்கள்.
விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடனின் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் தளத்தில் கேட்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...
மொத்தத்தில், 58.1% பேர், 'உண்மையை மறைக்கிறார்' என்ற கருத்தையே தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, 'உண்மைதான்' என 28.33% பேர், மோடிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அனைத்து பதில்களும் பெற்ற வாக்குகள் இதோ...

இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்டில் பதிவு செய்யுங்கள்.