Published:Updated:

மத்திய ஆட்சி பற்றி மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு மக்களின் ரியாக்‌ஷன் என்ன? #VikatanPollResults

"எதையும் செய்ய முடியாத, கொடுமையான ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!" - மு.க.ஸ்டாலின் கூறிய இந்தக் கருத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults

ஸ்டாலின்
ஸ்டாலின் ( விகடன் )

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பல்வேறு மாநிலங்களின் கட்சிகள், பொதுமக்கள், பிரபலங்கள்... தங்களின் எதிர்க் கருத்துகளைப் பதிவுசெய்துவருகின்றனர். அதேபோல், இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. இதில், சட்டம் கொண்டுவந்த மத்திய அரசுக்கு எதிராகவும், அதற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க-வைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், கனிமொழி, திருச்சி சிவா போன்ற பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் பேசியுள்ள ஸ்டாலின், "வழக்குகளைக் கண்டு அஞ்சும் இயக்கம் தி.மு.க அல்ல. மக்களுக்குப் பாதகம் செய்யும் ஆட்சியே பா.ஜ.க ஆட்சி. எதையும் செய்ய முடியாத கொடுமையான ஆட்சி மத்தியில் நடைபெறுகிறது" என்று சாடியுள்ளார். இதுகுறித்து மக்களின் ரியாக்ஷன் என்ன?

குடியுரிமை சட்டத்திருத்தம்; வலுக்கும் போராட்டங்கள்.. வெவ்வேறு காரணங்கள்! என்ன நடக்கிறது? #CAAProtest

`மத்தியில் நடப்பது கொடுமையான ஆட்சி!'- ஸ்டாலினின் இந்தக் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll - என்கிற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு மக்கள் அளித்த வாக்குகள்...

Stalin #VikatanPollResults
Stalin #VikatanPollResults

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Stalin #VikatanPollResults
Stalin #VikatanPollResults

விகடனின் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Stalin #VikatanPollResults
Stalin #VikatanPollResults

விகடன் தளத்தில் கேட்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

Stalin #VikatanPollResults
Stalin #VikatanPollResults

மொத்ததில் 53.25% பேர், ஸ்டாலினின் இந்தக் கருத்தை 'மறுக்க முடியாத உண்மை' என்று தெரிவித்துள்ளனர். அடுத்தபடியாக 23.47% பேர், 'உண்மை புரியாத பேச்சு' என்று கலாய்த்துள்ளனர். அனைத்து பதில்களும் பெற்ற வாக்குச் சதவிகிதம்...

"எதையும் செய்ய முடியாத கொடுமையான ஆட்சி மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!" - மு.க.ஸ்டாலின் கூறிய இந்தக் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll

- மறுக்க முடியாத உண்மை - 53.25%

- எதிர்க்கட்சி சம்பிரதாயம் - 14.73%

- உண்மை புரியாத பேச்சு - 23.47%

- வலிமையான எதிர்க்குரல் - 8.55%

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவுசெய்யுங்கள்.