Published:Updated:

`உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது?’ - எடப்பாடி பழனிசாமி கேள்வியும், திமுக-வின் பதிலும்!

திமுக-விலுள்ள மூத்த அமைச்சர்கள்கூட உதயநிதியிடம் கையைக் கட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதையெல்லாம் சட்டமன்றத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அமைச்சரின் பேரன் வயதிருக்கும்... உதயநிதியிடம் கையை கட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கடந்த வாரம் ராணிப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர், ``திமுக அமைச்சரவையில் எட்டு அமைச்சர்கள் முன்னாள் அதிமுக உறுப்பினர்கள். திமுக-வில் ஆள் இல்லாததால் வாடகைக்கு ஆள் பிடித்து கட்சி நடத்துகிறார்கள். அதுமட்டுமல்ல, 15 முன்னாள் அதிமுக உறுப்பினர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதிமுக-வில் உண்மையாக உழைக்கும் யாரும் உயர்ந்த பதவிக்கு வரலாம். அதுவே திமுக-வில் வர முடியுமா? நீங்கள் கருணாநிதியின் மகனாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அதிமுக-வின் சாதாரணத் தொண்டனைக்கூட வெல்ல முடியாது. அதிமுக-வில் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள். மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையில் வாழ்ந்துகொண்டிருக்கும் தொண்டர்கள்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும், ``திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம், ஒழுங்கு தானாகச் சீர்குலைந்துவிடும். ரெளடிகள் அனைவரும் வெளியே வந்துவிடுவார்கள். இதை நாம் இந்தக் குறுக்கியகாலத்தில் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த நான்கு மாத காலத்திலேயே எத்தனை கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு என்று குற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன! அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பேணி காக்கப்பட்டது. விவசாயிகளுக்குத் தேவையான உதவியைச் செய்தோம். ஏழை எளிய மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து கொடுத்தோம். கல்வி கற்கத் தேவையான திட்டங்களைக் கொண்டுவந்தோம்.

தேர்தல் சமயத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. சம்பிரதாயத்துக்கு ஒரு சில அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டிருக்கிறது. அதிமுக-வின் ஒரு வாக்கு எங்கு இருந்தாலும் அவர்களை அழைத்துவந்து பதிவு செய்ய வேண்டும். அதேபோல பூத் ஏஜென்ட்டாக இருப்பவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். நம்மை திசைதிருப்பி, கள்ள ஓட்டுப் போட்டுவிடுவார்கள். பெட்டியை சீல் செய்து இருப்பிடம் போகும்வரை பின்னால் காவலுக்குச் செல்ல வேண்டும். மையத்திலும் கண்ணும் கருத்துமாகக் காவலுக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் பெட்டியை மாற்றிவிடுவார்கள், அது அவர்களுக்குக் கைவந்த கலை. வாக்கு எண்ணும்போதும் கவனமாக இருக்க வேண்டும் அங்கும் ஏதாவது தில்லு முல்லு செய்து வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது. மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது, ``திமுக-வில் கருணாநிதி, அதற்குப் பிறகு அவரின் மகன். குரங்குக் குட்டி தாவிப் போகும், அதுபோல உதயநிதி என்ற குட்டியும் தாவிப் போய்க்கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? திமுக-வில் உள்ள மூத்த அமைச்சர்கள்கூட உதயநிதியிடம் கையைக் கட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதையெல்லாம் சட்டமன்றத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த அமைச்சரின்பேரன் வயதிருக்கும் உதயநிதியிடம் கையை கட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக-வில் அப்படி இல்லை, உண்மையாகப் பணியாற்றினால், கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் சாதாரணத் தொண்டன்கூட மேலே வர முடியும். திமுக-வில் வர முடியுமா? திமுக கட்சி தேய்த்துக்கொண்டே போகிறது" என்று கூறினார்.

``உதயநிதி புகழாரம்  முதல் துரைமுருகன் பெருமிதம் வரை" -  சட்டசபை ஹைலைட்ஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழனிசாமியின் இந்தக் கருத்து தொடர்பாக திமுக-வின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``உதயநிதி குறித்துப் பேசுவதற்கு முன்னர், முதல்வர் பழனிசாமி பதவியேற்கும் முன்பு அவருக்கு என்ன தகுதி இருந்தது. அதிமுக-வில் ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஆகும்போது, அதற்கு முன்பிருந்த தலைவர்களின் நிலை என்ன ஆனது. சசிகலாவிடம் மண்புழுபோல ஊர்ந்து சென்று பதவியேற்றார் பழனிசாமி. பதவி வழங்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்தவர் பழனிசாமி. தமிழர்களின் துரோகிகளான பாஜக-வோடு கூட்டணி வைத்துக்கொண்டு தமிழர்களுக்கே துரோகம் செய்தவர் அவர். அவருக்கு உதயநிதியைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது" என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தொடர்ந்து பேசியவர், `` உதயநிதி கட்சிக்கு வருவதற்கு முன்பே, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர். கட்சித் தொண்டர்கள், உறுப்பினர்களின் தொடர் வேண்டுகோள் காரணமாகக் கட்சியில் இணைத்தார். கடுமையாகக் கட்சி வேலைகள் செய்து இளைஞர் அணிச் செயலாளராக ஆனார். நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பணி செய்தவர் அவர். அதுமட்டுமின்றி சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி பொதுமக்களாலும் அதிகம் நேசிக்கப்படுபவர் உதயநிதி" என்று விளக்கமளித்தார்.

`உதயநிதி Vs விஜய்' - தயாராகும் தேர்தல் களம்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு