Published:Updated:

`உருமாறிய' ம.நீ.ம-வுக்கு கமல்ஹாசன் எந்த வகை `தடுப்பூசி' செலுத்துவது உகந்தது? - ஒரு ரிப்போர்ட்!

எங்கே தவறு நடக்கிறது, கமல் கட்சிக்குள் என்னென்ன விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

`உருமாறிய' ம.நீ.ம-வுக்கு கமல்ஹாசன் எந்த வகை `தடுப்பூசி' செலுத்துவது உகந்தது? - ஒரு ரிப்போர்ட்!

எங்கே தவறு நடக்கிறது, கமல் கட்சிக்குள் என்னென்ன விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

Published:Updated:
``தோல்வியை ஆராய்ந்து பாடம் கற்க வேண்டும் என்பதுதான் அரசியல் மரபு. முக அறிமுகமில்லாதவர்களை மின்னவைக்க நினைத்ததுதான் அவர்களுக்குச் சர்வாதிகாரமாக தெரிந்திருக்கிறது. திறமை அடிப்படையில் வந்த சில நாட்களிலேயே பெரும் பொறுப்புக் கொடுத்தது அன்று ஜனநாயகமாகத் தெரிந்தது. கூட்டணியைத் தேர்ந்தெடுக்க பொறுப்புக்கொடுத்தது ஜனநாயகமாகத் தெரிந்தது. தோல்விக்குப் பொறுப்பேற்கச் சொன்னால் ஜனநாயகம் இல்லை. நாடோடிகள் ஓரிடத்தில் தங்க மாட்டார்கள். சிலர் சென்ற வழியே வருவார்கள் ஆனால் மீண்டும் கட்சியை அசுத்தப்படுத்தவிட மாட்டோம். கட்சியை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்துக்கேற்ப மாற்றி ஆடியது இனி நடக்காது. உறுமாறிய மக்கள் நீதி மய்யத்தைக் காண்பார்கள். பயணம் தொடரும். உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் உள்ளவரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்"
கமல்ஹாசன்

இப்படி, நேற்று ட்விட்டரில் வெளியான வீடியோவில் பொரிந்து தள்ளியிருக்கிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கட்சியில் இருந்து கழன்று கொள்வதோடு மட்டுமில்லாமல், கட்சியில் ஜனநாயகம் இல்லை, கமல்ஹாசன் சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க, கமலும் தன் பங்குக்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.

மகேந்திரன், கமல் பொன்ராஜ் - மக்கள் நீதி மய்யம்
மகேந்திரன், கமல் பொன்ராஜ் - மக்கள் நீதி மய்யம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவது புதிதல்ல. கட்சியின் தொடக்கவிழா நிகழ்ச்சியை நெறிப்படுத்திய எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கடந்த டிசம்பரில் பா.ஜ.க-வில் இணைந்த அருணாசலம், தேர்தலுக்கு முன்பாக விலகிய, கட்சியின் பொதுச்செயலாளரும் கமலின் நண்பருமான கமீலா நாசர், தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு விலகிய அந்தக் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், சமீபத்தில் விலகிய தலைமை அலுவலகச் செயலாளரும், விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு, சுற்றுப்புறச்சூழல் அணியின் பொறுப்பாளர் பத்மப்ரியா எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவர்கள் மட்டுமல்ல, கடைசியாக விலகிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல்கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியிலிருந்து விலகி மீண்டும் இணைந்தவர்தான். எனில் எங்கே தவறு நடக்கிறது, கட்சிக்குள் என்னென்ன விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவெளியிலும் தன் திரைப்படங்களிலும் ஜனநாயகம் குறித்துப் பாடம் எடுக்கும் கமல்ஹாசன் தன் கட்சியில் அதைக் கடைபிடிக்கவில்லை என்கிற விமர்சனங்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே எழுந்தன. அதனால், தோற்றுப் போய்விட்டதால் விலகிப் போய்விட்டார்கள், நிகழ்ந்துவிட்ட தவறுகளைக் கொட்ட குழி தேடுவதற்காக ஜனநாயகம் இல்லை என குறை சொல்கிறார்கள் என கமல் சொல்வதையெல்லாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், தேர்தலுக்கு முன்பாகவே பலர் கட்சியிருந்து விலகியிருக்கிறார்கள். தற்போது விலகியவர்கள்கூட, தேர்தல் வரைக்கும் பொறுமை காத்தோம் என்றே விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

திரையுலகைப் பொறுத்தவரை கமல் சகலகலா வல்லவனாக இருக்கலாம். அவரின் திறமையையும் அனுபவத்தையும் பொறுத்து, அனைவருமே அவரிடம் அடங்கிப் போகலாம். ஆனால், அரசியல் களம் என்பது அப்படியானதல்ல. கட்சிக்குள் ஜனநாயகம் என்பது மிகமுக்கியமானது. தான் எடுக்கும் முடிவைச் செயல்படுத்த மட்டும் நிர்வாகிகள் போதும் என்கிற நினைப்பை அவர் இன்றோடு மறந்துவிடவேண்டும். மேடையில் அவருக்கு மட்டுமே இருக்கை மற்றவர்கள் நிற்கும் பழக்கத்தை அவரே ஏற்படுத்தியிருந்தாலும் அடுத்தவர் வழிகாட்டுதலில் செய்திருந்தாலும் அதை, இதோடு கைவிட வேண்டும்.

`உருமாறிய' ம.நீ.ம-வுக்கு கமல்ஹாசன் எந்த வகை `தடுப்பூசி' செலுத்துவது உகந்தது? - ஒரு ரிப்போர்ட்!

அடுத்ததாக, `திறமை அடிப்படையில் வந்த சில நாட்களிலேயே பெரும் பொறுப்பு கொடுத்தது அன்று ஜனநாயகமாகத் தெரிந்தது' என மகேந்திரன், சந்தோஷ் பாபு, பத்மபிரியா உள்ளிட்டவர்களைச் சாடியிருக்கிறார் கமல். இது உண்மைதான். மகேந்திரன் கட்சியில் சேரும்போதே துணைத்தலைவராகத்தான் சேர்ந்தார். சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிவிட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக பத்மப்ரியாவுக்கு மாநிலப் பொறுப்பு அளிக்கப்பட்டது. அரசுப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு அளித்து வந்த, ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு தலைமை அலுவலக செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால், வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது மட்டுமே இதற்கான காரணமல்ல. அறிவாளிகளை, மிகப்பெரிய தொழிலதிபர்களை, சோஷியல் மீடியா செலிபிரிட்டிகளை, திரைப்பிரபலங்களை என ஓரளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் மட்டுமே தனக்கு இணையானவர்கள், கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிக்கத் தகுதியானவர்கள் என்கிற கமலின் மேட்டிமைச் சிந்தனையே இந்த நியமனங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம்.

இனிவரும் காலங்களிலாவது கமல் இந்த அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தன்னுடன் பல்லாண்டுகாலம் பயணித்தவர்களை, மன்ற செயல்பாடுகளில் திறம்படச் செயல்பட்டவர்களை, கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்களை தன் அருகில் வைத்துக்கொள்ள, கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்க முன்வரவேண்டும். அடுத்ததாக கட்சியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கவேண்டும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டிருந்தால் அது சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் கை கொடுத்திருக்கும். ஆனால், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்தது பெரும்பிழை. இனிவரும் காலங்களிலாவது இது போன்ற தவறுகளைக் கமல்ஹாசன் தவிர்க்கவேண்டும். அடுத்து கமல்ஹாசன் மிக முக்கியமாகச் செய்யவேண்டியது கட்சி தொடங்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆன பின்பும் இதுவரை கட்சிக்கென இதுதான் கொள்கை என வகுக்கப்படவில்லை. மக்கள் நீதி மய்யம் முன்வைக்கும் சென்ட்ரிசம் என்பது எந்தவொரு விஷயத்தையும் அணுகும் முறைதான், தவிரே கொள்கை அல்ல.

தமிழகத்தில் திராவிட, கம்யூனிஸக் கட்சிகளின் கொள்கைளோடு பெரும்பாலும் ஒத்துப் போகக்கூடிய கருத்துகளையே கமல்ஹாசன் இதுவரை பொதுவெளியில் பேசி வந்திருக்கிறார். ஆனால், அதையே கட்சியின் கொள்கை ஆவணமாக மாற்றுவதில் அவருக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. கொள்கை இல்லாமல் ஒரு கட்சி இயங்கும்போது இதுபோன்ற பல பின்னடைவுகளைச் சந்தித்தே ஆகவேண்டியதிருக்கும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், கடந்த கடந்த ஓராண்டுகளாகவே, 'கட்சியின் நிர்வாகிகளை மதிப்பதில்லை; தலைவருடன் நிர்வாகிகளை நெருங்க விடுவதில்லை; மண்டல நிர்வாகிகள் கூட்டம் என பணத்தை வீணடிக்கிறார்கள்; அரசியலின் அரிச்சுவடியே தெரியாமல் ஆலோசனை என்கிற பெயரில் நேரத்தை வீணடிக்கிறார்கள் என சங்கையா சொல்யூசன்ஸ் மீது அவ்வப்போது புகைச்சல்கள் எழுந்துகொண்டேதான் இருந்தது. அதைக் கட்சியின் தலைவர் கமலின் காதுகளுக்கும் பல முன்னணி நிர்வாகிகள் கொண்டு சென்றனர். ஆனால், கமல் அதைக் கண்டும் காணாமல் இருந்தாரா இல்லை பிறகு கண்டிப்போம் என்றிருந்தாரா தெரியவில்லை. கமலின் தாமதமே தற்போது பல முன்னணி நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு விலகுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. 'கட்சியை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்துக்கேற்ப மாற்றி ஆடியது இனி நடக்காது' எனக் கமல் வீடியோவில் பேசியதே சங்கையா சொல்யூசன்ஸ் குறித்துதான், அதனால் இனிமேல் அவரின் அணுகுமுறையில் பல மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

உலகளாவிய, நவீன தொழிநுட்பங்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவ்வப்போது மண் சார்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனதில் இன்றும் மிகச்சிறந்த நடிகன் எனப் பெயர் பெற்றிருப்பதைப் போல, கட்சி நிர்வாகத்தையும் கம்பெனி நடத்துவது போலில்லாமல் இந்த மண்ணுக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தால், நிச்சயமாக இனிவரும் காலங்களில் கமல் வெற்றிவாகை சூடலாம்.