Published:Updated:

அன்புமணி... அமைச்சரவை... எதிர்காலத் திட்டம் - பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது பேசப்பட்டது என்ன?

அன்புமணி - மோடி

அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அரசியல்ரீதியாவும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அன்புமணி... அமைச்சரவை... எதிர்காலத் திட்டம் - பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது பேசப்பட்டது என்ன?

அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அரசியல்ரீதியாவும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
அன்புமணி - மோடி

பாமக-வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், அன்புமணிக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அரசியல்ரீதியாவும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி
அன்புமணி ராமதாஸ் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவேற்காட்டில் கடந்த மே 28-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாமக-வின் இளைஞரணித் தலைவர் பொறுப்பு வகித்தவந்த அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து 25 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியை அலங்கரித்துவந்த ஜி.கே.மணி கட்சியின் கௌரவத் தலைவராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டவர்களை அன்புமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து டெல்லிக்குச் சென்ற அன்புமணி, பிரதமர் மோடியைச் சந்தித்து 20 நிமிடங்களுக்கும் அதிகமாகப் பேசியதாகச் செய்திகள் வெளியாகின. பிரதமர் மோடியுடனான இந்தச் சந்திப்பு குறித்து, பாமக வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``தமிழ்நாட்டின் நலனுக்காக காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் பிரதமரிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கோரினார். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; ஆணையத்தில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்தார். அவற்றை கனிவுடன் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தார்கள்'' எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அரசியல்ரீதியான உரையாடல்களைத் தாண்டி பல்வேறு விஷயங்கள் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

 அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இது குறித்து டெல்லி வட்டாரத்தில் பேசினோம்.

``அன்புமணி ராமதாஸைப் பார்த்ததுமே அவரின் அப்பா மருத்துவர் ராமதாஸ் குறித்துத்தான் பிரதமர் முதலில் விசாரித்தார். வாய்ப்பிருந்தால் அடுத்த முறை அவரை டெல்லிக்கு அழைத்து வரவும் கேட்டுக்கொண்டார். அதற்கு அன்புமணி மருத்துவர் ராமதாஸின் உடல்நிலையைக் காரணம் காட்டி முயல்கிறேன் எனச் சொல்லவும், `அடுத்த முறை தமிழ்நாட்டுக்கு வந்தால் நிச்சயமாக உங்கள் தந்தையைச் சந்திக்கிறேன். உங்கள் தந்தையைக் கேட்டதாகச் சொல்லுங்கள்’ என பிரதமர் சொன்னதும் நெகிழ்ந்துபோய்விட்டார் அன்புமணி. `நீங்கள் முன்பே தலைவராகியிருக்கலாம்’ என்று சொன்னதோடு அன்புமணிக்கு சில அறிவுரைகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.

`ஏற்கெனவே மத்திய அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறீர்கள், எம்.பி-யாக இருக்கிறீர்கள். தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இளம் தலைவர்களில் நல்ல எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது. வளர்ச்சியை நோக்கிய பிரசாரத்தைத் தீவிரமாக முன்னெடுங்கள். அடுத்த முறை முடிந்தால் அமைச்சரவையிலும் எங்களோடு இணைந்து பணியாற்றுங்கள். அது உங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரைக் கொடுக்கும்’ எனச் சொன்னதோடு, `எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு’ எனவும் சொல்லியிருக்கிறார். அன்புமணியும் அதை ஏற்றுக்கொள்ளும்விதமாக நன்றி சொல்லியிருக்கிறார்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism