Published:Updated:

'12 மணி நேரமா பால் காய்ச்சினார்..?' - அ.தி.மு.க-விலிருந்து புகழேந்தி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

புகழேந்தி

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கூட்டத்துக்கு அனுமதி இருந்தபோதும், ஒரு மணி அளவில் தலைமை அலுவலகத்துக்கு கம்பீரமாக வந்த புகழேந்தி, பத்திரிகையாளர்களிடம் சிரித்துப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

'12 மணி நேரமா பால் காய்ச்சினார்..?' - அ.தி.மு.க-விலிருந்து புகழேந்தி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கூட்டத்துக்கு அனுமதி இருந்தபோதும், ஒரு மணி அளவில் தலைமை அலுவலகத்துக்கு கம்பீரமாக வந்த புகழேந்தி, பத்திரிகையாளர்களிடம் சிரித்துப் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

Published:Updated:
புகழேந்தி
அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான புகழேந்தி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு மேலும் 15 பேர் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் வருகிற 21-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் தொடங்கவிருக்கிறது. அ.தி.மு.க-வின் சார்பில் சட்டமன்றக் குழுத் தலைவர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டபோதும், து.தலைவர், கொறடா ஆகிய பொறுப்புகளுக்கு யாரும் தேர்வு செய்யப்படாமலேயே இருந்தனர். இந்தநிலையில் நேற்று, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மதியம் 12:15 மணிக்குத் தொடங்கி 3 மணி வரைக்கும் நடந்தது. கூட்டத்தின் முடிவில், அ.தி.மு.க சட்டமன்றத் துணைத் தலைவராக, ஓ.பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணைக் கொறடாவாக அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜூ, செயலாளராக கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சசிகலா
சசிகலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது ஒருபுறமிருக்க, சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிவர்களைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, `'கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும்விதத்தில் செயல்பட்டதாலும் கழகச் செய்தித் தொடர்பாளர் வ.புகழேந்தி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்படுகிறார்'' என்கிற அறிவிப்பும் கூட்டம் முடியும்போதே வெளியானது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கூட்டத்துக்கு அனுமதி இருந்தபோதும், 1 மணி அளவில் தலைமை அலுவலகத்துக்குப் புகழேந்தி வந்திருந்தார். அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் சிரித்துப் பேசிவிட்டு வெளியில் காத்திருந்தார். இந்தநிலையில், இப்படியோர் அறிவிப்பு வெளியாகும் என புகழேந்தியே எதிர்பார்க்கவில்லை.

ஏன் இந்த திடீர் முடிவு?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

``சசிகலா சிறையிலிருந்து வெளிவந்த நாள் முதலாகவே அவரை ஆதரிக்கும்விதமாகத் தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் பேசிவந்தார். அதேபோல, தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாகவே, கட்சியின் சீனியர் தலைவர்களே அமைதியாக இருந்தபோதும், இவர் ஓ.பி.எஸ்-தான் எதிர்க்கட்சித் தலைவராக வர வேண்டும் என்றார். அதோடு விட்டிருந்தாலும்கூட பரவாயில்லை. எடப்பாடி பழனிசாமி எடுத்த பல்வேறு தவறான முடிவுகளால்தான், அ.தி.மு.க தேர்தலில் தோற்றது எனப் பத்திரிகையில் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்துவந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

தொலைக்காட்சி விவாதங்களில் பேசும்போது கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டார். கடந்த சில நாள்களுக்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி, சென்னை மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், ஓ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை. இது ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதமானது. ஓ.பி,.எஸ்-ஸுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தராததால்தான் தன் எதிர்ப்பைக் காட்டுகிறார் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், வீடு கிரகப்பிரவேசம் காரணமாகத்தான் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனச் செய்தியாளர்களிடம் இ.பி.எஸ் விளக்கம் தந்தார். அதோடு அந்தப் பிரச்னை முடிந்துவிட்டது. ஆனால், இது தொடர்பாக நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், '12 மணி நேரமா ஓ.பி.எஸ் பால் காய்ச்சினார், கட்சித் தலைமையின் மீதான அதிருப்தியால்தான் அவர் கலந்துகொள்ளவில்லை' என உட்கட்சி விவகாரத்தைத் தொலைக்காட்சி விவாதத்தில் பேசினார்.

சசிகலா குறித்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த ஒரு கருத்துக்கு, '200 கி.மீட்டர் ஸ்பீடில் சண்முகம் பேசுகிறார். அவர் இவ்வளவு வேகமாகப் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது?' என்றும் புகழேந்தி பேசினார். சசிகலாவுக்கு எதிராக, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி இப்படி யார் பேசினாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாகவே புகழேந்தி பேசிவந்தார். அமைச்சர்கள் யாருமே தனிப்பட்ட முறையில் பேசவில்லை. எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல் யாரும் பேசியிருக்க வாய்ப்பே இல்லை. நிலைமை அப்படியிருக்க, இவரை யார் அவர்களுக்கு எதிராகவெல்லாம் பேசச் சொன்னது...

அன்புமணி
அன்புமணி

சொந்தக் கட்சியினரை மட்டுமல்ல, 'பா.ம.க-வால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அ.தி.மு.க வெற்றிபெற்ற தொகுதிகளில் பா.ம.க-வுக்கு எந்தவிதமான வேலையும் இல்லை. பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால்தான் அன்புமணி இன்று ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கிறார்' எனச் செய்தியாளர்களிடம் இவரை யார் பேசச் சொன்னது... பா.ம.கவிலிருந்து எங்கள் தலைமைக்கு அழைத்துக் கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். எந்தவிதத்திலும் எங்கள் கட்சிக்குப் பயனுள்ள வகையில் அவர் நடந்துகொள்ளவில்லை. ஓ.பி.எஸ் ஆதரவாளர்போல் தன்னைக் காட்டிக்கொண்டு, கட்சியில் அவர் செய்தது எல்லாம் குட்டிக் கலகம்தான். அதுமட்டுமல்லாமல், சசிகலா ஆதரவாளர்கள், தி.மு.க-வினர் உடனெல்லாம் அவர் தொடர்பில் இருந்தார். அந்த ஆதாரங்களையெல்லாம் எடப்பாடி, ஓ.பி.எஸ்-ஸிடம் காண்பித்த பிறகுதான் கட்சியிலிருந்து அவரை நீக்கும் முடிவுக்கு அவர் கையெழுத்துப் போட்டார்'' என்றார் அவர்.

இந்த நீக்கம் குறித்துப் பேசிய புகழேந்தி, ''அகம்பாவம், ஆணவப்போக்கு, திமிர் அனைத்தையும் இடி அமீன் மாதிரி ஆட்களிடம் பார்த்துள்ளோம். இதைத் தொடர்ந்து என் அன்புக்குரிய பழைய நண்பர் எடப்பாடி பழனிசாமியிடம் பார்க்கிறேன். ஆகவே இந்தக் கட்சியை அவர் கையில் வைத்து அனைவரையும் அடிமையாக வழிநடத்த நினைக்கிறார். ஜெயலலிதா வளர்த்த இவ்வளவு பெரிய கட்சியை அசிங்கப்படுத்தும்விதமாகப் பேசியதைக் கண்டித்து எனது கருத்துகளைச் சொன்னேன். ஊடகங்களைச் சந்தித்து பல விஷயங்களை வெளியே கொண்டு வருவேன். பார்ப்போம் பழனிசாமி... உங்களுக்கும் எனக்கும் என்ன என்பதைப் பார்ப்போம்'' என மிகக் காட்டமாகப் பேசினார்