Published:Updated:

கள்ளத் துப்பாக்கிகளும் கலவர டெல்லியும்!

டெல்லி கலவரம்
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி கலவரம்

அந்தப் பகுதிகளுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

கள்ளத் துப்பாக்கிகளும் கலவர டெல்லியும்!

அந்தப் பகுதிகளுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

Published:Updated:
டெல்லி கலவரம்
பிரீமியம் ஸ்டோரி
டெல்லி கலவரம்

லகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, மதச்சார்பற்ற தேசம் என்ற பெருமைகளைக் கொண்ட இந்தியா, உலக அரங்கில் மீண்டும் ஒரு முறை அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறது.

“குஜராத்தில் நடந்திருப்பது வெட்ககரமான செயல். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இனி நான் வெளிநாடுகளுக்குச் செல்வேன்” என்று 2002-ம் ஆண்டு வேதனைப்பட்டார் அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராகவும் அமித் ஷா மாநில உள்துறை அமைச்சராகவும் இருந்தபோது, அங்கு மிகப்பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் கரசேவகர்கள் 60 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் வன்முறைகள் வெடித்தன. அதில், சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையோர் இஸ்லாமியர்கள். அதைத்தான் வெட்கத்துக்குரியது என்று வேதனைப்பட்டார் வாஜ்பாய்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

தற்போது நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷாவும் இருக்கும் நிலையில், தலைநகர் டெல்லியில் வேதனைமிக்க வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பா.ஜ.க தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அபய் வர்மா, அனுராக் தாகூர் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் ஆத்திரமூட்டும் வெறுப்புப் பேச்சுகளே இந்த வன்முறைக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனுராக் தாகூர் மத்திய நிதித்துறை இணை அமைச்சர், பர்வேஷ் வர்மா பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர், கபில் மிஸ்ரா பா.ஜ.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

“ஷாகீன் பாகில் போராட்டம் நடத்துபவர்கள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். அவர்களால் உங்கள் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும். அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்கள் தாய்மார்களையும், சகோதரிகளையும் வன்புணர்வு செய்துவிடுவார்கள். அவர்களைக் கொலை செய்யுங்கள்” என்று பேசினார் பர்வேஷ் வர்மா. “துரோகிகளைச் சுட்டுத்தள்ளுங்கள்” என்று பேசினார் அனுராக் தாக்கூர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

ஷாகீன் பாகில் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டம் நடந்துவரும் நிலையில், வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டம் பிப்ரவரி 21-ம் தேதி ஆரம்பித்தது. ஏராளமான பெண்கள் தேசியக்கொடிகளுடன் ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகில் சாலையில் போராட்டம் நடத்தினர். உடனே, “ஜாஃப்ராபாத், சந்த் பாஃப் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த டெல்லி காவல்துறைக்கு மூன்று நாள்கள் அவகாசம் அளிக்கிறோம். ட்ரம்ப் இந்தியாவில் இருக்கும் வரை அமைதி காப்போம். அதன் பிறகும் சாலைகள் திறக்கப்படவில்லையென்றால், போலீஸ் சொல்வதைக்கூடக் கேட்கமாட்டோம். நாங்களே சாலைகளில் இறங்கி அடித்துநொறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம்” என்று பேசினார் பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏவான கபில் மிஸ்ரா. அதைத் தொடர்ந்து அதே பகுதியில் சி.ஏ.ஏ ஆதரவுப்போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். பின்னர், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அது மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆயுதங்களுடன் வெறிகொண்டு கும்பலாகக் கிளம்பியவர்கள், இஸ்லாமியர்களை வேட்டையாடினர். இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்களை அடித்து நொறுக்கினர். வீடுகளையும் மசூதிகளையும் தீக்கிரையாக்கினர். இந்த வன்முறையாளர் களை டெல்லி போலீஸார் தடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அதேபோல, இன்னொரு கும்பல் ஆயுதங்களுடன் கிளம்பிச் சென்று இந்துக்களைத் தாக்கியது. வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகள் வன்முறைக் காடாக மாறின. இந்த மோதல்களில் பெருமளவிலான பொருட்சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

அந்தப் பகுதிகளுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். வன்முறைக் காட்சிகளை செல்போனில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த ஒரு செய்தியாளரைத் தாக்கிய ஒரு கும்பல், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொள்ள உள்ளாடையை அவிழ்த்துப் பார்த்த கொடூரச் செயலும் நடந்தேறியது. இத்தகைய சூழலில் அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

“டெல்லியின் வடகிழக்குப் பகுதி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் எல்லையில் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய கள்ளத்துப்பாக்கிச் சந்தை உள்ளது. குறிப்பாக, காசியாபாத், மீரட் ஆகிய இடங்களிலிருந்துதான் டெல்லிக்குக் கள்ளத்துப்பாக்கிகள் வருகின்றன. மூவாயிரம் ரூபாயில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வாங்கிவிடலாம். ரூ.15,000 - ரூ.25,000 விலையில் தரமான கைத்துப்பாக்கிகள் கிடைக்கின்றன. நவீன ரகக் கைத்துப்பாக்கிகள் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் டெல்லியில் கள்ளத்துப்பாக்கிகளின் புழக்கம் அதிகரித்துள்ளது” என்ற தகவல் கிடைத்தது.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

இந்தக் கள்ளத்துப்பாக்கிகள் போலீஸாரை நோக்கியும் பாய்ந்துள்ளன. தலைமைக் காவலரான ரத்தன் லால் கள்ளத்துப்பாக்கியால்தான் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு வன்முறையாளர் பிஸ்டலை நீட்டியபடி காவலர் ஒருவரை நோக்கி நெருங்கிய காட்சி நாடு முழுவதும் வைரலானது.

வன்முறை தொடர்பான வழக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் அமர்வு விசாரித்தது. அப்போது, “வெறுப்புப் பேச்சைப் பேசிய பா.ஜ.க தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் உள்ளிட்டோர்மீது ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவில்லை என்று நீதிபதி முரளிதர் கேள்வி எழுப்பினார். கபில் மிஸ்ரா பேசிய வீடியோவைப் பார்க்கவில்லை என்று போலீஸ் அதிகாரி சொன்னார். உடனே, நீதிமன்ற அறையிலேயே அந்த வீடியோவை அவர் களுக்குப் போட்டுக்காண்பித்த நீதிபதி முரளிதர், அந்த பா.ஜ.க தலைவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நாளை நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால், மறுநாள் விடிவதற்குள் இரவோடு இரவாக பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டார் நீதிபதி முரளிதர். ஏற்கெனவே, உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையின் படியே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்று அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது என்றாலும், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வளவு விவகாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க... பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மௌனம் காத்தனர். மூன்று நாள்களுக்குப் பிறகு மௌனம் கலைத்த பிரதமர், “அமைதியும் ஒற்றுமையும் நம் பண்பாட்டின் முக்கிய அம்சங்கள். அமைதியையும் சகோதரத்துவத்தையும் டெல்லியில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று ஒரு ட்வீட் தட்டினார்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டு மென்று முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எஸ்.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, டெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய டெல்லி போலீஸாருக்கும் மத்திய அரசுக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

‘ஸ்டாண்டு அப் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’, 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற வார்த்தைகள்கூட இப்போது மங்கலாகிவிட்டன. இப்போது சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி என்ற பிரச்னைக்குள் இந்தியா சிக்கிக்கிடக்கிறது. டெல்லி வன்முறையின்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றிப் புள்ளிவிவரத்தை தேசியப் புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ) வெளியிட்டது. அதில், கடந்த அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம், உற்பத்தித்துறையில் ஏற்பட்ட பின்னடைவே என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி பற்றியெல்லாம் மத்திய அரசு கவலை கொண்டதாகத் தெரியவில்லை. மக்கள் பிரச்னையைவிடப் பிரிவினைவாதமும், மத வெறுப்புப் பேச்சுகளும் அதிகரிப்பது நாட்டுக்கும் நமக்கும் நல்லதே அல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism