Published:Updated:

``பாஜக ஒரு கண்ணில் முகலாயர்களையும், மறு கண்ணில் பாகிஸ்தானையும் பார்க்கிறது!" - ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

``எங்களை வெளியேறச் சொல்லி எத்தனை கோஷங்கள் எழுப்பினாலும் பரவாயில்லை. இந்தியாவை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம். நாங்கள் இங்குதான் வாழ்வோம், இங்குதான் சாவோம்" - ஒவைசி

``பாஜக ஒரு கண்ணில் முகலாயர்களையும், மறு கண்ணில் பாகிஸ்தானையும் பார்க்கிறது!" - ஒவைசி

``எங்களை வெளியேறச் சொல்லி எத்தனை கோஷங்கள் எழுப்பினாலும் பரவாயில்லை. இந்தியாவை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம். நாங்கள் இங்குதான் வாழ்வோம், இங்குதான் சாவோம்" - ஒவைசி

Published:Updated:
அசாதுதீன் ஒவைசி

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமின் தலைவரான அசாதுதீன் ஒவைசி, தங்களை வெளியேறச்சொல்லி பா.ஜ.க என்ன கோஷங்கள் எழுப்பினாலும், தாங்கள் இங்குதான் வாழ்வோம் எனக் கூறியிருக்கிறார்.

நேற்றைய தினம் பொதுக்கூட்டம் ஒன்றில் ஒவைசி பேசியதை, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. அந்த வீடியோவில், ``நாட்டில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.102-க்கு விற்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இதற்கெல்லாம் மோடி அல்ல, அவுரங்கசீப்தான் காரணம்.

மோடி
மோடி

வேலையின்மைக்கு அக்பர்தான் பொறுப்பு. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.115 என விற்கப்படுகிறது. இதற்கு தாஜ் மஹாலைக் கட்டிய ஷாஜகான்தான் பொறுப்பு. அவர் தாஜ் மஹாலைக் கட்டவில்லையென்றால், இன்று பெட்ரோல் ரூ.40-க்கு விற்கப்படும். தாஜ் மஹால், செங்கோட்டையைக் கட்டியதன் மூலம் ஷாஜகான் தவறு செய்துவிட்டார் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் அந்தப் பணத்தை சேமித்துவைத்து, அதனை 2014-ல் மோடியிடம் கொடுத்திருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவைசி
ஒவைசி

இங்குள்ள ஒவ்வொரு பிரச்னைக்கும் முஸ்லிம்களும், முகலாயர்களும்தான் பொறுப்பு என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்தியாவை முகலாயர்கள் மட்டும்தான் ஆண்டார்களா? அசோகரும், சந்திரகுப்த மௌரியாரும் ஆளவில்லையா? ஆனால் பா.ஜ.க-வால் முகலாயர்களை மட்டுமே பார்க்க முடியும். ஏனென்றால், அவர்கள் ஒரு கண்ணில் முகலாயர்களையும், மற்றொரு கண்ணில் பாகிஸ்தானையும்தான் பார்க்கிறார்கள். எங்களின் அன்புக்குரிய நாடு இந்தியா. எங்களை வெளியேறச் சொல்லி எத்தனை கோஷங்கள் எழுப்பினாலும் பரவாயில்லை. இந்தியாவை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம். நாங்கள் இங்குதான் வாழ்வோம், இங்குதான் சாவோம்" என்று மத்திய அரசை விமர்சித்துப் பேசியிருந்தார்.