Published:Updated:

அதிமுக முக்கியப்புள்ளிகளின் திடீர் டெல்லி விசிட்; பின்னணி என்ன?

தம்பிதுரை - இன்பதுரை
News
தம்பிதுரை - இன்பதுரை

அ.தி.மு.க முக்கியப்புள்ளிகள் இருவர் டெல்லி சென்றிருப்பதாக நமக்கு அந்தக் கட்சி வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்தன. அவர்களின் டெல்லி விஜயம் குறித்த பின்னணியை விசாரித்தோம்.

சென்னையில் மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் தலைவரும், ஐ.எஃப்.எஸ் அதிகாரியுமான வெங்கடாசலம் கடந்த வியாழக்கிழமை (02.12.2021) அன்று பிற்பகல் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ``வெங்கடாசலம் தற்கொலையில் இதுவரை எந்தச் சந்தேகமும் இல்லை. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை, செல்போன் ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே எதையும் சொல்ல முடியும். லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பவில்லை, மிரட்டல் எதுவும் கொடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

ஆனால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அ.தி.மு.க தேர்தல் பிரிவு துணைச் செயலாளர், வழக்கறிஞர் இன்பதுரை, ``செப்டம்பர் மாதம் 2019-ம் ஆண்டு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக வெங்கடாசலத்தை அப்போதைய அ.தி.மு.க அரசு நியமித்தது. மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படும் ஒருவர் அந்தப் பதவியில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கலாம் என்பது உச்ச நீதிமன்ற விதி. அதன்படி 2021, செப்டம்பர் வரை பதவியில் நீடிக்க வேண்டும். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு வெங்கடாசலத்தைப் பதவி விலகச் சொன்னது. ஆனால், அதை அவர் ஏற்காததால் அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி அவர் வீட்டில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்தது. இப்படி ராஜினாமா செய்ய அரசுத் தரப்பில் கொடுத்த அழுத்தம், அதைத் தொடர்ந்து அவர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு போன்றவற்றால் ஏற்பட்ட மன அழுத்தத்தால்தான் வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்டார். இது கொலையா, தற்கொலையா என்பதை விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார். வெங்கடாசலத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் பா.ஜ.க தரப்பிலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தம்பிதுரை - இன்பதுரை அதிமுக
தம்பிதுரை - இன்பதுரை அதிமுக

வெங்கடாசலம் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும் அ.தி.மு.க தேர்தல் பிரிவு துணைச் செயலாளர், வழக்கறிஞர் இன்பதுரையும், டெல்லி சென்றிருப்பதாக நமக்கு அந்தக் கட்சி வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்தன. இருவரின் டெல்லி விஜயம் குறித்த பின்னணியை விசாரித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``தம்பிதுரையும் இன்பதுரையும் டெல்லி சென்றிருப்பது உண்மைதான். மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் மரணத்தில் ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க கேள்வி எழுப்பிவருகிறது. பதவியை ராஜினாமா செய்ய தி.மு.க அரசு நிர்ப்பந்தம் செய்தபோதும், அதைச் சட்டரீதியில் எதிர்கொள்ளவே முயற்சிகளை மேற்கொண்டார் வெங்கடாசலம். அதற்காக ஒரு அஃபிடவிட்டும் தயார் செய்திருந்தார். ராஜினாமா செய்யச் சொல்வது தொடர்பான வழக்கில் அவருக்கு இன்பதுரைதான் ஆலோசனை வழங்கிவந்தார். திடீரென அவர் தற்கொலை செய்துகொண்டதாக வந்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. அ.தி.மு.க நியமித்தவர் என்பதாலேயே அவருக்கு தி.மு.க தரப்பிலிருந்து அழுத்தங்கள் கொடுத்ததாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வழக்கு பதிவு செய்ததாகவும் தகவல்கள் வந்தன. மேலும், தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் சிலர் வெங்கடாசலத்தை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் வாங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, இது முழுக்க முழுக்க அரசின் அழுத்தத்தால் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே சி.பி.ஐ விசாரணை வேண்டும் என மத்திய அரசிடம் கடிதம் கொடுக்கவே சென்றிருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து இந்த வழக்கை இன்பதுரைதான் கவனித்துவருகிறார். எனவே, உள்துறை அமைச்சரிடம் இந்த விவகாரங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி பிரச்னையின் தீவிரத்தைக் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

எடப்பாடி - ஓபிஎஸ்
எடப்பாடி - ஓபிஎஸ்

வெங்கடாசலம் வழக்கோடு சேர்த்து, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், அந்த ஆணையையும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கவிருக்கிறார்கள்" என்றனர்.