Published:Updated:

ரூ.1,000 உரிமைத் தொகை; மக்கள் எதிர்பார்ப்பும், திமுக தரப்பு விளக்கமும்!

ஸ்டாலின்

இல்லத்தரசிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூ.1,000 உரிமைத் தொகைக் குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

ரூ.1,000 உரிமைத் தொகை; மக்கள் எதிர்பார்ப்பும், திமுக தரப்பு விளக்கமும்!

இல்லத்தரசிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூ.1,000 உரிமைத் தொகைக் குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

Published:Updated:
ஸ்டாலின்

``ஹோம் மேக்கர், ஹவுஸ் வொயிஃப் என்று சொல்லப்படும் இல்லத்தை ஆளும் பெண்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையினை அரசு கொடுக்க வேண்டும்" என்று முதன்முதலில் பேசியவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்று தேர்தல் அறிக்கையிலும் கமல் குறிப்பிட்டிருந்தார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதைத் தொடர்ந்து தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க., அதில் கமல் சொன்ன ஊக்கத்தொகை என்பதை உரிமைத் தொகை எனப் பெயரை மாற்றி, ரூ.1,000 என தொகையையும் நிர்ணயம் செய்து, தனது தேர்தல் அறிக்கையிலும் வெளியிட்டதாக பரவலாக பேசப்பட்டது. தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடும் முன்பே அ.தி.மு.க வெளியிட்டத் தேர்தல் அறிக்கையில் இதுபற்றிக் குறிப்பிடவில்லை. அதனால் அவசர அவசரமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதே உரிமைத் தொகையை ரூ.1,500 ஆக கொடுக்கப்படும் என்று அறிவித்தார் எடப்பாடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

கடந்தாண்டு தி.மு.க அரசு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ததால் அதில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. தற்போது முழுமையான பட்ஜெட்டை மார்ச் 18-ம் தேதி நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்தார். இதிலாவது இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது!

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம். ``திட்டமிட்டு திசைத் திருப்பியிருக்கிறது தி.மு.க அரசு. தாலிக்குத் தங்கம் என்ற திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கான ஃபண்டை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்குக் கொடுக்கப்படும் என்று அறிவித்தத் திட்டத்துக்கு மடை மாற்றியிருக்கிறார்கள். மகளிருக்கான உரிமைத் தொகை என்கிறபோது, மாணவிகளும் மகளிரதானே என்ற தோற்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்
முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்

உரிமைத் தொகை விவகாரத்தில் தகுதியானவர்களைத் தேடி வருகிறோம் என்கிறார் நிதியமைச்சர். ரேஷன் அட்டைதாரர்களின் அத்தனை டேட்டாக்களும் அரசிடம் உள்ளது. இதுவரைத் தகுதியானவர்களைத் தேர்வு செய்திருக்கலாம். மக்களை ஏமாற்ற இதுபோன்றக் காரணங்களைக் கூறிவருகிறார்கள். 5 லட்சம் கோடி கடன் சுமை என முன்பு கூக்குரலிட்டார்கள், தற்போது மேற்கொண்டு 92,000 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறது அரசு. இவ்வளவு கடன் இருப்பது முன்னரே தெரிந்திருந்தும் ஏன் உரிமைத் தொகைப் பற்றி அறிவிக்க வேண்டும்? இருக்கும் கடன் சுமையில் செய்ய முடியாது என்பது முன்பே தெரியாதா என்ன? மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துவிட்டு, இப்போது சாக்குபோக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது தி.மு.க. மக்கள் மத்தியில் தி.மு.க அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக அதிருப்தி பரவிக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது!” என்றார்.

தி.மு.க இணை செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நம்மிடம் இதுகுறித்து பேசினார். ``இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகையை, மாணவிகளுக்கான தொகையாக மடை மாற்றவில்லை. உரிமைத் தொகைக்கான டேட்டாக்களை எடுத்துக்கொண்டிருக்கிறோம்; அடையாளம் காணப்பட வேண்டியவர்களை அடையாளம் கண்டுவருகிறோம்; அந்த டேட்டா தயாராகும்போது, நிதி நிலைமையும் ஓரளவுக்குச் சீராகிவிடும்; அத்திட்டம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிதியமைச்சர் சட்டமன்றத்திலேயே தெளிவாகச் சொல்லிவிட்டாரே!

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

முதல் பட்ஜெட்டில் எல்லாவற்றையும் எப்படிச் செயல்படுத்த முடியும்? 1952-ல் இருந்து இப்போது வரை, மாவீரர் மோடி ஆட்சியிலும் சரி யாராவது முதல் பட்ஜெட்டிலேயே அத்தனைத் திட்டங்களையும் அமல்படுத்தி இருக்கிறார்களா? ஒருவரைச் சொல்ல முடியுமா? அப்படி ஒருத்தர் இருந்தால் நாங்களும் கற்றுக்கொள்கிறோமே. 10 வருடங்களாகியும் 15 லட்சம் ரூபாய் கொடுக்காத அரசையெல்லாம் ஒன்றியத்தில் பார்க்கிறோம். மூன்றே கால் லட்ச ரூபாய்க்கு அறிவிப்புகளை அறிவித்துவிட்டு, 80,000 ரூபாய்க்கு ஆணையைப் போட்டுவிட்டுப்போன இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆட்சியையும் பார்த்திருக்கிறோம். அதனால், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் முதல் பட்ஜெட்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்பதை எதிர்பார்க்க முடியாது. மக்களுக்கு எங்கள் நிலை நன்றாகத் தெரியும், தொடர்ந்து எல்லாத் தேர்தல்களிலும் எங்களை ஆதரித்தவர்கள் இந்த விஷயத்திலும் ஆதரிப்பார்கள்” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism