Published:Updated:

ஜெயலலிதா மரண வழக்கு: அப்போலோ மருத்துவமனையின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம், சாட்சிகளிடம் மருத்துவமனை நிர்வாகம் குறுக்கு விசாரணை நடத்த ஏதுவாக, அதற்குரிய ஆவணங்களை வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆணையத்தில் கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டுமென அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், `ஆணையத்தில் வேறு சில நீதிபதிகளை நியமித்தால், அதன் செயல்பாடுகள் பாதிக்கும்' என்றும் கூறியிருக்கிறது. இந்தச் சூழலில், `ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் செல்கிறதா?' என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக, தமிழக அமைச்சர் ஒருவரிடம் பேசினோம்.

 ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

``ஆணையத்தின் விசாரணை சரியான திசையில்தான் பயணிக்கிறது. ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், தமிழக அரசு எந்த நகர்வையும் செய்யவில்லை. சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, 'ஜெயலலிதா மரணத்தில் புதைந்திருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வருவோம்' என்று ஸ்டாலின் பேசினார். அதன்படிதான், தற்போது தமிழக அரசு செயல்படுகிறது. எந்தவகையிலும், ஆணையத்தின் விசாரணைக்கு குறுக்கீடு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90% நிறைவு! - ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை எப்போது?

மூன்று வருடங்களைத் தாண்டி நீண்டுகொண்டிருக்கும் இந்த ஆணையத்தின் விசாரணை விரைவிலேயே முடிவடைந்து மக்கள் மன்றத்தில் உண்மை நிலவரம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்பதில் முதல்வர் தீவிரமாக இருக்கிறார். ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத் தடையை விலக்குவதற்கான சட்ட நடைமுறைகள் தீவிரமாகியிருக்கின்றன. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் விரைவிலேயே சமர்ப்பிக்கப்பட்டு, அதன்மீது விவாதம் நடைபெறும். அதன் முடிவில், சட்டப்படி நடவடிக்கை ஏதும் தேவைப்பட்டால் அது எடுக்கப்படும்" என்றார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்திருக்கும் உச்ச நீதிமன்றம், சாட்சிகளிடம் மருத்துவமனை நிர்வாகம் குறுக்கு விசாரணை நடத்த ஏதுவாக, அதற்குரிய ஆவணங்களை வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு