Election bannerElection banner
Published:Updated:

`தீப்பொறி பேச்சாளர்களின் கூடாரமாக இருந்த தி.மு.க..!' - ஒரு வாசகரின் பகிர்வு #MyVikatan

தி.மு.க
தி.மு.க

தீப்பொறி பேச்சாளர்களின் கூடாரமாக இருந்த தி.மு.க, இன்றைக்கு 'கொள்கைப் பிடிப்பில்லாதவர்களின் ' புகலிடமாக மாறிக் கொண்டு இருக்கிறது. இதே பாதையில் சென்றால் முடிவு என்ன என்பதை எல்லோரும் அறிவர். இதை ஸ்டாலின் மற்றும் ஏனையத் தலைவர்கள் உணர்வார்களா?

-எஸ்ரா பிரின்ஸ்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கலைஞர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தி.மு.க-வை அமைப்பு ரீதியாகக் கட்டமைத்து, முதலில் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்ததில் கலைஞரின் பங்கு முக்கியமானது. தமிழக அரசியல் வரலாறு சரிவரத் தெரியாதவர்கள் "எம்.ஜி.ஆர் அவர்களால் தான் கலைஞர் முதல்வர் ஆனார்" என்ற கட்டுக்கதையை இன்றும் ஒப்பிப்பர். உண்மையில் நாவலர் நெடுஞ்செழியனைக் காட்டிலும் கலைஞருக்குக் கட்சியில் செல்வாக்கு அதிகம் இருந்தது. இதை கண்டுகொண்டே எம்.ஜி.ஆர், கலைஞர் பக்கம் சாய்ந்தார்.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

இப்படி தி.மு.க-வை கட்டமைப்பதற்காக உழைத்து, தலைவராகக் கட்சியைப் பட்டுப் போகாமல் பாதுகாக்க அயராது முயன்று வெற்றி கண்டவர் கலைஞர். அதனால் அவருக்குக் கட்சியின் அருமையும், அதைக் குறித்த ஈடுபாடும், கரிசனையும் மிக அதிகம். தனது தனிப்பட்ட 'மனம் திறந்த' உரையாடல்களில் தனக்குப் பின் தன் 'கட்சியின் நிலைமை' என்ன ஆகுமோ என்று மிகவும் அங்கலாய்த்து இருக்கிறார். உண்மையில் அவர் வருந்தியது போலவே தான் இன்று தி.மு.க பயணிக்கும் பாதை, நிலைமை இருக்கிறது. ஏன் அப்படிச் சொல்கிறேன்?

1 . இந்த வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு ஸ்டாலின் சொன்ன "அரசியல் முதிர்ச்சியற்ற" பதிலைக் கேட்ட பொழுது, கலைஞரை நினையாமல் இருக்க முடியவில்லை. காரணம் , இவ்வாறு அவரது பதிலிருந்து இருக்கும் - "அம்மையார் ஜெயலலிதா அவர்கள் எப்படிப் பல விஷயங்களைத் தீர ஆராயாமல் செய்வாரோ , அதையே அவரின் விழுது பழனிசாமி அவர்களும் செய்து இருக்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்தால், இந்த உள்ஒதுக்கீடு குறித்துத் தீர ஆராய்ந்து, நீதிமன்றத்தால் அசைக்க முடியாத சட்டம் இயற்றப் படும் (நாங்கள் நுழைவுத் தேர்வை ரத்து செய்தது போல). அந்த சட்டம் வன்னியர்களுக்கு மாத்திரம் அல்ல, பின் தங்கி உள்ள அனைத்து சமூகங்களுக்கும் உதவும் வகையில் இருக்கும்". இப்படிப் பட்ட முதிர்ச்சியான அணுகுமுறை ஸ்டாலின் இடமும் , அவரின் மகன் மற்றும் மருமகன் இடமும் சுத்தமாக இல்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

2 . தி.மு.க-வில் இடை நிலை சமூகங்களைச் சேர்ந்த பல தலைவர்கள், வெளிப்படையாக தங்கள் "ஜாதிய பெருமையை" பிதற்றுகின்றனர். இதைக் கலைஞர் இருக்கும் பொழுது செய்ய அவர்களுக்குத் துணிவு இருக்காது. காரணம் பட்டாசாய் வெடித்து, பிதற்றலை அடக்கி வைத்து இருப்பார் மனிதர்.

3 . கலைஞர் அவர்கள் மேல் மட்ட மற்றும் இடை மட்ட தலைவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிப்பார். அவரிடம் அவர்கள் நேரடியாகச் சென்று தங்களின் 'எதிர்மறை எண்ணங்களை' கூட வெளிப்படுத்தலாம். ஆனால் கலைஞரின் வாரிசுகளிடம் இதே சுதந்திரம் இருக்கிறதா என்பது சந்தேகமே. அவர்களும் கலைஞர் அளித்த மரியாதையை , சக கட்சியினரிடம் நிச்சயம் தருகிறார்களா என்பதும் கேள்விக்குறியே . இந்த சூழ்நிலைக்குக் காரணம், அவரின் வாரிசுகளுக்கு அவர் அளவுக்குக் கட்சியின் அருமை தெரியவில்லை. மீண்டும் காரணம், அவர் அளவுக்கு அவர்கள் கட்சிக்காக உழைத்த அனுபவம் நிச்சயம் இல்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
வி.ஶ்ரீனிவாசுலு

இப்படி நிச்சயம் பல காரியங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தீப்பொறி பேச்சாளர்களின் கூடாரமாக இருந்த தி.மு.க, இன்றைக்கு 'கொள்கைப் பிடிப்பில்லாதவர்களின் ' புகலிடமாக மாறிக் கொண்டு இருக்கிறது. இதே பாதையில் சென்றால் முடிவு என்ன என்பதை எல்லோரும் அறிவர். இதை ஸ்டாலின் மற்றும் ஏனைய தலைவர்கள் உணர்வார்களா?

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

`தீப்பொறி பேச்சாளர்களின் கூடாரமாக இருந்த தி.மு.க..!' - ஒரு வாசகரின் பகிர்வு #MyVikatan

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு