Published:Updated:

கமலின் மூன்றாவது அணியில் இடம்பெறும் கட்சிகள் எவையெவை..?! - தேர்தல் அப்டேட்

கமல்
கமல்

ம.நீ.ம தலைமையில் அமையவிருக்கும் மூன்றாவது அணியில் இடம்பெறப்போகும் கட்சிகள் எவையெவை எனத் தெரிந்துகொள்ள அதன் முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்...

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தமிழக முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

கமல் பரப்புரை
கமல் பரப்புரை

ம.நீ.ம தலைமையில் அமையவிருக்கும் மூன்றாவது அணியில் இடம்பெறப்போகும் கட்சிகள் எவையெவை எனத் தெரிந்துகொள்ள அதன் முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்...

ரஜினி வீட்டில் கமல்... மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு கேட்டாரா?!

``தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கும் அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி வந்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிவந்த பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, பா.ம.க கட்சியிலிருந்து விலகிய ராஜேஸ்வரி பிரியா தொடங்கிய அனைத்து மக்கள் அரசியல் கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. இவை தவிர காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதால் இன்னும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு உறுதியாகத் தெரியவில்லை.

கமல்
கமல்

இவர்கள் தவிர அர்ஜுனமூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல சின்னச் சின்னக் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் அ.தி.மு.க - தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டணி தவிர மூன்றாவது அணி அமைவது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தக் கூட்டணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் வெற்றியைப் பல இடங்களில் தீர்மானிக்கிறது. அப்படித்தான் தே.மு.தி.க - ம.தி.மு.க - வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமையில் அமைந்த மக்கள் நலக் கூட்டணி கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகளை தீர்மானித்து.

பிரசாரத்தில் கமல்
பிரசாரத்தில் கமல்

மக்கள் நீதி மய்யம் தலைமையில் அமையும் மூன்றாவது அணி எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் தெரியவரும்!

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

கமலின் மூன்றாவது அணியில் இடம்பெறும் கட்சிகள் எவையெவை..?! - தேர்தல் அப்டேட்

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

அடுத்த கட்டுரைக்கு