Election bannerElection banner
Published:Updated:

குமரி: பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் எவையெவை... யாருக்கு சீட்?

பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன்
பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன்

கடந்த சட்டசபைத் தேர்தலில் தனியாக நின்ற பா.ஜ.க., கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்துக்காக வருகிறார். இந்தநிலையில், நேற்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் திடீரென குளச்சல் தொகுதி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர் நாளை நாகர்கோவிலுக்கு வருகைதரும் மத்திய அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குளச்சல் சட்டமன்றத் தொகுதி பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ், ``மாநிலத் தலைவர் வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் திடீரென அழைத்து நாளை குளச்சல் சட்டமன்றத் தொகுதி பூத் பொறுப்பாளர்களைச் சந்திக்க வேண்டும் எனக் கூறினார். அவர் அவசரமாகச் சந்திக்கிறார் என்றாலே ஓர் அர்த்தம் இருக்கு... அப்படித்தானே... எனவே, குளச்சல் சட்டசபைத் தொகுதி நமக்குத்தான். சந்தேகமே வேண்டாம்" என்றார்.

பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் எல்.முருகன்
பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் எல்.முருகன்

கடந்த சட்டசபைத் தேர்தலில் தனியாக நின்ற பா.ஜ.க கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க இரண்டாம் இடத்தைப் பிடித்தது. எனவே, இந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை பா.ஜ.க கேட்டதாகவும். கன்னியாகுமரி நாடாளுமன்ற த்தொகுதி பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படுவதால், இரண்டு தொகுதிகள் உறுதியாக கிடைக்கும் என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். அதில் குளச்சல் தொகுதி உறுதியாக கிடைக்கும் என்றும், நாகர்கோவில் அல்லது விளவங்கோடு தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

கிள்ளியூர் தொகுதி, கூட்டணிக் கட்சியான த.மா.க-வுக்கு ஒதுக்கப்படவிருப்பதாகவும், மற்ற மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடவிருப்பதாகவும் கூறப்படுகிறது. குளச்சல் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட குமரி பா.ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் சிவக்குமார் இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், கடந்த முறை போட்டியிட்ட மாநில துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்டப் பொருளாளர் முத்துராமன் இருவரில் ஒருவருக்கு சீட் கிடைக்க்க வாய்ப்பு உள்ளது. விளவங்கோடு தொகுதி ஒதுக்கப்பட்டால் கடந்த முறை போட்டியிட்ட மாவட்டத் தலைவர் தர்மராஜ் அல்லது ஜெயசீலனுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Election Updates: இழுபறி முடிந்தது - காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு