Published:Updated:

சூரப்பாவுக்கு ஆதரவாக கமல்ஹாசன்... வீடியோவில் குறிப்பிட்ட ஜூனியர் விகடன் பேட்டி எது?

கமல்
கமல்

எந்தக் கட்டுரையில் பாலகுருசாமி அது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்பதைப் பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். `சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா?' என்கிற தலைப்பில், சூரப்பாவுக்கு ஆதரவாக தமிழக அரசிடம் பல கேள்விகளையும் அவர் முன்வைத்திருக்கிறார். அந்த வீடியோவில், ஜூனியர் விகடனில் வெளிவந்த கட்டுரையைக் குறிப்பிட்டும் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.

அவர் பேசும்போது, ``உயர் கல்வித்துறை அமைச்சர் 60 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டுதான் பேராசியர்களை பணி நியமனம் செய்கிறார் என திரு.பாலகுருசாமி ஜூனியர் விகடன் இதழில் குற்றம்சாட்டினாரே... விசாரித்துவிட்டீர்களா?'' எனக் கேட்டிருக்கிறார். எந்தக் கட்டுரையில் பாலகுருசாமி அது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து, பாலகுருசாமி எழுதிய புத்தக வெளியீட்டு விழா, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெற்றது. அந்த விழாவில்,

``ஏழை மாணவர்களுக்காகக் கல்வித்தரத்தைக் குறைக்கக் கூடாது. ஏழை மாணவர்கள் படிப்பதற்காகத் தனியாகத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி அண்ணா பல்கலைக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்பு அந்தஸ்தை நிராகரிக்கக் கூடாது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியதில் எந்தத் தவறும் இல்லை’’ என்று பாலகுருசாமி பேசியது, கடுமையான சர்ச்சையை உண்டாக்கியது. `ஏழை மாணவர்களுக்குத் தனியாகக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்’ என அவர் பேசியதாகச் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து அவர்மீது கல்வியாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவந்தனர். அப்போது நாம் விகடன் சார்பாக அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

சஸ்பெண்ட் செய்யப்படுவாரா சூரப்பா? - அமைச்சரின் பேட்டியும் கல்வியாளர்கள் கொதிப்பும்!

`` `ஏழை மாணவர்களுக்குத் தனியாகக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்’ என நீங்கள் சொன்னதாக வெளியான கருத்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே..?’’’

``ஏழை மாணவர்கள் படிப்பதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றுதான் சொன்னேன். தமிழகத்தில் 600 கல்லூரிகள் இருக்கின்றன. ஏழை மாணவர்கள் அங்கு படிக்கலாமே..! தவிர, ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கலாம். ஆனால், கட்டணம் அதிகமாகும். அதனால் ஏழை மாணவர்கள் படிக்க முடியாது எனச் சொல்லி, அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை வேண்டாம் என்று சொல்வது தவறு. ஐஐடி-யிலும்தான் கட்டணம் அதிகமாக வாங்குகிறார்கள். அங்கு ஏழை மாணவர்கள் படிக்க முடியவில்லை என்பதால் மூடிவிட முடியுமா?’’’ என்றவரிடம்.

பாலகுருசாமி
பாலகுருசாமி

``ஐ.ஓ.இ அந்தஸ்து கிடைத்தால், 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும் என்று சொல்லப்படுகிறதே..?’’ எனக் கேட்க

``தவறான தகவல் பரப்பப்பட்டுவருகிறது. இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராது என அமைச்சருக்குக் கடிதம் எழுதப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஐ.ஓ.இ வந்தால் அரசியல்வாதிகளால் கொள்ளை அடிக்க முடியாது என்பதால்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள். 60 லட்சம் வாங்கிக்கொண்டுதான் பேராசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அமைச்சர் அன்பழகனே பணம் வாங்கிக்கொண்டுதான் பணியிடங்களை வழங்கிவருகிறார். அதை அவர் மறுக்கமுடியுமா?’’’ என்றார். இதைத்தான் தற்போது கமல்ஹாசனும் தன்னுடைய வீடியோவில் சுட்டிக்காட்டி தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அப்போது ஜூனியர் விகடனில் வெளிவந்த பாலகுருசாமியின் முழுமையான பேட்டியை இந்த லிங்க்கில் படிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றும் சர்ச்சைகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு