Published:Updated:

ஸ்டாலின் முதல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை... யாருக்கு என்ன துறை?! -வெளியானது அமைச்சரவை பட்டியல்

அமைச்சரவை
அமைச்சரவை

ஸ்டாலினுடன் பதவியேற்க இருக்கும் திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. தொடர்ச்சியாக மே மாதம் 2 -ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி 159 இடங்களை கைபற்றியது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதனை தொடர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று முந்தினம், அதாவது மே 4-ம் தேதி நடைபெற்றது. திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். தொடர்ந்து ஸ்டாலின் சட்டமன்ற குழுத் தலைவரக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், மே 5 -ம் தேதியான நேற்று காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, திமுக எம்எல்ஏ-க்கள் 125 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற 8 பேர் என சேர்த்து 133 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார். மேலும், அமைச்சரவைப் பட்டியலையும் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார்.

ஸ்டாலின் முதல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை... யாருக்கு என்ன துறை?! -வெளியானது அமைச்சரவை பட்டியல்

அதனை தொடர்ந்து நேற்று மதியம் ஆளுநரின் தனிச் செயலாளர் ஆனந்தராவ் படேல், உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்றார். அப்போது, ஸ்டாலினை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக, அழைப்புக் கடிதத்தை ஸ்டாலினிடம் அவர் வழங்கினார். இதனை தொடர்ந்து மே மாதம் 7-ம் தேதி காலை, அதாவது நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார் ஸ்டாலின். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

இந்த நிலையில் நாளை ஸ்டாலினுடன் பதவியேற்க இருக்கும் திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

மு க ஸ்டாலின் - பொது பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு பயிற்சி சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்

துரைமுருகன் - நீர்வளத்துறை

கே.என் நேரு - நகர்ப்புற வளர்ச்சி துறை

ஐ. பெரியசாமி - கூட்டுறவு துறை

பொன்முடி - உயர்கல்வித்துறை

எ.வ வேலு - பொதுப்பணித்துறை

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

கே.கேஎஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

தங்கம் தென்னரசு - தொழில்துறை

ரகுபதி - சட்டத்துறை

முத்துசாமி - வீட்டுவசதித் துறை

பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை

தா.மோ அன்பரசன் - ஊரக தொழில்துறை

சாமிநாதன்- செய்தித்துறை

கீதா ஜீவன் - சமூக நலன், மகளிர் உரிமை துறை

அனிதா ராதாகிருஷ்ணன் - மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை

ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத்துறை

ராமச்சந்திரன் - வனத்துறை

சக்கரபாணி - உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை

செந்தில்பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை

காந்தி- கைத்தறி மற்றும் துணிநூல் துறை

மா. சுப்பிரமணியன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

எஸ் எஸ் சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பிகே சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை

பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனித மேலாண்மை துறை

நாசர் - பால்வளத்துறை

கே.எஸ் மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் துறை

அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை

மெய்யநாதன் - சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

கணேசன் - தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை

மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத் துறை

மதிவேந்தன் - சுற்றுலாத்துறை

முழுமையான அமைச்சரவைப் பட்டியல்...

download
அடுத்த கட்டுரைக்கு