Published:Updated:

`மகசேசே விருது பெற வேண்டாம்' - சி.பி.எம் முன்னாள் அமைச்சர் ஷைலஜாவைத் தடுத்தது யார்? | சர்ச்சை

கே.கே.ஷைலஜா

``சில காரணங்களால் விருது வேண்டாம் என கே.கே.ஷைலஜாதான் முடிவு செய்தார். ஷைலஜாவை யாரும் தடுக்கவில்லை. கட்சியில் முடிவு எடுக்கும் மத்தியக்குழு உறுப்பினர் அவர். அந்த வகையில் அவர்தான் கட்சி” என்றார் சீதாராம் யெச்சூரி.

`மகசேசே விருது பெற வேண்டாம்' - சி.பி.எம் முன்னாள் அமைச்சர் ஷைலஜாவைத் தடுத்தது யார்? | சர்ச்சை

``சில காரணங்களால் விருது வேண்டாம் என கே.கே.ஷைலஜாதான் முடிவு செய்தார். ஷைலஜாவை யாரும் தடுக்கவில்லை. கட்சியில் முடிவு எடுக்கும் மத்தியக்குழு உறுப்பினர் அவர். அந்த வகையில் அவர்தான் கட்சி” என்றார் சீதாராம் யெச்சூரி.

Published:Updated:
கே.கே.ஷைலஜா

கேரள மாநிலத்தில் பினராய் விஜயனின் முதலாவது ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் கே.கே.ஷைலஜா டீச்சர். அந்தச் சமயத்தில் நிபா வைரஸ், அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் ஆகியவை சுகாதாரத்துறைக்குப் பெரும் சவாலாக அமைந்தன. கொரோனா வைரஸ் இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் பரவியதால் பரவலைக் கட்டுப்படுத்த 'பிரேக் தி செயின்' திட்டத்தை அறிமுகப்படுத்தி தொற்றைக் கட்டுப்படுத்தும்விதமாக திறம்படச் செயல்பட்டதால் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.ஷைலஜா டீச்சர் மிகவும் பாராட்டப்பட்டார். இரண்டாம் பினராயி விஜயன் ஆட்சியில் புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே அமைச்சராக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இதையடுத்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சராக வீணா ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். இப்போது கே.கே. ஷைலஜா டீச்சர் எம்.எல்.ஏ-வாக மட்டுமே இருக்கிறார்.

சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

இந்த நிலையில் கேரளா சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் நிபா, கொரோனா வைரஸ்களைக் கட்டுபடுத்தும்விதமாகச் சிறப்பாகச் செயல்பட்டதாக கே.கே.ஷைலஜா டீச்சருக்கு ஆசியாவின் புகழ்பெற்ற விருதான மகசேசே விருது வழங்க மகசேசே ஃபவுண்டேஷன் தீர்மானித்து, அதை அறிவித்தது. அதேசமயம் `மகசேசே விருது தனக்குத் தேவையில்லை’ என கே.கே.ஷைலஜா டீச்சர் அந்த ஃபவுண்டேஷனுக்கு பதில் அறிவிப்பு கொடுத்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றிக் கூறிய கே.கே.ஷைலஜா, "மகசேசே விருதைப் பெற வேண்டாம் எனக் கட்சித் தலைமை கூறியதால் விருதை மறுத்திருக்கிறேன். சுகாதாரத்துறை அமைச்சர் என்ற நிலையில் சி.பி.எம் கட்சி கொடுத்த கடமையை மட்டுமே செய்தேன். நிபா, கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கை கேரள மாநிலத்தின் ஒட்டுமொத்த சுகாதாரத்துறையின் செயல்பாடாகும். எனவே, தனிப்பட்ட முறையில் எனக்கு விருது வேண்டாம் என மகசேசே ஃபவுண்டேஷனுக்கு பதிலளித்திருக்கிறேன்" என கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.

கே.கே.ஷைலஜா
கே.கே.ஷைலஜா

இந்த நிலையில் விருது பெற வேண்டாம் எனக் கட்சித் தலைமை கூறவில்லை என்றும், அது கே.கே.ஷைலஜா எடுத்த முடிவு எனவும் சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, "சில காரணங்களால் விருது வேண்டாம் என கே.கே.ஷைலஜாதான் முடிவுசெய்தார். ஷைலஜாவை யாரும் தடுக்கவில்லை. கட்சியில் முடிவு எடுக்கும் மத்தியக்குழு உறுப்பினர் அவர். அந்த வகையில் அவர்தான் கட்சி" என்றார்.

கட்சித் தலைமை முடிவால் விருது வாங்க மறுத்ததாக மத்தியக்குழு உறுபினர் கே.கே.ஷைலஜா கூறிய நிலையில் அதை பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறுத்திருப்பது சி.பி.எம் கட்சியில் விவாதமாக எழுந்துள்ளது.