Published:Updated:

எந்த ஆட்சிக் காலத்தில் அதிகம் ஊழல் நடந்தது? #VikatanSurvey #EndCorruption

லட்சுமணன்.ஜி

ஸ்டாலின், கமல், சீமான்... யார் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பார்கள்? #VikatanSurvey #EndCorruption

சட்டசபை
சட்டசபை

இன்றைக்குப் புதிதாகக் கட்சி தொடங்குபவர்கூட முதலில் வைக்கும் முழக்கம், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம்' என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த முழக்கம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. பல கட்சிகள் முன்வைத்த முழக்கத்தின் தொடர்ச்சிதான் இது. ஆனால், அப்படி ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் ஊழலை அடியோடு ஒழித்துவிட்டதாகத் தெரியவில்லை. அதனால், 'இங்கு யாருடைய ஆட்சிக்காலத்தில் ஊழல் நடக்கவில்லை' என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விட்டது.

அதேநேரத்தில் யார் ஆட்சியில் ஊழல் அதிகம் நடந்தது, குறைவாக நடந்தது என்ற அளவில்தான் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. 'இனி வரும் தலைவர்களாவது ஊழலை ஒழிப்பார்களா?' என்ற நம்பிக்கையில் மக்கள் காத்திருக்கிறார்கள். மக்கள் மனதில் இருக்கும் ஊழலற்ற தலைவர் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான சின்ன சர்வேதான் இது. கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலளித்து ஊழலுக்கு எதிரான உங்கள் நிலைப்பாட்டைப் பதிவுசெய்யுங்கள்.