Published:Updated:

அன்புமணி வகித்த பாமக இளைஞரணித் தலைவர் பதவிக்கு அடுத்து யார்?!

பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்

கட்சியின் இளைஞரணித் தலைவர் யார் என்கிற பரபரப்பு அந்தக் கட்சி வட்டாரத்தில் உருவாகியிருக்கிறது.

அன்புமணி வகித்த பாமக இளைஞரணித் தலைவர் பதவிக்கு அடுத்து யார்?!

கட்சியின் இளைஞரணித் தலைவர் யார் என்கிற பரபரப்பு அந்தக் கட்சி வட்டாரத்தில் உருவாகியிருக்கிறது.

Published:Updated:
பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்

பாமக இளைஞரணித் தலைவராகப் பொறுப்பு வகித்துவந்த மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு, கட்சியின் இளைஞரணித் தலைவர் யார் என்கிற பரபரப்பு அந்தக் கட்சி வட்டாரத்தில் உருவாகியிருக்கிறது.

பாமக தலைவரானார் அன்புமணி
பாமக தலைவரானார் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னை திருவேற்காட்டில் கடந்த மே 28-ம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாமக-வின் இளைஞரணித் தலைவர் பொறுப்பு வகித்தவந்த, அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, 25 ஆண்டுகளாக கட்சித் தலைவர் பதவியை அலங்கரித்துவந்த ஜி.கே.மணி கட்சியின் கௌரவத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், அன்புமணி வகித்த வந்த இளஞரணித் தலைவர் பொறுப்பு யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு அந்தக் கட்சியினர் மத்தியில் உருவாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இர.அருள்
இர.அருள்

மருத்துவர் ராமதாஸால் தொடங்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றான பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளராகப் பதவி வகித்துவருபவரும், மருத்துவர் ராமதாஸின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவருமான இர.அருளுக்குத்தான் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறுகின்றனர். அதேவேளையில், கட்சியில் அன்புமணியை மட்டுமே வலுவான நபராகக் கட்டமைக்க, இளைஞரணிப் பதவியை ஒருவருக்குக் கொடுக்காமல், இரண்டு மூன்று பேரை அந்தப் பொறுப்பில் அமர்த்தலாம் என்கிற திட்டமும் பாமக தலைமையிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி, இரண்டு மூன்று பேர் பொறுப்புக்கு வந்தாலும், அதில் ஒருவராக நிச்சயமாக இர. அருள் இருப்பார் என்கிறார்கள் தைலாபுர வட்டாரத்தில். பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism