Published:Updated:

``2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு முன்பு மோடியை யாருக்கும் தெரியாது!" - நிதிஷ் குமார் சாடல்

நிதிஷ் குமார்

``நரேந்திர மோடி அல்லது அமித் ஷா போன்றவர்களின் கூச்சல்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை." - நிதிஷ் குமார்

``2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்கு முன்பு மோடியை யாருக்கும் தெரியாது!" - நிதிஷ் குமார் சாடல்

``நரேந்திர மோடி அல்லது அமித் ஷா போன்றவர்களின் கூச்சல்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை." - நிதிஷ் குமார்

Published:Updated:
நிதிஷ் குமார்

பீகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முதல்வர் நிதிஷ் குமார் ஆளும் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதிலிருந்து, பா.ஜ.க தொடர்ச்சியாக நிதிஷ் குமாரை விமர்சித்துவருகின்றது.

அமித் ஷா
அமித் ஷா

நேற்றுகூட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகாரில் சோசியலிஸ்ட் தலைவர் என அறியப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயனின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சொந்த கிராமத்தில் அவருக்கு 15 அடி உயரச் சிலையைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா, ``ஜெயப்பிரகாஷ் நாராயன் முன்னெடுத்த ஜே.பி இயக்கத்தின் மூலம் உயரத்தை எட்டிய தலைவர்கள், இன்று அதிகாரத்துக்காக காங்கிரஸின் மடியில் அமர்ந்திருக்கிறார்கள்" என்று நிதிஷ் குமாரை விமர்சித்திருக்கிறார். இந்த நிலையில், அமித் ஷாவின் இத்தகைய விமர்சனத்துக்கு, முதல்வர் நிதிஷ் குமார் தன்னுடைய கடுமையான பதில்விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், ``நரேந்திர மோடி அல்லது அமித் ஷா போன்றவர்களின் கூச்சல்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஜே.பி இயக்கத்துக்கு அவர்கள் எந்த வகையிலாவது பங்களித்திருக்கிறார்களா. மேலும், சுதந்திரப் போராட்டத்துக்குச் சம்பந்தமே இல்லாதவர்கள் ஜே.பி இயக்கத்தைப் பற்றி பேசுகிறார்கள். அதோடு, 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்களை நான் கவனிப்பதில்லை" எனக் கூறினார்.

மோடி
மோடி

மேலும் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தை வைத்து மோடியை விமர்சித்த நிதிஷ் குமார், ``2002-ம் ஆண்டுக்கு முன்பு மோடியை யாருக்குத் தெரியும். கலவரத்தின் வெளிச்சம்தான், மோடியின் பெயருடன் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன" எனத் தெரிவித்தார்.