Published:Updated:

`இந்தியை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள்’- திரிபுரா முதல்வர் பிப்லப் குமார்!

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியைப் பேசுகின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால், அலுவலகப் பயன்பாட்டில் ஆங்கிலத்தின் தேவை இருந்திருக்காது.

Biplab Kumar Deb
Biplab Kumar Deb

``இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.

‘‘இந்தி திணிப்பை தி.மு.க., அ.தி.மு.க. உறுதியாக எதிர்க்காது!’’ - பெ.மணியரசன்
amith sha
amith sha

நாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், இந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழிக் கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த இந்தி நாளில் செய்யுங்கள்” என்று இந்தி தினத்தில் பேசிய அமித்ஷாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு எதிராகத் தமிழக அரசியல் கட்சிகளின் கண்டன அறிக்கைகள் பறந்தன. `மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தயாராகத் தயங்க மாட்டோம்’ என்று தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில், பா.ஜ.கவைச் சேர்ந்த திரிபுரா முதல்வர் பிப்லப் குமார், `இந்தியை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள்’ என்று பேசியுள்ளார். இது தொடர்பாக அவர், ``தேசிய மொழியாக இந்தி இருக்கக் கூடாது என எதிர்ப்பவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள்.

`பா.ஜ.க-வின் கதவு மட்டும் முழுமையாகத் திறக்கப்பட்டால்?’ - எதிர்க்கட்சிகளை விளாசிய அமித்ஷா
Biplab Kumar Deb
Biplab Kumar Deb

நான் இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கிறேன். நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியைப் பேசுகின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் 200 ஆண்டுகள் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால், அலுவலகப் பயன்பாட்டில் ஆங்கிலத்தின் தேவை இருந்திருக்காது. அரசாங்க அலுவலகங்களில் பெங்காலி அல்லது, கொக்போரோக் மொழிகளில் பேசி உதவி கேட்டால், அதிகாரிகள் அவர்களுக்கு உதவ நேரம் எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் கேட்டால் உடனே உதவிவிடுகின்றனர். இப்படி இருக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.