Published:Updated:

`ரெளடியிச ஹப்’ ஆன காஞ்சிபுரம், செங்கல்பட்டு... போலீஸ் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் ரௌடிகள் யார் யார்?!

போலீஸ் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் ரௌடிகள்

கறுப்பு ஆடு போலீஸ்களுக்கு செக் வைத்து சில நடவடிக்கைளை எடுக்க, ரௌடிகளுக்கும் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் இருந்துவந்த நெட்வொர்க் உடைந்தது. ஆக, தங்களுக்கு இனி போலீஸ் ஆதரவு இருக்காது என்பதைப் புரிந்துகொண்ட ரௌடிகள் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றனர்.

`ரெளடியிச ஹப்’ ஆன காஞ்சிபுரம், செங்கல்பட்டு... போலீஸ் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் ரௌடிகள் யார் யார்?!

கறுப்பு ஆடு போலீஸ்களுக்கு செக் வைத்து சில நடவடிக்கைளை எடுக்க, ரௌடிகளுக்கும் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் இருந்துவந்த நெட்வொர்க் உடைந்தது. ஆக, தங்களுக்கு இனி போலீஸ் ஆதரவு இருக்காது என்பதைப் புரிந்துகொண்ட ரௌடிகள் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றனர்.

Published:Updated:
போலீஸ் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் ரௌடிகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ரௌடிகள் தற்போது தப்பித்தால் போதும் என ஒடிக்கொண்டிருக்கிறார்களாம். இந்த மாவட்டங்களில் இருக்கும் சுமார் 2,000 நிறுவனங்கள்தான் இவர்களின் காசு கொட்டும் மரங்கள். `ஸ்க்ராப்ஸ்’ என்று அழைக்கப்படும் தொழிற்சாலை இரும்புக்கழிவுகளை குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை அதிக லாபம் வைத்து பெரிய உருக்காலை ஏஜென்ட்டுகளிடம் விற்று காசு பார்ப்பது இந்த ரௌடிகளின் வேலை.

எந்த ஓர் உடல் உழைப்பும் இல்லாமல், மாமூல் வசூலித்து வந்தார்கள் இந்த ரெளடிகள். ஆட்கள் புடைசூழ, அரிவாள், நாட்டு வெடிகுண்டு சகிதம் வலம் வந்துகொண்டிருந்தார்கள். ஸ்க்ராப்புகளை கம்பெனிகளிடமிருந்து பிற ஏஜென்ட்டுகளுக்குக் கைகாட்டிவிடுவதுதற்குத்தான் கோடிக்கணக்கில் கமிஷன்.

ரெளடிகள்
ரெளடிகள்

வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிமாநில உரிமையாளர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள்... இவற்றில் கீழ்மட்டப் பணியை செய்கிறவர்கள் உள்ளூர்காரர்கள். இவர்களை வைத்து, உள்ளே நடக்கும் முறைகேடான ஏதாவது சம்பவத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை ஊதிப் பெரிதாக்கி, அந்த நிறுவன உயரதிகாரிகளை மிரட்டுவது ரௌடிகளின் பாணி. இப்படித்தான், நிறுவனங்களின் உள்ளே காலடி எடுத்து வைப்பார்கள். இந்த வகையில், குன்றத்தூர் வைரம், படப்பை குணா போன்ற சிலர் முதலில் ரௌடியிசம், அடுத்து, தொழிற்சாலைகளில் தலையீடு, பிறகு, அரசியலில் பதவி பிடிப்பது... என்று தங்களின் ரூட்டுகளை மாற்றிவருகிறார்கள்.

பொதுவாக, ஸ்க்ராப்ஸ் பிஸினஸை அ.தி.மு.கழக ஆட்சியில் மன்னார்குடி பார்ட்டிகள் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பார்களாம். தி.மு.க ஆட்சி வந்தால், ஆட்சி மேலிடத்துக்கு வேண்டப்பட்ட பிரமுகர் கவனிப்பார். இந்த முறை தி.மு.க ஆட்சி வந்ததும், இந்தப் பிரமுகரின் கவனிப்புக்குள் பெரும்பாலான தொழிற்சாலைகள் வரவேயில்லை. காரணம், உள்ளூர் ரௌடிகளின் பிடியில் அவை சிக்கியிருந்தன. அத்துடன், தொழிற்சாலை அதிபர்களும், தமிழக அரசுக்கு இந்த ரௌடிகளின் தலையிட்டு செய்யும் பிரச்னைகளைப் பற்றிப் புகார் செய்துவந்தனர்.

கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை
கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை

அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் எஸ்.பி-யான சுதாகருடன் கூடுதல் எஸ்.பி-யாக வெள்ளத்துரையையும் களமிறக்கி ரௌடிகளை ஒழிக்க பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த சில மாதங்களில் சுமார் 290 ரௌடிகளைப் பிடித்து உள்ளே தள்ளியிருக்கிறார்கள் போலீஸார். மேலும் பலரிடம் `குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன்’ என்று உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கியிருக்கிறார்கள். இதேநேரம், தலைமறைவாக இருக்கும் ரௌடிகளையும் வலைவீசித் தேடிவருகிறார்கள்.

அந்த லிஸ்ட்டில், படப்பை குணா... முதலிடத்தில் இருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரெளடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, நிறைய ரியல் எஸ்டேட் என சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார். இவர்மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் எட்டு கொலை வழக்குகளும் அடக்கம். பலமுறை பல வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்றிருக்கிறார். தற்போது பெயிலில் வெளியே வந்திருக்கிறார்.

படப்பை குணா
படப்பை குணா

இந்த நேரத்தில்தான், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி-யான சுதாகரும், கூடுதல் எஸ்.பி-யான வெள்ளத்துரையும் குணாவைத் தேட ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து தலைமறைவானார். அவரது நெருங்கிய வட்டத்திலுள்ள 50 பேர்களைக் கைதுசெய்தனர். அவர் தொடர்புடைய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். குணாவை ஏவி, பெண்மணி ஒருவரது நிலத்தை அபகரித்த போலீஸ்காரர் வெங்கடேசன் என்பவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இப்படி போலீஸ் நடவடிக்கைகள் விடாமல் துரத்தவே, மிரண்டுபோன குணா அவருக்கு வேண்டப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களிடம் உதவி கேட்டுப்போனார்.

இந்த நிலையில், ஜனவரி 7-ம் தேதியன்று இரவு, பி.ஜே.பி-யின் மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன், தனி காரில் படப்பை குணாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு ரெளடி குணாவின் மனைவி எல்லம்மாள் மற்றும் அவருடைய குடும்பத்தாரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதையடுத்து, குணாவின் மனைவி எல்லம்மாளை 9-ம் தேதியன்று அதிகாலை காஞ்சி தனிப்படையினர் அருகிலுள்ள காவல் நிலையத்துககு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அடுத்து, குன்றத்தூர் வைரம். திருவள்ளூர் மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர். இவரின் தரப்பு அனுமதி இல்லாமல், யாரும் திருட்டு மணல் கடத்தல் பிஸினஸ் செய்ய முடியாது. கடந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு சுமார் 6 ஆயிரம் ஒட்டுகளைப் பெற்று தோற்றார். ஸ்க்ராப்ஸ் பிஸினஸில் பிரபலமானவர். திருட்டு மணல் விவகாரத்தில் அன்பு, அவரின் மகன் மதன் இருவரும் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் வைரம் இருந்ததாக போலீஸ் சொன்னது.

கொலை
கொலை
(சித்திரிக்கப்பட்ட படம்)

ஸ்க்ராப்ஸ் பிஸினஸ் போட்டியில் குமரன் என்பவர் கொல்லப்பட்டார். இந்த நேரத்தில், வைரம் வேறு விவகாரத்தில் சிறையில் இருந்தார். இடையில் சில வருடங்கள் இவர் பெரிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருந்தார். ஊர் மக்களுக்குப் பொதுவான உதவிகளைச் செய்து வந்தார். ஆனால், தொழில் போட்டி காரணமாக, மறைமலைநகர் திருமாறன் என்பவர் 2021-ல் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் வைரத்தை போலீஸ் தேட ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து தலைமறைவாகிவிட்டார். செம்பரம்பாக்கம் ஏரியில் தூர்வாரும் டெண்டர் எடுப்பதில் ஆரம்பித்து பல்வேறு பிஸினஸ்களில் ஈடுபட்டுவந்தார். இவரை தற்போது போலீஸ் வலைவீசித் தேடிவருகிறது.

காஞ்சிபுரம் ஸ்ரீதர், பிரபல ரௌடி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு உடையவர். இவரை போலீஸ் வலைவீசித் தேடியபோது, கம்போடியா நாட்டுக்குத் தப்பி ஓடினார். அங்கேயே 2017-ல் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அவரது மறைவுக்குப் பிறகு ஸ்ரீதரின் கேங்கில் இருந்தவர்களுக்குள் யார் பாஸ் என்கிற போட்டி ஏற்பட்டது. அதைவிட, ஸ்ரீதர் சேர்த்துவைத்த அசையா சொத்துகள், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றுவதில் மோதல் வெடித்தது. ஸ்ரீதரின் டிரைவராக இருந்த தினேஷ், ஒரு கோஷ்டி. திருட்டு மணல் பிஸினஸ் பிரமுகர்களிடம் மாமூல் வசூலித்து வந்தார். தியாகு என்பவர் இன்னொரு கோஷ்டி. பட்டு வியாபரிகளிடம் இவர் வசூல் வேட்டை நடத்திவந்தார். காதர் என்பவர் மூன்றாவது கோஷ்டி. இவரும் தனக்கென ஒரு ரூட் போட்டு ரௌடியிசத்தில் ஈடுபட்டுவந்தார்.

காஞ்சிபுரம் ரெளடி  ஸ்ரீதர்
காஞ்சிபுரம் ரெளடி ஸ்ரீதர்

இந்த மூன்று கோஷ்டியினருக்கும் எதிராக நின்றவர், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா. இந்த கோஷ்டிகளுக்கும் மாறி மாறி கொலைப் படலம் நடந்துவந்தது. சுமார் ஏழு பேர் வரை இதுவரை பலியானதாக போலீஸ் சொல்கிறது. கணக்கில் வராதது இன்னும் எத்தனையோ? காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல ஊர்களின் பொது இடங்களில் இந்த கோஷ்டியினரின் மோதல் காட்சிகளைப் பார்த்த காஞ்சிபுரம் மக்கள் பயத்தில் உறைந்தனர். கள்ளத்துப்பாக்கிகள் இந்த கோஷ்டியினரிடம் தாராளமாகப் புழங்கின. இன்டர்நெட் போனில் பிஸினஸ் பிரமுகர்களை மிரட்டி மாமூல் வசூலித்துவந்தனர். அதையடுத்து, ஸ்ரீதர் கேங்கைச் சேர்ந்த முக்கியமானவர்களில் தினேஷ், தியாகு, காதர்... உள்ளிட்ட சிலரை போலீஸார் வலைவீசித் தேடினர். இதேபோல், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாவையும் போலீஸார் தேடினர். ஆனால், இவர்கள் யாரையும் பிடிக்க முடியவில்லை. காரணம்... போலீஸின் சில கறுப்பு ஆடுகள் இந்த கோஷ்டியினருக்கு மறைமுக ஆதரவு அளித்து வந்ததுதான். இதை தாமதமாகப் புரிந்துகொண்ட போலீஸ் உயரதிகாரிகள், கறுப்பு ஆடுகள் யார் என்பதை முதலில் லிஸ்ட் தயாரித்தனர்.

இவர்களுக்கு செக் வைத்து சில நடவடிக்கைளை எடுத்தனர். இதனால், ரௌடிகளுக்கும் போலீஸின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் இருந்துவந்த நெட்வொர்க் உடைந்தது. ஆக, தங்களுக்கு இனி போலீஸ் ஆதரவு இருக்காது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட ரௌடிகள் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றனர்.

கொலை
கொலை

காஞ்சிபுர மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,

``எங்கள் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவர்களில் முதல் ஆறு பேரில் உள்ளவர்களைப் பல்வேறு தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவருகிறோம். அவர்கள் தலைமறைவாக, சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். ஆனால், வெளிமாநிலத்துக்குத் தப்பி ஓடிவிட்டதாக வதந்தியைப் பரப்பிவருகிறார்கள். இவர்களின் நடமாட்டம் அறவே நின்றுபோனதால், தொழிற்சாலை அதிபர்கள் ஓரளவு நிம்மதியாக தொழில் நடத்துகிறார்கள். க்ரைம் சம்பவங்களும் வெகுவாகக் குறைந்துவிட்டன. இந்த நிலை தொடர நினைக்கிறோம். எத்தனை நாளுக்குத்தான் எங்கள் பார்வையிலிருந்து தப்ப முடியும்? நிச்சயமாக அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்'' என்றார்.