Election bannerElection banner
Published:Updated:

தேர்தல் கமிஷன் என்ன செய்கிறது? - டெல்லி தேர்தலும் கெஜ்ரிவாலின் சந்தேகமும்..!

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க இரண்டாம் இடமும், காங்கிரஸ் சொற்ப இடங்களையும் கைப்பற்றுவதே கேள்விக்குறி என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

70 சட்டப்பேரவைத் தொகுதிக்கான டெல்லி தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது ஆளும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக வந்துகொண்டிருக்கிறது. அதேநேரம் பா.ஜ.க இரண்டாம் இடமும், காங்கிரஸ் சொற்ப இடங்களையும் கைப்பற்றுவதே கேள்விக்குறி என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன. இந்நிலையில், தேர்தல் முடிந்து இவ்வளவு மணிநேரம் ஆகியும் வாக்குப்பதிவு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருப்பதில் சந்தேகம் எழுப்பியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Election Commission of India
Election Commission of India

நேற்று தேர்தல் முடிவடையும் நேரத்தில் தேர்தல் ஆணையம் கடைசியாக 61.46% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவித்தது. எனினும், இறுதி நிலவரம் என்னவென்பதை இப்போது வரை சொல்லவில்லை. இது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த மாநிலத் தேர்தலிலும் இதுபோல் தாமதம் ஆனது கிடையாது என்பதைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதற்கிடையே, தான் கெஜ்ரிவாலும் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``முற்றிலும் அதிர்ச்சியாக உள்ளது? தேர்தல் கமிஷன் என்ன செய்துகொண்டிருக்கிறது?

தேர்தல் முடிந்து பல மணி நேரங்கள் ஆகியும் இன்னும் ஏன் இறுதி வாக்குப்பதிவு விவரத்தை வெளியிடவில்லை?” என்று கூறியுள்ளார். இதேபோல் அக்கட்சியின் இன்னொரு தலைவர் சஞ்சய் சிங் பேசுகையில், ``எத்தனை சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற இறுதி நிலவரத்தை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடத் தயாராக இல்லை. நாட்டின் தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் தற்போதே முதல்முறை" என்றார். இதனால் தற்போது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு