Published:Updated:

``கேள்வி கேட்டதற்காகப் பெண் எம்.பி-க்களின் ஆடையைக் கிழிப்பதா!" - மோடியைச் சாடிய பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

``கேள்வி கேட்டதற்காகப் பெண் எம்.பி-க்களின் ஆடையைக் கிழிப்பதும், இழுத்தடிப்பதும் கொடுமையானது. ஜனநாயக நாட்டில் பிரச்னைகள் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டும்." - பிரியங்கா காந்தி

``கேள்வி கேட்டதற்காகப் பெண் எம்.பி-க்களின் ஆடையைக் கிழிப்பதா!" - மோடியைச் சாடிய பிரியங்கா காந்தி

``கேள்வி கேட்டதற்காகப் பெண் எம்.பி-க்களின் ஆடையைக் கிழிப்பதும், இழுத்தடிப்பதும் கொடுமையானது. ஜனநாயக நாட்டில் பிரச்னைகள் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டும்." - பிரியங்கா காந்தி

Published:Updated:
பிரியங்கா காந்தி

நாடாளுமன்றத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்றுவரும் மழைக்கால கூட்டத்தொடரில், ஜி.எஸ்.டி வரி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், 24 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி-க்கள் 4 பேரை கூட்டத்தொடர் முடியும்வரை இடைநீக்கம் செய்திருந்தார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

அதைத் தொடர்ந்து எம்.பி-க்களின் இடைநீக்கம் மற்றும் சோனியா காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி-க்கள் உட்பட எதிர்க்கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார், வேனில் அழைத்துச்செல்லும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு பிரதமர் மோடியை விமர்சித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி
மோடி

அந்த ட்விட்டர் பதிவில், ``பிரதமரே, இந்த எம்.பி-க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த எம்.பி-க்களின் கேள்விகள் பொதுமக்களின் கேள்விகள். கேள்வி கேட்டதற்காகப் பெண் எம்.பி-க்களின் ஆடையைக் கிழிப்பதும், இழுத்தடிப்பதும் கொடுமையானது. ஜனநாயக நாட்டில் பிரச்னைகள் குறித்து நீங்கள் கேள்விகளைக் கேட்க வேண்டும். ஆனால், நீங்கள் ஏன் கேள்விகளுக்கு பயப்படுகிறீர்கள்?" என இந்தியில் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கிழிந்த ஆடையுடன் வேனில் போலீஸுடன் வாக்குவாதம் செய்கிறார்.