Published:Updated:

தேவேந்திர பட்னாவிஸ் ஏன் முதல்வர் ஆகவில்லை? - பாஜக-வின் `மகா' திட்டம்தான் என்ன?

தேவேந்திர பட்னாவிஸ்

எவ்வித அரசியல் அமைப்பு அதிகாரமும் இல்லாத துணை முதல்வர் பதவியை பட்னாவிஸ் ஏற்கவைக்கப்பட்டிருப்பது ஏன் என்ற உணர்வு மகாராஷ்டிர பாஜக தொண்டர்களிடம் நிலவுகிறது. ஏன் இந்த மாற்றம் என்று அலசினால் `மைக்ரோ பாலிடிக்ஸ் நாயகன் அமித் ஷாவின் பிளான்’ என்கிறார்கள்.

தேவேந்திர பட்னாவிஸ் ஏன் முதல்வர் ஆகவில்லை? - பாஜக-வின் `மகா' திட்டம்தான் என்ன?

எவ்வித அரசியல் அமைப்பு அதிகாரமும் இல்லாத துணை முதல்வர் பதவியை பட்னாவிஸ் ஏற்கவைக்கப்பட்டிருப்பது ஏன் என்ற உணர்வு மகாராஷ்டிர பாஜக தொண்டர்களிடம் நிலவுகிறது. ஏன் இந்த மாற்றம் என்று அலசினால் `மைக்ரோ பாலிடிக்ஸ் நாயகன் அமித் ஷாவின் பிளான்’ என்கிறார்கள்.

Published:Updated:
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சிவசேனா அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து பேரவையில் 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.

பட்னாவிஸுடன் ஷிண்டே சந்திப்பு
பட்னாவிஸுடன் ஷிண்டே சந்திப்பு

அதன்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (3.06.2022) தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ-க்கள் சுமார் 50 பேர் கோவாவிலிருந்து மும்பைக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியதும் பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் கிடைத்தன. ராகுல் நர்வேகர் (45) மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மிக இளமையான தலைவர் எனத் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். இவரின் மாமனார் ராம்ராஜே நாயக், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்ட மேலவைத் தலைவராக இருக்கிறார். சமாஜ்வாடியின் இரண்டு எம்எல்ஏ-க்களும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக-வைச் சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி எம்.எல்.ஏ-க்களின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. சிவசேனா, காங்கிரஸ் தரப்பிலும் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு.

 அமித்ஷா
அமித்ஷா

நிலமை இவ்வாறு இருக்க தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தபோது அவரின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர் ஏக்நாத் ஷிண்டே. ஆனால், இப்போது ஷிண்டேவின் தலைமையில் எவ்வித அரசியல் அமைப்பு அதிகாரமும் இல்லாத துணை முதல்வர் பதவியை பட்னாவிஸ் ஏற்கவைக்கப்பட்டிருப்பது ஏன் என்ற உணர்வு மகாராஷ்டிர பாஜக தொண்டர்களிடம் நிலவுகிறது. ஏன் இந்த மாற்றம் என்று அலசினால் `மைக்ரோ பாலிடிக்ஸ் நாயகன் அமித் ஷாவின் பிளான்தான் இது’ என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.

``பட்னாவிஸை முதல்வர் ஆக்குவதில்லை என்று பாஜக டெல்லி மேலிடம் முடிவெடுத்திருக்கிறது. அதற்குப் பின்னால் பட்னாவிஸை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மகாராஷ்டிரத்தைப் பொறுத்தவரை இப்போது பாஜக-வின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது சிவசேனா மட்டுமே. ஒருவேளை பாஜக சார்பில் பட்னாவிஸ் இப்போது முதல்வராக்கப்பட்டிருந்தால், இந்த ஒட்டுமொத்த அரசியல் டிராமாவின் அறுவடைதாரராக பாஜக-தான் மக்கள் மனதில் இருக்கும். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை பாஜக-வுக்கு எதிராக முழுவீச்சில் பிரசாரம் செய்யும். மக்களும் பாஜக பின்வாசல் வழியாக ஆட்சியைக் கைப்பற்றியதை உணர்ந்து பாஜக மீதே பெருங்கோபம் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் கணக்கு போட்ட பாஜக டெல்லி மேலிடம் இந்த டிராமாவில் சிவசேனாவையே தனக்குள் மோதவிட முடிவெடுத்தது” என்கிறார்கள் மகராஷ்ட்டிரா அரசியலை உற்று நோக்குபவர்கள்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

மேலும், ``இப்போது முதல்வர் சிவசேனாவின் ஷிண்டே என்பதால். பாஜக மீது மக்களின் முழுமையான கோபம் திரும்ப வாய்ப்பில்லை. மாறாக சிவசேனாவுக்குள்ளேயே மோதல்கள் தீவிரமாகியிருக்கின்றன. இந்த மழைக்கால முடிவில் மும்பை மாநகராட்சிக்குத் தேர்தல் வரவிருக்கிறது. சுமார் இருபத்தைந்து வருடங்களாக மும்பை மாநகராட்சியை சிவசேனைதான் கைப்பற்றிவருகிறது. இந்த முறை மும்பை மாநகராட்சியை பாஜக கைப்பற்ற வேண்டுமென்றால் சிவசேனாவை உடைக்க வேண்டும். அதைச் செய்துவிட்டது பாஜக. அடுத்த மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜக கைப்பற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கிவிட்டன. மும்பை மட்டுமல்ல... மகாராஷ்டிரம் முழுதும் சிவசேனாவை உத்தவ் - ஷிண்டே என இரு தரப்பு மோதலுக்கு ஆளாக்கிவிட்டது பாஜக. சிவசேனாவின் இரு தரப்பும் இனி தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என்று அலைய வேண்டும். அந்த நிலையில் சிவசேனாவின் வில் அம்பு சின்னம் முடக்கப்படும் நிலையும் உண்டாகும். இவ்வாறு மகாராஷ்டிர மாநிலம் முழுதும் சிவசேனாவை வலுவிழக்கச் செய்து அதன் மூலம் பாஜக-வின் கட்டமைப்பை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார் அமித் ஷா. அந்த நாடகத்தின் ஓர் அங்கமாகத்தான் முதல்வராக வரவேண்டிய பட்னாவிஸை துணை முதல்வர் ஆக்கியிருக்கிறார். பட்னாவிஸ் மீது அமித் ஷாவுக்கு கோபம் என்று இதை உள்ளூர் பாஜக-வினர் சிலர் தவறாகத் திரித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்கள்.