Published:Updated:

`இலவச மின்சாரம் பாதிக்கும்’ Vs `கம்பிகட்டும் கதைகள்'... மின்சார மசோதாவுக்கு எதிர்ப்பும் பதிலும்!

மின்சாரம்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

`இலவச மின்சாரம் பாதிக்கும்’ Vs `கம்பிகட்டும் கதைகள்'... மின்சார மசோதாவுக்கு எதிர்ப்பும் பதிலும்!

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

Published:Updated:
மின்சாரம்

மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இந்த மசோதாவை மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, விரிவான விவாதத்துக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அது அனுப்பப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்த மசோதா, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி-க்கள் கண்டனக் குரல் எழுப்பினர். மசோதாவை அறிமுகம் செய்வதற்கு முன்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மறுத்துவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``ஒரே பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் மின்சார வசதி வழங்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது. இது, அந்த நிறுவனங்களுக்கு லாபத்தையும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இழப்பையும் ஏற்படுத்தும். மின் விநியோகத்தில் மத்திய அரசின் பங்கைக் குறைக்க வகை செய்யும்” என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு நீண்டகாலமாக வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை, இந்த மசோதா பாதிக்கும் என்று தி.மு.க-வின் மக்களவைக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

மின்சாரம் பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே, மின்சாரம் தொடர்பாக சட்டத் திருத்தம் மேற்கொள்ளும்போது, அது குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால், மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்திருக்கிறது. மசோதா குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் பரப்பிவருவதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி, “மின்சார மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் 'கம்பிகட்டும் கதை' களையெல்லாம் சொல்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

“மின்சார மசோதா சட்டமானால் மின்துறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் அரங்கேறும். மின்துறையில் நிலவும் மின் திருட்டு, ஊழல், லஞ்சம், முறைகேடுகள், மோசமான நிர்வாகம், தரமற்ற மின்சாரம் ஆகியவை அகற்றப்பட்டு, கடனில் சிக்கித்தவிக்கும் மின் பகிர்மான நிறுவனங்கள் லாபமீட்டும் பாதையில் செல்லும். மானியங்கள் ரத்தாகும், சலுகைகளுக்குத் தடைவிதிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையல்ல. தனியார் முதலீடுகள் மற்றும் மின் பகிர்மான நிறுவனங்கள் அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான போட்டி ஏற்படும். அதன் மூலம் சீரான சேவை மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் மக்களுக்குக் கிடைக்கும். சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட இதர மாற்று எரிசக்தி திட்டங்கள் வலுப்பெறும்” என்று நாராயணன் திருப்பதி கூறுகிறார்.

மேலும், “ ‘மின்சார மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுவரும் விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம்,100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை பறிபோகும் அபாயம் இருக்கிறது. நமது மின் வாரியம் ஏற்படுத்தியிருக்கும் கட்டமைப்புகளைக் கட்டணமே இல்லாமல் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி சம்பாதிக்க வழிவகுக்கிறது இந்த மசோதா. தி.மு.க இதைக் கடுமையாக எதிர்க்கிறது’ என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.

ஆனால், மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுவரும் விவசாயிகள், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் என்ற பெயரில் நடைபெற்று வரும் மோசடி, ஊழல், முறைகேடுகள் ஆகியவை ஒழிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

தேவைப்படும் பயனாளிகளுக்கு உரிய மானியங்களும், சலுகைகளும் கிடைக்க பெறுவதோடு, நம் மின்பகிர்மான நிறுவனம் ஏற்படுத்தியிருக்கும் நஷ்டங்களைச் சரிசெய்து லாபகரமாக இயங்கச் செய்து, கட்டணத்தைக் குறைத்து, லஞ்ச, ஊழலை ஒழிப்பதற்கு இந்த மசோதா வழிவகுக்கும். அதனால்தான் தி.மு.க இதை எதிர்க்கிறது” என்கிறார் நாராயணன் திருப்பதி.

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் மத்தியில் ஆளுகிற பா.ஜ.க தரப்பில் மறுப்பு தரப்படலாம். ஆனால், இந்த மசோதாவை மின்வாரிய ஊழியர்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள். மின்சார சட்டத் திருத்த மசோதா 2022-க்கு எதிராக ஆகஸ்ட் 8-ம் தேதி இந்தியா முழுவதும் சுமார் 25,000 மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

விவசாயிகளும் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஓராண்டுக்காலம் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள், மின்சார சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்திவந்தார்கள். உ.பி உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் நெருங்கிய வேளையில், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசு முன்வந்தது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அப்போது, மின்சார மசோதா குறித்துத் தனியாகப் பேசுவோம் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்ததாகவும், அதன் பிறகு கடந்த எட்டு மாத காலத்தில் அது பற்றி மத்திய அரசு பேசவே இல்லை என்றும் விவசாயிகள் தரப்பில் இப்போது குற்றம்சாட்டுகிறார்கள். இந்த மசோதா குறித்து விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேசுமா?!