Published:Updated:

செங்கோல் விவகாரம்: "இந்திய கலாசாரத்தை ஏன் இவ்வளவு வெறுக்கிறது காங்கிரஸ்?" - அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா

``ஆதீனத்தின் வரலாற்றை போலியானது என்று காங்கிரஸ் கூறுகிறது.'' அமித் ஷா

Published:Updated:

செங்கோல் விவகாரம்: "இந்திய கலாசாரத்தை ஏன் இவ்வளவு வெறுக்கிறது காங்கிரஸ்?" - அமித் ஷா

``ஆதீனத்தின் வரலாற்றை போலியானது என்று காங்கிரஸ் கூறுகிறது.'' அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா

புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், சோழர் பாரம்பர்யத்தின்படி புதிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘செங்கோல்’ சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  - ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - ராகுல் காந்தி
ட்விட்டர்

ஆனால், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் திறந்துவைக்க வேண்டும் என  எதிர்க்கட்சிகள் கோரிவந்தன. ஆனால், மத்திய அரசு இது தொடர்பாக எந்த அறிவிப்பும் கொடுக்காத நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு நிகழ்ச்சியைக் காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருக்கின்றன.

அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``காங்கிரஸ் கட்சி ஏன் இந்திய மரபுகள், கலாசாரத்தை மிகவும் வெறுக்கிறது... இந்தியாவின் சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் தமிழ்நாட்டின் ஒரு புனித சைவ மடத்தால் நேருவுக்குச் செங்கோல் வழங்கப்பட்டது.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

திருவாவடுதுறை ஆதீனம் ஒரு புனிதமான சைவ மடம். நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோலின் முக்கியத்துவத்தைப் பற்றி திருவாவடுதுறை மடம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அதை ஒரு 'வாக்கிங் ஸ்டிக்' என்று அருங்காட்சியகத்துக்கு கொடுத்துவிட்டது. ஆதீனத்தின் வரலாற்றை போலியானது என்று காங்கிரஸ் கூறுகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.