Published:Updated:

மின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை? #DoubtOfCommonMan

தமிழ்நாடு மின் வாரியம் ஒவ்வோர் ஆண்டும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டிய வரவு செலவு கணக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை.

தமிழ்நாடு மின் வாரியம்
தமிழ்நாடு மின் வாரியம்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் முத்துக்குமார் இருளப்பன் என்ற வாசகர், ''மின் வாரியம் கடந்த சில ஆண்டுகளாக வரவு செலவுக் கணக்கை ஏன் தாக்கல் செய்யவில்லை?'' என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அவருக்கான பதில் இங்கே...

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வரவு செலவுக் கணக்கை ஆணையத்திடம் மின்வாரியம் சரிவரத் தாக்கல் செய்வதில்லை என்று செய்திகள் வருகின்றன.

தமிழ்நாடு மின் வாரியம்
தமிழ்நாடு மின் வாரியம்

இது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தமிழ்நாடு மின்சார வாரியம் தன் வரவு செலவு கணக்கை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒவ்வோர் ஆண்டும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அவர்கள் சரிவரத் தாக்கல் செய்வதில்லை. உரிய காலத்துக்குள் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யாத காரணத்தால், அது குறித்து ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் மின்வாரியத்திடம் கேட்போம். அதன் பிறகே அதை அவர்கள் எங்களிடம் தாக்கல் செய்வார்கள். 2018 - 2019 ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை இன்னும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை” என்றனர்.

மின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை?
#DoubtOfCommonMan
`நட்ராஜ் ஷாட்' கபில்தேவுக்கு அன்று நாம் செய்தது துரோகம்... ஏனென்றால்?!  #KapilDev #NatrajShot

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ``தமிழ்நாடு மின்வாரியம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதால் வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும், 2017 - 2018 நிதியாண்டு வரை கணக்கைத் தாக்கல் செய்துவிட்டோம். 2018 - 2019 ஆண்டுக்கான கணக்கை விரைவில் தாக்கல் செய்துவிடுவோம்” என்றனர்.

தமிழ்நாடு மின் வாரியம்
தமிழ்நாடு மின் வாரியம்

இது குறித்து நம்மிடம் பேசிய மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர், ``வரவு செலவு கணக்கை ஒவ்வோர் ஆண்டும் கட்டாயம் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான், மின் கட்டண உயர்வு தொடர்பான கோரிக்கையை ஆணையத்திடம் வாரியத்தால் வைக்க முடியும். உள்ளாட்சித் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மின் கட்டணங்களை உயர்த்துவதற்கு இப்போது வாய்ப்பு இல்லை. ஆகவேதான், வரவு செலவு கணக்கை வாரியம் தாக்கல் செய்யவில்லை என்று நினைக்கிறோம்” என்றார்கள்.

மின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை?
#DoubtOfCommonMan