Published:Updated:

மாநிலங்களவை சுற்றறிக்கை: ``நாடாளுமன்றத்திலிருந்து காந்தி சிலையையும் ஏன் அகற்றக்கூடாது?" - மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா

``நாடாளுமன்ற வளாகத்திலிருந்து காந்தி சிலையையும் ஏன் அகற்றக்கூடாது? அப்படியே அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)-ஐயும் நீக்கிவிடுங்கள்" - மஹுவா மொய்த்ரா

மாநிலங்களவை சுற்றறிக்கை: ``நாடாளுமன்றத்திலிருந்து காந்தி சிலையையும் ஏன் அகற்றக்கூடாது?" - மொய்த்ரா

``நாடாளுமன்ற வளாகத்திலிருந்து காந்தி சிலையையும் ஏன் அகற்றக்கூடாது? அப்படியே அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)-ஐயும் நீக்கிவிடுங்கள்" - மஹுவா மொய்த்ரா

Published:Updated:
மஹுவா மொய்த்ரா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், `ஊழல், கோழை, சர்வாதிகாரி, திறமையற்றவர்' உள்ளிட்ட வார்த்தைகளை இனி நாடாளுமன்ற அவைகளில் பயன்படுத்தக்கூடாது என, மக்களவைச் செயலகம் நேற்று அறிவித்திருந்தது.

இதற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துவந்த நிலையில், மாநிலங்களவைச் செயலகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், `எம்.பி-க்கள் இனி, எந்தவொரு ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் அல்லது எந்தவொரு மத விழாவை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்ற வளாகத்தைப் பயன்படுத்த முடியாது' எனக் கூறப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தின் சுற்றறிக்கை
நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தின் சுற்றறிக்கை

இந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பை, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது குறித்து மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ``நாடாளுமன்ற வளாகத்திலிருந்து காந்தி சிலையை ஏன் அகற்றக்கூடாது? அப்படியே அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)-ஐயும் நீக்கிவிடுங்கள்" என மாநிலங்களவையின் சுற்றறிக்கையைப் பகிர்ந்து கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் மற்றொரு ட்வீட்டில், ``நான்கு நாள்களுக்கு முன்னர்தான் வாரணாசி எம்.பி, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் மத சடங்கு செய்தார்" என பிரதமர் மோடியைக் குறிப்பிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

முன்னதாக, நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் விவகாரத்தில், ``நாடாளுமன்றம் தடை செய்திருக்கும் வார்த்தைகளின் புதிய பட்டியலில் `சங்கி' என்ற வார்த்தை இல்லை. பா.ஜ.க எவ்வாறு இந்தியாவை அழிக்கிறது என்பதை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளையும் அரசு தடைசெய்துவிட்டது" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.