Published:Updated:

அ.தி.மு.க: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஆறு பேர் மட்டும் ஏன்?#TNElection2021

அ.தி.மு.க
அ.தி.மு.க

முதலமைச்சார் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஆறு பேரின் பெயர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பஞ்சாயத்துகளே இன்னும் முடிவுறாத நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு எதிர்முகாமுக்கு கிலியூட்டிருக்கிறது அ.தி.மு.க.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையொட்டி ஆளுங்கட்சியான அ.தி.மு.க சார்பில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு விநியோகிகம் தொடங்கப்பட்டு மார்ச் 3-ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன. ஒட்டுமொத்தமாக 8,240 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணபித்திருந்தனர். அவர்களுக்கு ஒரேகட்டமாக நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. அதே சூட்டோடு இன்று மதியம் முதல் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் முதலமைச்சார் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஆறு பேரின் பெயர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

அ.தி.மு.க வேட்பாளர்  நேர்காணல்
அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்

அந்தவகையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் தொகுதியிலும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலும், எம்.எல்.ஏ தேன்மொழி - நிலக்கோட்டை (தனி) தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்த் திருவிழா கிடாவெட்டும், அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணலும் - ஒரு ஸ்பாட் விசிட்!

வெள்ளிக்கிழமை சுக்ரனுக்கு உகந்த நாள் என்பதால் ஆறு பேர் மட்டும் சென்டிமென்ட்டாக அறிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதிலும் இந்த ஆறு பேர் என்பது, ஆறு சமூகங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம்
எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம்

அதேபோல, ஆறு வேட்பாளர்களும் 2016 சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகத் தன் கைப்படவே இந்த ஆறு பேரின் பெயரையும் டிக் செய்ததாகவும் அ.தி.மு.க வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு