Published:Updated:

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ரேஸில் சன்னியிடம் சித்து தோற்றது எங்கே?

ராகுல் - சித்து - சன்னி ( ட்விட்டர் )

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார களம் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பஞ்சாப்பில் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது காங்கிரஸ். சித்துவும் இந்தப் போட்டியில் இருந்தநிலையில் சன்னி தேர்வான பின்னணி என்ன?

பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ரேஸில் சன்னியிடம் சித்து தோற்றது எங்கே?

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார களம் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பஞ்சாப்பில் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது காங்கிரஸ். சித்துவும் இந்தப் போட்டியில் இருந்தநிலையில் சன்னி தேர்வான பின்னணி என்ன?

Published:Updated:
ராகுல் - சித்து - சன்னி ( ட்விட்டர் )

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளக் காங்கிரஸும் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் மிகத் தீவிரமாகப் போராடி வருகிறார்கள். பஞ்சாபில் பல்வேறு குழப்பங்களுக்கிடையே காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.

இதுவரை முதல்வர் வேட்பாளரை அறிவித்துத் தேர்தலைச் சந்திக்காத காங்கிரஸ் கட்சி இப்போது அதை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நவ்ஜோத் சிங் சித்து, சரண்ஜித் சிங் சன்னி ஆகிய இருவரும் முதல்வர் வேட்பாளர் ரேஸில் இருந்தனர். இந்தநிலையில் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வாகி இருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி, சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சரண்ஜித் சிங்கின் சகோதரர், சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் என்பன உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் சரண்ஜித் சிங்குக்கு எதிராக எழுந்தன. ஆனாலும் காங்கிரஸ் தலைமை சரண்ஜித் சிங்கையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

சரண்ஜித் சிங் சன்னி - பிரசாரம்
சரண்ஜித் சிங் சன்னி - பிரசாரம்
ட்விட்டர்

பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் தேர்வில் நவ்ஜோத் சிங் சித்து ஏன் ஒதுக்கப்பட்டார். சன்னியை முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்ததன் பின்னணியில் இருக்கும் அரசியல் காரணங்கள் என்ன? இந்த வியூகம் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எந்தளவு பயன்படும் என்பவை குறித்து ஓர் அலசல்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பஞ்சாப் மாநில வாக்காளர்கள் பட்டியலில் 32 சதவிகிதம் மக்கள் தலித் பிரிவினைச் சேர்ந்தவர்கள். சரண்ஜித் சிங் தலித் தலைவர். முதன்முறையாக முதல்வராக அறிவிக்கப்பட்ட போது பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். பா.ஜ.க., ஆம் ஆம்தி ஆகிய கட்சிகள் மீண்டும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே முதல்வராக நிறுத்தியிருக்கிறார்கள். இவர்களிலிருந்து வேறுபடுத்துக் காட்டவும் தலித் மக்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் பெறவே, தலித் சீக்கியரை முதல்வர் வேட்பாளராகக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது” என்கிறார்கள்.

``முதன்முதலாக முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டபோது தற்காலிகமான தேர்வாகவே பார்க்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் சித்து-வைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் பிரச்னை, மத்திய அரசு கொடுத்த நெருக்கடி இவற்றுக்கு இடையே எம்.எல்.ஏ-க்களை அரவணைத்து இவ்வளவு நாளாக ஆட்சியைத் திறம்பட நடத்தியதும் சன்னியை மீண்டும் முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்ய முக்கியக் காரணங்களாக இருந்திருக்கும்” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

வேட்புமனு தாக்கல் செய்யும் சன்னி
வேட்புமனு தாக்கல் செய்யும் சன்னி
ட்விட்டர்

``தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பலர் உறுப்பினர்களாக இருக்கும் தேரா சாக்காண்ட் பல்லான் என்ற அமைப்பில் ஒருநாள் இரவு சரண்ஜித் சிங் தங்கித் திரும்பியிருக்கிறார். பஞ்சாபில் டோபா என்ற மண்டலத்தின் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய அமைப்பாகத் தேரா சாக்காண்ட் பல்லான் உள்ளது. அங்கு சென்று சன்னி தங்கித் திரும்பியிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றது. இதனால் தலித் வாக்குகள் காங்கிரஸ்-க்குச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலுசேர்த்திருக்கின்றன.” என்கின்றனர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்றொரு பக்கம் தன்னைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனச் சித்து அழுத்தும் கொடுத்திருக்கிறார். சித்துவிற்கு இப்போதும் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. அம்ரிந்தர் சிங்கையே முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கும் அளவுக்குக் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குப் பெற்றவர் சித்து. ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ராகுலும் காங்கிரஸ் தலைமையும் தற்போது சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி சன்னி பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும், இந்தத் தேர்தலில் முடிவைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை அறுவடை செய்வதில் தான் அனைத்துக் கட்சிகளும் கவனம் செலுத்துகின்றன. அதற்கு முதல்வர் வேட்பாளர் தேர்விலிருந்தே விதை போடத் தொடங்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. எனவேதான் சித்துவின் எதிர்ப்பையும் மீறி சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராகக் காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது.” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்...

கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் சன்னி
கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் சன்னி
ட்விட்டர்

177 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்குப் பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸின் இந்த மூவ் அரசியலில் எந்தளவுக்கு உதவியது என்பது அன்று தெரியும்... அதுவரை பொறுத்திருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism