Published:Updated:

உள்ளாட்சியில் விலகி நின்ற சசிகலா... அவரின் அடுத்த திட்டம்தான் என்ன?!

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

'எங்கள் சின்னம்மா காத்திருந்த நாள் நெருங்கிவிட்டது. இவ்வளவு நாள் அவர்கள் அமைதியாக இருந்ததற்கான விடை விரைவில் கிடைத்துவிடும்' எனப் பொடிவைத்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள்.

உள்ளாட்சியில் விலகி நின்ற சசிகலா... அவரின் அடுத்த திட்டம்தான் என்ன?!

'எங்கள் சின்னம்மா காத்திருந்த நாள் நெருங்கிவிட்டது. இவ்வளவு நாள் அவர்கள் அமைதியாக இருந்ததற்கான விடை விரைவில் கிடைத்துவிடும்' எனப் பொடிவைத்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஆங்காங்கே சசிகலாவை அதிமுக-வுக்கு தலைமையேற்க அழைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதும், விழுப்புரம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் சசிகலாவைச் சந்தித்ததும் இலைக் கட்சி வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியிருக்கின்றன. இந்த நிலையில், 'எங்கள் சின்னம்மா காத்திருந்த நாள் நெருங்கிவிட்டது. இவ்வளவு நாள் அவர்கள் அமைதியாக இருந்ததற்கான விடை விரைவில் கிடைத்துவிடும்' எனப் பொடிவைத்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள்.

சசிகலா
சசிகலா

சசிகலா பெங்களூர் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு அதிமுக-வின் முன்னணி நிர்வாகிகள் அவரைச் சென்று சந்திப்பார்கள் என்று அவரின் ஆதரவாளர்களால் சொல்லப்பட்டது. ஆனால், ஒருசில கீழ்ம்ட்ட நிர்வாகிகள் மட்டும் சென்று சந்தித்தார்களே தவிர அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் யாரும் சந்திக்கவில்லை. தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சேர்வார்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சேர்வார்கள் எனப் பல்வேறு காலகட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் இணைவார்கள் என்று சசிகலாவின் ஆதரவாளர்களால் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அறிவித்த சசிகலா, முடிவுகள் வெளியான பிறகு கட்சி நிர்வாகிகளுடன் போனில் பேசுவது, கடிதம் எழுதுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்துவந்தார். தொடர்ந்து, அதிமுக கொடிகட்டிய காரில் பயணிப்பது, கொடி ஏற்றுவது, விழா நடத்துவது, சுற்றுப்பயணம் என பிஸியாக இருந்தார். ஆனால், ஒருசில அமமுக நிர்வாகிகள் அவரைச் சென்று சந்தித்தார்களே தவிர, அதிமுக நிர்வாகிகள் யாரும் சென்று சந்திக்கவில்லை. தொடர்ந்து நடந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அமமுக-வினர் அவரின் உதவியை எதிர்பார்த்தும் அமைதியாகவே இருந்தார் சசிகலா.

சசிகலா
சசிகலா

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சென்னை, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் கட்சிக்குத் தலைமையேற்க சசிகலாவை அழைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 'போதும், போதும்... தோற்றது போதும், தலைமையேற்க வா தாயே' என்று மதுரையைச் சேர்ந்த முனீஸ் என்பவர் ஒட்டிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திண்டிவனம் சேகர், ஷெரீப், தம்பி ஏழுமலை ஆகியோர் சசிகலாவைச் சந்தித்து அதிமுக-வுக்குத் தலையேற்க அழைத்திருப்பது கட்சிக்குள் ஒரு பூகம்பத்தை உண்டாக்கியுள்ளது.

அதிமுக கொடிகட்டிய காரில் சசிகலா
அதிமுக கொடிகட்டிய காரில் சசிகலா

ஆனால், `எங்களுக்கான காலம் நெருங்கிவிட்டது. இன்னும் கொஞ்ச நாள்தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் சின்னம்மாவின் தலைமையில்தான் எதிர்கொள்வோம். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்' என அடித்துச் சொல்கிறார்கள் சசிகலாவின் ஆதரவாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அவரின் ஆதரவாளர்கள் சிலர்,

``ஆரம்பத்திலிருந்து சின்னம்மா ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். வலுக்கட்டாயமாக எதுவும் நடக்காமல் இயல்பாகவே கட்சி நிர்வாகிகள் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல, கட்சித் தலைமைக்கு, தான் தேவை என்பதை நிர்வாகிகள் உணர்ந்து தன்னிடம் வரும்போது அதை ஏற்கலாம் என்றும் காத்திருந்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சி நலனுக்காக அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்த சின்னம்மா, தேர்தலில் தோல்வியுற்ற பிறகு பொறுக்க முடியாமல் மீண்டும் களத்துக்கு வந்தார்.

அதிமுக தொண்டர்கள்
அதிமுக தொண்டர்கள்

தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மண்ணைக் கவ்விவிட்டது அதிமுக. நிர்வாகிகள் அனைவரும் வலுவான தலைமை இல்லாமல் சோர்ந்து போயுள்ளனர். சின்னம்மா ஒருவர்தான் அந்த இடத்தை நிரப்ப முடியும் எனவும் சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதுமட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலிலேயே சின்னம்மா, அமமுக, அதிமுக ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்தித்திருந்தால் இன்னும் கணிசமான இடங்களைப் பிடித்திருக்க முடியும். அமமுக-வால் மட்டுமே 20 தொகுதிகளை இழந்திருக்கிறது அதிமுக.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

மத்திய பாஜக தலைமை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அப்போது எடப்பாடி பழனிசாமி, சின்னம்மாவையும் தினகரனையும் கட்சிக்குள் சேர்க்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். அமமுக-வுடன் கூட்டணிக்குக்கூட அவர் ஒப்புக்கொள்ளவில்லை. கண்டிப்பாக ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என அமித் ஷாவுக்கு உத்தரவாதம் கொடுத்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் மத்திய பாஜக தலைமை சொன்னதுபோலவே வந்தன. தொடர்ந்து இரண்டு தேர்தல்களிலும் அதிமுக-வை வழிநடத்த இவர்கள் சரியான தலைமை இல்லை என்கிற எண்ணம் டெல்லிக்கு உருவாகிவிட்டது.

2024 தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியைத்தான் பாஜக வலுவாக நம்பிக்கொண்டிருக்கிறது. அதனால், சின்னம்மா உள்ளே வந்தால் சரியாக இருக்கும் என நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சின்னம்மாவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி வரும்போதுகூட சின்னம்மா அவரிடம் இது குறித்துப் பேசியிருக்கிறார். இன்னும் பல வழிகளில் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். டெல்லியிலிருந்து சிக்னல் விரைவில் கிடைத்துவிடும். நிச்சயமாக, சின்னம்மா அதிமுக-வுக்குள் வருவார். அவர் தலைமையில்தான் நாங்கள் 2024 தேர்தலைச் சந்திப்போம். இதில் எந்த மாற்றமும் இல்லை'' என்கிறார்கள் உறுதியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism