Published:Updated:

`தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை' - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் சிவசங்கர்.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கிவருகிறார்.

`தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை' - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கிவருகிறார்.

Published:Updated:
அமைச்சர் சிவசங்கர்.

``அரசுப் பேருந்துகள் தனியார்மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் துறையை ஏன் தனியாருக்குக் கொடுக்க வேண்டும்" என்று திட்டவட்டமாக மறுக்கிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

அரசுப் பேருந்து
அரசுப் பேருந்து
விகடன்

பெரம்பலூர் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பிலான மறுசீரமைப்பு குடிநீர்த் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், ``அரசுப் பேருந்துகள் தனியார்மயமாக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றனவே?" என்று கேள்வி எழுப்பியதற்கு,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அரசுப் பேருந்துகள் தனியார்மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு முதல்வர் வழங்கிவருகிறார்கள். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடரும்.

பேட்டியளிக்கும் சிவசங்கர்
பேட்டியளிக்கும் சிவசங்கர்

சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் துறையை ஏன் தனியாருக்குக் கொடுக்க வேண்டும்... தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடமில்லை... தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்படவிருக்கின்றன. அதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட்டு,

அதில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மூலம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். விரைவாகப் புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவுரை வழங்கியிருப்பதால் அதற்கான நடைமுறை தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர்
அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர்

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒருசில கோரிக்கைகள் மட்டும் தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்பட இருக்கிறது.” என்றார்

சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படவிருப்பதாக உலவும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ``சென்னையில் அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது.

போக்குவரத்து ஊழியர்கள்
போக்குவரத்து ஊழியர்கள்

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சென்னையில் இயக்கப்பட்ட பெரும்பாலான மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் எந்தெந்த வழித்தடங்களில் மினி பேருந்துகள் தேவை என்பதைக் கண்டறிந்து அவற்றை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.