Published:Updated:

கடலூர்: `ரஜினிகாந்தைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?’ தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்

``நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?” என்று கடலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தெரிவித்திருக்கிறார்.

கடலூர்: `ரஜினிகாந்தைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?’ தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி

``நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?” என்று கடலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
உதயநிதி ஸ்டாலின்

இரண்டாம்கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக இன்று கடலூர் வந்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதலில் 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அந்தப் பகுதி மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

மீனவர்களிடம் குறை கேட்கும் உதயநிதி
மீனவர்களிடம் குறை கேட்கும் உதயநிதி

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``என்னுடைய முதல் பயணத்தில் நான் பேசப் பேச, என்னைக் கைதுசெய்துகொண்டே இருந்தனர். பொதுக் கூட்டங்களிலும், வெளியிலும் என்னைப் பேச அனுமதிக்காமல் தொடர்ந்து தடுத்தனர். தொடர்ந்து கூட்டத்தை அரங்கத்துக்குள் நடத்திக்கொள்ளும்படி கூறினார்கள் காவல்துறையினர். ஆனால், தற்போது தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க வேண்டுமென்பதற்காகவே கொரோனா தளர்வுகளை அறிவித்திருக்கின்றனர். தி.மு.க பொதுக் கூட்டத்தை நடத்திவிடக் கூடாது என்பதற்காக இத்தனை நாள்கள் தடை விதித்திருந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க-வின் பிரசாரத்துக்கு மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, தற்போது முதல்வர் மட்டும் தனியாக பிரசாரத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறார்‌. அவருடன் மற்ற அரசியல் தலைவர்கள் யாரும் சென்றதுபோலத் தெரியவில்லை. ஆனால், அ.தி.மு.க-விலிருந்து யார் பிரசாரத்துக்குச் சென்றாலும் கேள்வி கேட்க மக்கள் தயாராக இருக்கின்றனர். கடந்த ஒன்பது ஆண்டு காலமாகத் தமிழக மக்கள் பழிவாங்கப்பட்டு, அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா உட்பட அனைத்திலும் ஊழல் செய்த இந்த அ.தி.மு.க ஆட்சிக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தெளிவான பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கின்றனர்.

உதயநிதி
உதயநிதி

தேவனாம்பட்டினம் மீனவர்கள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அதில் சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கலைஞர் வீடு கட்டிக் கொடுத்தார். ஆனால், அந்த வீடுகளைத் தற்போது ஒரு சுனாமி வீடு ஒதுக்கீடு செய்வதற்கு ரூ.30,000 முதல் 50,000 வரை பணம் கேட்பதாக மீனவ மக்கள் குற்றம்சுமத்தியிருக்கின்றனர்” என்றவரிடம், `பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ.2,500 ரொக்கப் பரிசு அறிவித்திருக்கிறதே..?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ``அந்தத் தொகையை மக்களுக்குக் கொடுக்கும்படி கூறியதே தி.மு.க-தான். கொரோனா தொற்று தொடங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.5,000 கொடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் வலியுறுத்திவந்தார். ஆனால், அப்போதெல்லாம் நிதியில்லை என்று கூறிவந்த தமிழக அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் 2,500 ரூபாயை கொடுக்கிறது. ஆனால், இந்தப் பணம் மக்களுக்கு பத்தாது. மேலும் 2,500 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்றார்.

தொடர்ந்து `ரஜினியின் அரசியல் வருகையைப் பார்த்து தி.மு.க தலைவர் பயப்படுவதாக குஷ்பு கூறியிருக்கிறாரே..?’ என்ற கேள்விக்கு, ``அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர். தி.மு.க தலைவருடன் நட்பு பாராட்டக்கூடியவர். அப்படி இருக்கும்போது நாங்கள் அவரை பார்த்து ஏன்பயப்பட வேண்டும்?

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் என்ன முடிவை எடுத்தார்களோ அதேபோல இந்தத் தேர்தலிலும் எடுப்பார்கள் என நம்புகிறேன். கடந்த தேர்தல் பிரசாரத்தில் இருந்த மக்கள் எழுச்சியில் 90% தற்போது இருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாங்களும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஆனாலும் தி.மு.க தேர்தல் பிரசாரங்களில் மக்களின் எழுச்சியைப் பார்க்க முடிகிறது” என்றார்.