Published:Updated:

தமிழகத்தில் தமிழிசை இல்லாதது தமிழ்கூறு நெட்டிசன்களுக்கு பேரிழப்பு!

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan

அவரளவுக்கு விமர்சனங்களையும் கிண்டல்களையும் புன்னகையோடும் போர்க்குணத்தோடும் எதிர்கொண்ட ஓர் அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை.

தமிழகத்தில் இனி "தாமரை மலர்ந்தே தீரும்!" என்ற ஆவேசக் குரலை இன்னும் சில ஆண்டுகளுக்குக் கேட்க முடியாது. அக்கா தமிழிசை செளந்தரராஜன் மாண்புமிகு ஆளுநராகிவிட்டார். அதுவும் பக்கத்திலேயே இருக்கிற தெலங்கானாவுக்கே அவரை ஆளுநராக்கி அழகு பார்த்திருக்கிறார் பிரதமர் மோடி. எப்போதுமே தாமரைபோல மலர்ந்திருக்கும் தமிழிசையின் முகம் இன்னும் பெரிதாக மலர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2k3N5Bi

தமிழகத்தைச் சேர்ந்த நரசிம்மன் ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி ஆளுநராகவும், புதிதாக உதயமான தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநராகவும் இருந்துவந்தார். இப்போது அவருடைய இடத்தை மீண்டும் ஒரு தமிழராகத் தமிழிசை நிரப்பியுள்ளார். நரசிம்மனுக்குப் பூர்வீகம் தமிழகமாக இருந்தாலும் தமிழராக அறியப்பட்டவரில்லை. ஆனால் தமிழிசையைத் தெரியாத தமிழரே இருக்க முடியாது. அதிலும் தமிழ்கூறு நெட்டிசன்களுக்கு தமிழகத்தில் தமிழிசை இல்லாதது பேரிழப்புதான்.

தமிழிசையை ஆளுநராக நியமித்திருப்பதால் தெலங்கானாவில் வசிக்கும் ஏழு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் சமூக ஊடகப்பதிவுகள் சான்றளிக்கின்றன. "உங்க சித்தப்பாகிட்ட சொல்லி ஹைதராபாத்தில் வசந்த் அண்ட் கோ ஆரம்பிக்கச் சொல்லுங்க மேடம்!" என்று அங்கே வசிக்கும் ஒரு தமிழர் முகநூலில் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ஆனால் எதையும் புன்னகையோடு எதிர்கொள்வார் தமிழிசை. அவரின் அசுர பலம் அதுதான்.

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan

அவரளவுக்கு விமர்சனங்களையும் கிண்டல்களையும் புன்னகையோடும் போர்க்குணத்தோடும் எதிர்கொண்ட ஓர் அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை. ஓர் உதாரணமாக... கடந்த ஆண்டுக்கான விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவரிடம், "எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவர் என்ற விருதை யாருக்குக் கொடுப்பீர்கள்?" என்று கேட்டதற்கு, "அதை நானே வாங்கிக்கொள்கிறேன்!" என்று புன்னகையுடன் பதிலளித்தவர்.

தமிழகத்தில் பா.ஜ.கவால் காலூன்ற முடியாததற்கு மாநிலத்தலைமை ஒரு காரணமேயில்லை. அது சித்தாந்த ரீதியிலான யுத்தம். பா.ஜ.க-வின் கொள்கைகளுக்கும் தமிழர்களுக்கும் தூரம் அதிகம். யார் தலைவராக இருந்தாலும் பா.ஜ.க-வைத் தமிழர்கள் நிராகரிக்கத்தான் செய்வார்கள்.

தமிழிசை காலத்தில்தான் பா.ஜ.க-வின் பெயர் கொஞ்சம் பரவலானது. பெருகிவரும் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் அதற்கு முக்கியமான காரணம். தன் காலத்தில் 44 லட்சம் உறுப்பினர்களைத் தமிழகத்தில் பா.ஜ.க-வில் சேர்த்ததாகச் சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன். அது உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால் இவரைப்போல இணக்கமான இன்முகமுடைய இன்னொரு தலைவர் தமிழக பா.ஜ.க-வுக்குக் கிடைப்பாரா என்பது சந்தேகம்தான்.

Tamilisai Soundararajan
Tamilisai Soundararajan

ஒருசில நேரங்களில் வரம்பு மீறி எதிர்க்கட்சிகளை அவர் விமர்சிக்கிறார் என்று ஒரு விமர்சனம் உண்டு. ஆனால், ஹெச்.ராஜா அளவுக்கு அவர் எல்லை மீறியதில்லை. மேலும் மாற்றுக்கட்சித் தலைவர்களுக்கும் அவர்மீது அன்பு உண்டு. 'ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்புமகள் தமிழிசைக்கு வாழ்த்துகள்' என்ற கி.வீரமணியின் வார்த்தைகள் ஓர் உதாரணம்.

- தமிழிசை செளந்தரராஜன் குறித்து சேவியர் செல்வக்குமார் எழுதிய சிறப்புக் கட்டுரையின் சுருக்கமான வடிவம்தான் இது. ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ள முழுமையான கட்டுரையை வாசிக்க > தெலங்கானாவில் ஒலிக்கும்... தமிழிசை!

https://www.vikatan.com/government-and-politics/politics/tamilisais-role-as-the-governor-of-telangana

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு