Published:Updated:

`இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு பாஜக ஆதிக்கம்தான்' - அமித் ஷாவின் நம்பிக்கைக்குக் காரணம் என்ன?

அமித் ஷா ( ட்விட்டர் )

`அடுத்த 30 - 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க-வின் காலம்தான். அந்தக் காலம், உலகுக்கு இந்தியா தலைமை தாங்கும் நிலையை உருவாக்கும்’ என்று, எதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார்?

`இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு பாஜக ஆதிக்கம்தான்' - அமித் ஷாவின் நம்பிக்கைக்குக் காரணம் என்ன?

`அடுத்த 30 - 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க-வின் காலம்தான். அந்தக் காலம், உலகுக்கு இந்தியா தலைமை தாங்கும் நிலையை உருவாக்கும்’ என்று, எதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார்?

Published:Updated:
அமித் ஷா ( ட்விட்டர் )

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் தெலங்கானாவில் பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் ஜூலை 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அடுத்த 30 - 40 ஆண்டுகள் பா.ஜ.க-வின் காலம்தான். அந்தக் காலம், உலகுக்கு இந்தியா தலைமை தாங்கும் நிலையை உருவாக்கும்’ என்றார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இதே கருத்தை சில மாதங்களுக்கு முன்பு, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரும் கூறினார். ‘அடுத்த சில தசாப்தங்களுக்கு இந்திய அரசியலில் செல்வாக்கு மிகுந்த கட்சியாக பா.ஜ.க விளங்கும். முதல் நாற்பது ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி எப்படி ஒரு செல்வாக்குமிக்க கட்சியாக விளங்கியதோ, அதேபோல அடுத்த 40 ஆண்டுகளுக்கு இந்திய அரசியலின் மையமாக பா.ஜ.க இருக்கும்’ என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவருகிறார். இந்த நிலையில், அங்கு தனது தேசிய செயற்குழுக் கூட்டத்தை பா.ஜ.க நடத்தியதும், அதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றதும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அமித் ஷாவின் கருத்து ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

``இந்திய அரசியலில் அடுத்த 30 - 40 ஆண்டுகளுக்கு நாங்கள்தான் கோலோச்சுவோம்’’ என்கிற செய்தியை உறுதியுடன் பதிவுசெய்த அவர், அதற்கான காரணங்களையும் முன்வைத்திருக்கிறார். வாரிசு அரசியல் என்கிற விமர்சனத்தை காங்கிரஸ் மீது பா.ஜ.க தொடர்ந்து முன்வைத்துவருகிறது. காந்தி குடும்பத்தின் பிடியில் காங்கிரஸ் இருப்பதாக பிரதமர் மோடி தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார்.

அந்த விமர்சனத்தையும் இந்தக் கூட்டத்தில் அமித் ஷா முன்வைத்திருக்கிறார். அதேபோல, சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்கள் என்கிற விமர்சனத்தையும் காங்கிரஸுக்கு எதிராக பா.ஜ.க முன்வைத்துவருகிறது. இந்த வாரிசு அரசியல், தாஜா அரசியல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்த அமித் ஷா, அதில் சாதியத்தையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். இந்த மூன்றுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்கிறார் அமித் ஷா.

மோடி
மோடி

சமீபத்தில் தேர்தல்களில் பா.ஜ.க பெற்ற வெற்றி குறித்து குறிப்பிட்ட அவர், வளர்ச்சி அரசியலுக்கும், சிறப்பான ஆட்சிக்கும் கிடைத்த நற்சான்றுதான் இந்த வெற்றிகள் என்று குறிப்பிட்டார். வட இந்தியாவில் இந்தி பேசக்கூடிய ஏழு மாநிலங்களில் வெற்றிபெற்றாலே மத்தியில் ஆட்சியமைத்துவிட முடியும் என்கிற நிலை இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த ஏழு மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. ஆனாலும், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள்... எனப் பிற மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பா.ஜ.க தீவிரமாக முயல்கிறது.

தென்னிந்தியாவிலும் பா.ஜ.க-வை வலுப்படுத்துவதற்கான திட்டத்துடன், சில வேலைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், தென்னிந்தியாவின் அரசியல் மாறுபட்டதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளும், கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியும்தான் செல்வாக்குபெற்ற கட்சிகள். அதேபோல, ஆந்திரா, தெலங்கானாவின் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும், சந்திரசேகர ராவ் தலைமையிலும் டி.ஆர்.எஸ்ஸும் வலிமைவாய்ந்த கட்சிகளாக விளங்குகின்றன. இந்தக் கட்சிகளை மீறி, கர்நாடகா நீங்கலாக தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களில் பா.ஜ.க கால்பதிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தென்னிந்தியாவில் கால் பதிக்க முடியாவிட்டாலும், இந்திய அரசியலில் பா.ஜ.க-வால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியும். அதேபோல, மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளும் பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. அதற்கான காரணங்களையும் அமித் ஷாவே குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்குள் நிலவும் கோஷ்டி அரசியல். மற்றொன்று, எதிர்க் கட்சிகளிடையே நிலவும் ஒற்றுமையின்மை.

அமித் ஷா முன்வைத்துள்ள இந்த கருத்துக்கள் யதார்த்தமானவை. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டிருந்தால், ‘பிரதமர் வேட்பாளர்’ என்று 2014-ல் முன்னிறுத்தப்பட்ட மோடி, தோல்வியைத் தழுவி, மீண்டும் குஜராத் முதல்வராகியிருப்பார். ஆனால், அவர் வெற்றிபெற்றதில் முக்கியமான பங்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதுதான் நிலைமை.

தெலங்கான பா,ஜ,க செயற்குழு கூட்டத்தில் மோடி
தெலங்கான பா,ஜ,க செயற்குழு கூட்டத்தில் மோடி
ட்விட்டர்

ஒரே ஓர் உதாரணம். பா.ஜ.க-வை எதிர்க்கக்கூடிய சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் கைகோத்திருந்தால், உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய சவாலை பா.ஜ.க-வுக்கு அது கொடுத்திருக்கும். ஆனால், அந்தக் கட்சிகள் தனித்தனி திசையில் பயணித்ததால், அது பா.ஜ.க-வின் வெற்றிக்கு வழிவகுத்தது. தேசிய அளவில் பா.ஜ.க அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து ஓர் அணியைக் கட்டுவதற்கான அரசியல் சூழல் இன்னும் கனியவில்லை என்று எதிர்க்கட்சிகள் காரணம் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதுதான் காரணமாக என்பது தெரியவில்லை. ஆனாலும், அப்படியான ஒரு சூழல் உருவாகும்வரை, அமித் ஷாவின் கூற்று உண்மையாக இருப்பதற்கே வாய்ப்பு இருக்கிறது..!