Published:Updated:

``அயோத்தியில் குண்டு வைக்கப்போவதாக பி.எஃப்.ஐ நிர்வாகி மிரட்டுகிறார்!" - பாஜக எம்.எல்.ஏ புகார்

அயோத்தி

அயோத்தியா, மதுராவில் குண்டு வைக்கப்போவதாக பி.எஃப்.ஐ உறுப்பினர் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறார் என மகாராஷ்டிரா பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் தேஷ்முக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

``அயோத்தியில் குண்டு வைக்கப்போவதாக பி.எஃப்.ஐ நிர்வாகி மிரட்டுகிறார்!" - பாஜக எம்.எல்.ஏ புகார்

அயோத்தியா, மதுராவில் குண்டு வைக்கப்போவதாக பி.எஃப்.ஐ உறுப்பினர் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறார் என மகாராஷ்டிரா பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் தேஷ்முக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
அயோத்தி

தேசிய புலனாய்வு முகமை, சென்ற மாதம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா(பி.எஃப்.ஐ) அமைப்பு தொடர்புடைய 93 இடங்களில் சோதனை நடத்தியிருந்தது. இந்த சோதனையில், பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, பி.எஃப்.ஐ மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

இந்த நிலையில் அயோத்தியா, மதுராவில் குண்டு வைக்கப்போவதாக பி.எஃப்.ஐ உறுப்பினர் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறார் என மகாராஷ்டிரா பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் தேஷ்முக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் தேஷ்முக், பி.எஃப்.ஐ தலைவர் முகமது ஷஃபி பிராஜ்தார் என்பவர்மீது போலீஸில், ``பி.எஃப்.ஐ மீதான அரசாங்கத்தின் தடை குறித்த கோபத்தின் காரணமாக, என்னுடைய தலையைத் துண்டித்து விடுவதாக மிரட்டுகிறார்" எனப் புகாரளித்திருக்கிறார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் தேஷ்முக்
பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் தேஷ்முக்
twitter

மேலும் புகாரில், அயோத்தி ராம் மந்திர், கிருஷ்ண ஜென்மபூமி மந்திர் போன்ற முக்கிய இந்துக் கோயில்களில் குண்டுவைக்கக் திட்டமிட்டிருப்பதாகவும், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் ரேடாரில் இருப்பதாகவும் பி.எஃப்.ஐ உறுப்பினர் மிரட்டியதாக, பா.ஜ.க எம்.எல்.ஏ கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து சோலாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.