Published:Updated:

அணிவகுக்கும் பிரச்னைகள்... எடப்பாடியால் மக்களை ஈர்க்க முடியுமா?

எடப்பாடி
எடப்பாடி

நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தமிழக அரசின் நிதிநிலை மோசமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதிலேயே பல்வேறு சிக்கல்கள். மத்திய அரசு தமிழக அரசுக்குக் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரித்தொகையையும் கொடுக்க வில்லை.''

'மக்களை ஈர்க்கும் வகையிலான திட்டங்களை வரிசையாக அறிவித்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கலகலப்புடன் களத்தில் இறங்கலாம் என எதிர்பார்த்த எடப்பாடிக்கு, கொரோனா ரூபத்தில் சிக்கல் வந்துவிட்டது.

'இதை எதிர்த்து எடப்பாடி என்ன செய்யப்போகிறார்?' என்கிற கேள்வி, அ.தி.மு.க-வினர் மத்தியில் எழுந்துள்ளது.

நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தமிழக அரசின் நிதிநிலை மோசமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதிலேயே பல்வேறு சிக்கல்கள். மத்திய அரசு தமிழக அரசுக்குக் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரித்தொகையையும் கொடுக்க வில்லை. இதைச் சமாளிக்கவே இப்போது மதுபான கடைகளைத் திறக்க வேண்டிய நெருக்கடியும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்னும் இரண்டு மாதங்களில் தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த பட்ஜெட்டை, திரும்பவும் மறு ஆய்வு செய்யவும் ஒரு திட்டம் இருக்கிறது. கட்டடங்கள் மற்றும் நெடுஞ்சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் கணிசமான அளவு திரும்பப் பெறப்படும்'' என்றார்.

அதேபோல் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் கிளப்பப்படுவது எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

"பன்னீர்செல்வம் மகன் விவகாரத்தையும் தேவையில்லாமல் கிளப்பியுள்ளனர். அமைச்சரின் மகன் தொழில் செய்யவே கூடாது என சட்டம் இல்லை. அந்தத் தொழிலுக்காக அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே தவறு" என்றார்கள்.

- இதுதொடர்பான ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > எதிர்கால சிக்கல்கள்... என்ன செய்யப்போகிறார் எடப்பாடி? https://bit.ly/3biE3VH

வரலாற்றில் இடம் பெறுவாரா முதல்வர் எடப்பாடி?

எடப்பாடி
எடப்பாடி

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு, `நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு' என சூளுரைத்தது. அதே அரசுதான் கடந்த மார்ச் மாதம், 'நீட் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் தோல்வியடைவதற்கான காரணத்தைக் கண்டறிய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்படும். நீட் தகுதித் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பரிசீலனை செய்யப்படும்' என அறிவித்தது. 'நீட் நிரந்தர விலக்கு' என்பதிலிருந்து 'நீட் தேர்வில் இடஒதுக்கீடு' என தலைகீழ் நிலைப்பாடு எடுத்திருக்கிறது தமிழக அரசு.

கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு அடியோடு சிதைந்துகிடக்கிறது. நாட்டிலேயே மிகச்சிறந்த தமிழகத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு, குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு என்கிற தமிழக அரசின் கொள்கையையே அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நீதிமன்றம் முடக்கிவிட்டது. சொந்த மாநிலத்துக்கான மருத்துவர்களை நியமித்துக்கொள்ளும் அதிகாரமே மாநில அரசுகளுக்கு இல்லை எனும்போது, மாநில சுயஉரிமையே கேள்விக்குறியாகிறது. முக்கியமாக, உயிர்களை பலி கொடுத்திருக் கிறோம். `நீட் தேர்வை எதிர்த்து உயிர் கொடுத்த அத்தனை பேரும் பெண் பிள்ளைகள். நீட், ஏழைகளுக்கு எதிரானது' என உயர் நீதிமன்றமே கூறிய பிறகும்கூட தமிழக அரசு விழித்துக் கொண்டபாடில்லை.

அணிவகுக்கும் பிரச்னைகள்... எடப்பாடியால் மக்களை ஈர்க்க முடியுமா?

இத்தனைக்குப் பிறகும் விடாப்பிடியாக நடத்தப்படும் இந்த 'ஒரே நாடு... ஒரே தேர்வு' முறையால் மத்திய அரசுக்குக் கிடைத்திருப்பது என்ன, தகுதியான மருத்துவ மாணவர்களா? இல்லவேயில்லை. பள்ளிக் கல்விக்கும் உயர்கல்விக்குமான தொடர்பை அறுத்துவிட்டு, பயிற்சி மையங்களில் படித்து தேர்வில் பாஸ் ஆகும் வழிமுறைகளை மட்டுமே இரண்டு மூன்று வருடங்கள் கற்றுக்கொண்டவர்கள் தான் பெரும்பாலும் இன்று மருத்துவ இடங்களுக்குத் தகுதி பெறுகிறார்கள். 2017-ம் ஆண்டு தொடங்கி இதனால் பெரிதும் பயனடைந்தது பயிற்சி மையங்கள் மட்டும்தான்.

இன்னும் வாய்ப்பிருக்கிறது.... எப்படி? - முழுமையாக வாசிக்க > நீட் வைரஸ் - 20: வரலாற்றில் இடம் பெறுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி? https://bit.ly/2SUMOPb

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு