Published:Updated:

அதிமுக-வில் இருந்து பன்னீரை நீக்க எடப்பாடி காய் நகர்த்துவது எடுபடுமா?!

எடப்பாடி - பன்னீர்

தொடர்ந்து சட்டரீதியாக மோதிவரும் ஓ.பி.எஸ் எப்படி விட்டுக்கொடுப்பார், ஒருவேளை பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால் அவரும்தானே போட்டியிடுவார் உள்ளிட்ட கேள்விகளை எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைத்தோம்..,

அதிமுக-வில் இருந்து பன்னீரை நீக்க எடப்பாடி காய் நகர்த்துவது எடுபடுமா?!

தொடர்ந்து சட்டரீதியாக மோதிவரும் ஓ.பி.எஸ் எப்படி விட்டுக்கொடுப்பார், ஒருவேளை பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால் அவரும்தானே போட்டியிடுவார் உள்ளிட்ட கேள்விகளை எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைத்தோம்..,

Published:Updated:
எடப்பாடி - பன்னீர்

``தொண்டனுக்கு ஒரு சட்டம், தலைவனுக்கு ஒரு சட்டமா?...எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். கட்சி விதியை யார் மீறினாலும் அது தவறுதான். அந்தத் தவறை யார் செய்தாலும் கட்சி தன்னுடைய கடமையைச் செய்யும்''

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், கட்சியின் செயல்பாட்டுக்கு முரண்பாடாக நடந்தால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா என பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். ஏற்கெனவே ஓ.பி.எஸ்ஸை கட்சியியிலிருந்து வெளியேற்ற இ.பி.எஸ் தரப்பு திட்டம் தீட்டிவருவதாக செய்திகள் வெளியான நிலையில், ஜெயக்குமாரின் இந்தப் பதில் அதை மேலும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அதிமுகவில் உட்கட்சிமோதல் சட்டமோதலாக உருவெடுத்து அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. `பொதுக்குழுவுத் தடைவிதிக்க வேண்டும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவேண்டும்' என ஒவ்வொரு நாளும் விதவிதமான கோரிக்கைகளுடன் நீதிமன்றக் கதவுகளை தட்டிக்கொண்டே இருக்கின்றனர், ரத்தத்தின் ரத்தங்கள். மறுபுறம், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடக்கும் ஐ.டி ரெய்டுகள் அடுத்து என்ன நடக்கும் என பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன. இதற்கிடையில் வரும் ஜூலை 11-ம் தேதி நடைபறவிருக்கும் பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ்கள் அதிமுகவினருக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அதில், பொதுக்குழுவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்த விவரங்களும் ஒருவேளை கொரோனா காரணமாக பொதுக்குழுவை நடத்த தடை உருவானால், ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என்றும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொத்தமுள்ள 16 தீர்மானங்களில் இடைக்காலப் பொதுச்செயலாளரை நடப்பு பொதுக்குழுவிலேயே தேர்வு செய்யவேண்டும் என்பதும் ஒரு தீர்மானம். அந்தவகையில், வரும் பொதுக்குழுவிலேயே எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்தும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பும் இந்தப் பொதுக்குழுவிலேயே தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. ஆனால், தொடர்ந்து சட்டரீதியாக மோதிவரும் ஓ.பி.எஸ் எப்படி விட்டுக்கொடுப்பார், ஒருவேளை பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால் அவரும்தானே போட்டியிடுவார் உள்ளிட்ட கேள்விகளை எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைத்தோம்..,

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

``கட்சியில் இருந்தால்தானே அவர் போட்டியிடுவார்'' எனக் கூலாக ஆரம்பித்தவர்கள் விரிவாகப் பல விஷயங்களைப் பேசினர்.

``கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினால், கட்சியை விட்டு நீக்கலாம் என்று எங்கள் பை லாவிலேயே இருக்கிறது. நீதிமன்றப் படிக்கட்டுகளுக்கு ஓ.பி.எஸ் ஏறிய உடனேயே அதைச் செய்திருக்கமுடியும். ஆனால், தேவையில்லாமல் ஒரு குழப்பத்தை உண்டு பண்ண வேண்டாம் என்பதாலேயே அமைதி காத்தோம். கட்சியில் பெரும்பாலானவர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர் தொடர்ச்சியாக நடந்துகொண்டால், நிச்சயமாக கட்சியை விட்டு நீக்கப்படுவார். சசிகலா, தினகரனுக்கு நடந்தது நாளை ஓ.பி.எஸ்ஸுக்கும் நிச்சயமாக நடக்கும். அவரைக் கட்சியை விட்டு நீக்கினால் என்ன மாதிரியான பின்விளைவுகள் ஏற்படும், அதை எப்படிச் சமாளிப்பது என்பதுவரை பேசி முடிவாகிவிட்டது.

அ.திமு.க தொண்டர்களின் அடிநாதமாக இருப்பது தி.மு.க எதிர்ப்பு. அதிலிருந்து ஓ.பி.எஸ் எப்போதோ விலகிவிட்டார். அவரைக் கட்சியில் வைத்திருந்தால் கட்சிக்குப் பின்னடைவுதான். ஒருபுறம் தி.மு.க என்றால் மறுபுறம் பா.ஜ.கவிடம் மொத்தமாக சரண்டர் ஆகிவிடுகிறார். இந்த இரண்டு விஷயங்களை முன்னிறுத்தியே அவரைக் கட்சியிலிருந்து காலிசெய்யமுடியும். எடப்பாடி பழனிசாமி சொல்லாமல், தன்னிச்சையாக இதுபோன்ற விஷயங்களை ஜெயக்குமார் பேசுவதற்கு வாய்ப்பில்லை. நிச்சயமாக அவர் அனுமதியோடு இல்லையென்றால் அவர் சொல்லித்தான் பேசியிருப்பார். இடைக்காலப் பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டுவிட்டால், பொதுச் செயலாளருக்கான அனைத்து அதிகாரமும் அவருக்கு வழங்கப்படும். அதை வைத்தே, ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களைக் கட்சியை விட்டு நீக்கும் படலம் ஒவ்வொன்றாக ஆரம்பமாகும். கொஞ்ச நாளில் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஆவார் எடப்பாடி பழனிசாமி'' என்கிறார்கள்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

இந்த விவகாரம் குறித்து, ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜிடம் பேசினோம்,

``அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது பொதுச்செயலாளருக்கு இணையான ஒரு பதவி. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவர் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்கள். அவரை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஐந்தாண்டுகளுக்கு அவர் தேர்தெடுக்கப்பட்டவர். தேர்தல் நடத்தப்பட்டு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. கட்சியில் மற்றவர்கள் தவறு செய்தால் அவர்களை நீக்குவதற்கான அதிகாரமே அண்ணன் ஓ,பி.எஸ்ஸிடம்தான் இருக்கிறது. கட்சியை விட்டு அவரை வெளியேற்ற சில சதிவேலைகள் நடக்கின்றன. ஆனால், அது ஒருபோதும் நடக்காது. 90 சதவிகித தொண்டர்களின் ஆதரவு அண்ணன் ஓ.பி.எஸ்ஸுக்குத்தான் இருக்கிறது. அவர்தான் அதிமுகவை வழிநடத்துவார். இதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை'' என்கிறார் உறுதியாக.