Published:Updated:

பஞ்சாப்: ``சண்டிகர்மீது மத்திய அரசு உரிமை கோருவதற்கு எதிராகக் கடுமையாகப் போராடுவேன்!”- பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அதிகாரிகளின் நியமனம் தொடர்பான விதிகளை மாற்றியமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, பஞ்சாப் அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

பஞ்சாப்: ``சண்டிகர்மீது மத்திய அரசு உரிமை கோருவதற்கு எதிராகக் கடுமையாகப் போராடுவேன்!”- பகவந்த் மான்

அதிகாரிகளின் நியமனம் தொடர்பான விதிகளை மாற்றியமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு, பஞ்சாப் அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

Published:Updated:
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகார மன்ற உறுப்பினர்கள் மற்றும் நீர்ப்பாசன உறுப்பினர்கள் நியமனத்துக்கான விதிகளை அண்மையில் மத்திய அரசு திருத்தியது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் அவர்கள் இந்த மாநிலங்களிலிருந்து நாட்டின் எந்தப் பகுதிக்கும் மத்திய அரசால் பணிக்குத் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சட்டத் திருத்தம் தொடர்பாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``சண்டிகர் நிர்வாகத்தின் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இன்று முதல் அவர்களின் சேவைகள் மத்திய சிவில் சர்வீஸ் விதிகளுடன் இணைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வூதிய வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும். கல்வித்துறையில் இருப்பவர்களின் ஓய்வு வயது 65-ஆக உயர்த்தப்படும். மேலும், பெண் ஊழியர்களுக்குக் குழந்தை பராமரிப்பு விடுப்பு தற்போது ஓராண்டுக்கு பதிலாக இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும்" என அறிவித்தார்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

இதுவரை, சண்டிகர் ஊழியர்கள் பஞ்சாப் சிவில் சர்வீஸ் விதிகளின் கீழ் இருந்தனர். இந்த நிலையில், அதிகாரிகளின் நியமனம் தொடர்பான விதிகளை மாற்றியமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தற்போது பஞ்சாப் அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

பஞ்சாப் அகாலி தளம் தலைவர் தல்ஜித் சீமா இந்த முடிவை விமர்சித்து தனது ட்விட்டரில், ``சண்டிகரில் உள்ள ஊழியர்கள்மீது மத்திய அரசு விதிகளைத் திணிக்கும் முடிவு, சட்டத்தை மீறுவதாகும். மேலும் இது மறுபரிசீலனை செய்யப்படவேண்டிய ஒன்று. இதன் பொருள் பஞ்சாப்புக்கான மூலதனத்தின் உரிமை என்றென்றும் மறுக்கப்படும் என்பதாகும். பி.பி.எம்.பி-யின் மாற்றங்களுக்குப் பிறகு இது பஞ்சாப்பின் உரிமைகளுக்கு மற்றொரு பெரிய அடி” எனப் பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பக்வந்த் மான்
பக்வந்த் மான்

காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா, ``இந்தப் பிரச்னையை, மத்திய அரசிடம் கொண்டு செல்ல, மாநிலத்தைச் சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி-க்களிடம் வலியுறுத்துகிறேன். இது பஞ்சாப்பின் உரிமைகள் மீதான அத்துமீறல்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்புக்குப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ``சண்டிகர்மீது மத்திய அரசு உரிமை கோருவதற்கு எதிராக பஞ்சாப் அரசாங்கம் கடுமையாகப் போராடும். மத்திய அரசு சண்டிகர் நிர்வாகத்தில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைப் படிப்படியாகத் திணித்துவருகிறது.

இது பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம் 1966-க்கு எதிரானது. பஞ்சாப் சண்டிகரின் மீதான அதன் உரிமைக் கோரிக்கைக்காக வலுவாகப் போராடும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism