Published:Updated:

`வங்கி மோசடி மன்னன்’ நிரவ் மோடி இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவாரா?!

நிரவ் மோடி

வங்கியில் கடனாக வாங்கிய ரூ.13 ஆயிரம் கோடியைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய வைர வியாபாரி நிரவ் மோடி இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவாரா?

`வங்கி மோசடி மன்னன்’ நிரவ் மோடி இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவாரா?!

வங்கியில் கடனாக வாங்கிய ரூ.13 ஆயிரம் கோடியைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய வைர வியாபாரி நிரவ் மோடி இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவாரா?

Published:Updated:
நிரவ் மோடி

வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி, அதை அப்படியே ஏப்பம்விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதை இந்திய தொழிலதிபர்களில் சிலர் ஒரு டிரெண்டாக மாற்றிவிட்டனர். அந்த வகையில், விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நிரவ் மோடி உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றனர். குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடியைக் கடனாக வாங்கி மோசடி செய்தவர். இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்ற அவர், சி.பி.ஐ அளித்த புகாரில் லண்டனில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

``என்னால் கடனை அடைக்க முடியாது!'' - நிரவ் மோடி கடிதம்!
``என்னால் கடனை அடைக்க முடியாது!'' - நிரவ் மோடி கடிதம்!

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் கம்பிநீட்டிய மெகுல் சோக்சி, நிரவ் மோடியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. மெகுல் சோக்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர். இந்த வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க 2018-ம் ஆண்டு இவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச்சென்றனர். மெகுல் சோக்சி ஆன்டிகுவா தீவுக்கும், நிரவ் மோடி பிரிட்டனுக்கும் தப்பிச் சென்றார். இந்திய அரசின் வலியுறுத்தலின் அடிப்படையில், 2019-ம் ஆண்டு நிரவ் மோடி லண்டனில் கைதுசெய்யப்பட்டார். தற்போது, அவர் லண்டன் சிறையில் இருக்கிறார்.

நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. நிரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி தருமாறு நிரவ் மோடி, லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘நான் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இந்தியாவுக்கு என்னை அனுப்பினால், நான் தற்கொலை செய்துகொள்ள நேரிடும்’ என்று நிரவ் மோடி கூறியிருந்தார். அவரின் மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நிரவ் மோடி நல்ல மனநலத்துடன் இருக்கிறார். அவரின் மேல்முறையீட்டில் எந்த நியாயமும் இல்லை’ என்று கூறி மனுவை நிராகரித்தனர்.

பிரதமர் மோடியுடன் நிரவ் மோடி
பிரதமர் மோடியுடன் நிரவ் மோடி

வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய விஜய் மல்லையா உள்ளிட்ட தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பிச்செல்ல அதிகாரத்தில் இருந்தவர்கள் உதவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நிலையில், 2018-ம் ஆண்டு டாவோஸில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடியுடன் எடுக்கப்பட்ட குழுப் புகைப்படத்தில் நிரவ் மோடியும் இடம்பெற்றது பெரும் விவாதமானது.

தற்போது லண்டன் வாண்ட்ஸ்வர்த் சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டிருக்கிறார். அவரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், இனிமேல் அவருக்கான சட்ட வாய்ப்புகள் எதுவும் இல்லை. விரைவில் அவர் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 நிரவ் மோடி
நிரவ் மோடி

ஏற்கெனவே, நிரவ் மோடியின் 39 சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், இந்த 39 சொத்துகளின் மதிப்பு வெறும் ரூ.500 கோடிதான். நிரவ் மோடி கடன் வாங்கியதோ ரூ.13,000 கோடி.

ஆரம்பத்தில், வாங்கிய கடனை நிரவ் மோடி திருப்பிச் செலுத்தவில்லை என்று பிரச்னை எழுந்தபோது, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘நான் வங்கிக்குச் செலுத்தவேண்டிய தொகை ரூ.5,000 கோடி மட்டும்தான். ஆனால், சி.பி.ஐ-யிடம் தவறான புகாரை வங்கி அளித்துள்ளது. இதனால், எனது வர்த்தக நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் முடங்கியுள்ளன. வங்கியின் தவறான புகாரால், கடனில் சம்பந்தப்படாத என் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

வங்கியில் பெறப்பட்ட கடன் தொகைக்கு குறிப்பிட்ட சொத்துகளை அடமானமாக வைத்திருக்கிறோம். என் சொத்துகளின் மதிப்பு ரூ.6,500 கோடி.  நாங்கள் வங்கியில் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தும் சக்தியுடன் இருந்தோம். ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி கொடுத்த தவறான புகாரால், எங்கள் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், வங்கிக்குத் திரும்பப் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது” என்று நிரவ் மோடி கூறியிருந்தார்.

நிரவ் மோடி
நிரவ் மோடி

இந்த விவகாரத்தில், தற்போது இந்திய அரசுக்குச் சில சவால்கள் இருக்கின்றன. ஒன்று, நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவந்து சிறையில் அடைத்து, அவர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வது. மற்றொன்று, அவரிடம் வட்டியும் அசலுமாகக் கடனை வசூலிப்பது. அவரது 39 சொத்துகளின் மதிப்பு வெறும் ரூ.500 கோடிதான் என்கிற நிலையில், ரூ.13,000 கோடியையும், அதற்கான வட்டியையும் இந்திய அரசு அவரிடமிருந்து எப்படி வசூலிக்கப்போகிறது? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!