Published:Updated:

ஒன்றியத்தை அலறவிடும் தமிழ்நாடு! - ஐவர் குழுவால் செழிக்குமா மாநிலத்தின் பொருளாதாரம்?

பொருளாதார ஆலோசனைக்குழு
News
பொருளாதார ஆலோசனைக்குழு

ஒன்றிய அரசால் ஓடவிடப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட பொருளாதார நிபுணர்களைத் தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ரகுராம் ராஜன் உள்ளிட்ட இந்த உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் செழிக்க என்ன செய்யப்போகிறார்கள்?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில் முக்கியமான பல அம்சங்கள் இருந்தன. என்றாலும், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு பற்றிய அறிவிப்பு தேசிய அளவில் விவாதிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. ஏனெனில், அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார நிபுணர்களின் பின்னணி அப்படி.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜீன் டிரெஸ், முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் எஸ்.நாராயண் ஆகியோர் முதல்வரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட முக்கியம் என்னவென்றால், இந்த ஐவரில் மூன்று பேர் ஏதோ ஒருவிதத்தில் மத்திய பா.ஜ.க அரசுடன் முரண்பட்டவர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பிரதமரின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார். பின்னர், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டார். அதிகரித்துவந்த வங்கிகளின் வாராக் கடனைக் கட்டுப்படுத்த பல முக்கியமான நடவடிக்கைகள் ரகுராம் ராஜன் எடுத்தார். 2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நரேந்திர மோடி பிரதமராக வந்தார். ரகுராம் ராஜனுக்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கும் பல முரண்பாடுகள் ஏற்பட்டன.

2016-ல் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ரகுராம் ராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். ராகுராம் ராஜனை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துவந்தார். அமெரிக்காவின் ஏஜென்ட் என்றெல்லாம்கூட ரகுராம் ராஜனைத் தாக்கிய சுவாமி, ரிசர்வ் வங்கியிலிருந்து ரகுராம் ராஜன் வெளியேற வேண்டும் என்று கொந்தளித்தார். மத்திய அரசுடன் ஒத்துப்போகாத காரணத்தால், பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார் ரகுராம் ராஜன்.

சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

ரகுராம் ராஜனாவது ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நியமிக்கப்பட்டவர். ஆனால், பிரதமரின் பொருளாதார ஆலோசகராக மோடியால் நியமிக்கப்பட்டவர் அரவிந்த் சுப்பிரமணியன். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் பரிந்துரையால் நியமிக்கப்பட்டவர் இவர். மத்திய அரசின் இரண்டு பொருளாதார ஆய்வறிக்கைகளைக் கொண்டுவந்தார். ஆனால், ரகுராம் ராஜனுக்கு அடுத்தபடியாக சுவாமியின் இலக்காக அரவிந்த் சுப்பிரமணியன் மாறினார். தன்னால் கொண்டுவரப்பட்டவராயிற்றே என்று ஓடோடி அரவிந்த் சுப்பிரமணியனைப் பாதுகாத்தார் அருண் ஜெட்லி. ஆனாலும், முரண்பாடுகள் காரணமாக மத்திய அரசிடமிருந்து அரவிந்த் சுப்பிரமணியன் விலகிச் சென்றுவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரகுராம் ராஜனுக்கும் அரவிந்த் சுப்பிரமணியனுக்கும் மத்திய பா.ஜ.க ஆட்சியாளர்களுடன்கொண்டிருந்த பொருளாதாரம் தொடர்பான முரண்பாடுகளும் மோதல்களும் வேறு மாதிரியானவை. பொருளாதார நிபுணரான ஜீன் டிரெஸ்ஸோ, அதற்கும் ஒரு படி மேல். இவர், மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள்மீது மட்டுமன்றி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீதே விமர்சனம் வைத்திருப்பவர். இங்கிலாந்திலுள்ள எஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்த இவர், இந்தியாவிலுள்ள ஸ்டாட்டிஸ்ட்டிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம்பெற்றவர். வளர்ச்சிப் பொருளாதாரம் குறித்த துறையில் ஆர்வத்துடன் செயல்படுபவரான ஜீன் டிரெஸ், நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுடன் இணைந்து வறுமை ஒழிப்பு குறித்துப் புத்தகம் எழுதியவர்.

அரவிந்த் சுப்பிரமணியன்
அரவிந்த் சுப்பிரமணியன்

டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், ராஞ்சிப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, பொருளாதார ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்தார். ராஞ்சியில் ஒரு கூட்டத்தில் பேசிய டிரெஸ், மதவாதம் ஆபத்தானது என்று கூறியதுடன், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்து ஒரு விமர்சனத்தையும் முன்வைத்தார். உடனே அந்த மேடையில் அமர்ந்திருந்த ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஒருவர், டிரெஸ் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஆவேசப்பட்டவுடன், அந்த நிகழ்ச்சியில் ஒரே சலசலப்பு. தனது பேச்சைப் பாதியுடன் முடித்திருக்கிறார் ட்ரெஸ். இவருக்கு ‘நகர்ப்புற நக்சல்’ என்ற பட்டத்தையும் பா.ஜ.க-வினர் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பா.ஜ.க ஆட்சியாளர்களின் பொருளாதார, தத்துவார்த்த செயல்பாடுகளுடன் முரண்பட்டிருந்தவர்களைப் பொருளாதார ஆலோசகர்களாக நியமித்ததன் மூலமாக, ஒன்றிய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் அலறவிட்டிருப்பதாக திராவிட இயக்க ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எழுதிவருகிறார்கள்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அதற்கு ஏற்றாற்போலவே பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் ட்வீட்டும் அமைந்திருக்கிறது. `தமிழக அரசுக்கு ஆலோசனை சொல்லும் குழுவில் ‘சமூகநீதி’ எங்கே?’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் வானதி சீனிவாசன்.

சரி, சர்ச்சைகள் இருக்கட்டும். இந்தக் குழுவால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் செழிக்குமா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

`ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ என்று அறிவிக்கப்பட்ட தொலைநோக்குத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த இந்த ஐவர் குழுவின் ஆலோசனைகள் பெரிதும் பயன்படும் என்கிறார்கள் தி.மு.க-வினர். பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய ஏழு துறைகளின் வளர்ச்சிக்குத் தங்களின் பரந்துபட்ட பார்வையுடன்கூடிய ஆலோசனைகளை இவர்கள் வழங்குவார்கள் என்கிறார்கள்.

இது குறித்து பொருளாதாரப் பேராசிரியர் ஜோதிசிவஞானத்திடம் பேசினோம்.

``தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் குறித்து, மாநில வளர்ச்சி கொள்கைக்குழு திட்டமிடும். தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் ஐந்து பேர் கொண்டு பொருளாதார ஆலோசனைக்குழு, மாநிலத்தின் பொருளாதாரத்தை எப்படி எடுத்துச்செல்ல வேண்டும் என்பது போன்ற நீண்டகால அடிப்படையிலான பரந்துபட்ட ஒரு பார்வையைக் கொடுக்கும். அவர்களிடம் மாநில அரசு என்ன எதிர்பார்க்கிறது, என்ன கேட்கிறது என்பதைப் பொறுத்து அது இருக்கும். இவர்கள் எல்லோரும் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள். இவர்கள், பொது விநியோக முறை உட்பட தமிழ்நாட்டின் பல திட்டங்களை ஏற்கெனவே பாராட்டியிருக்கிறார்கள். தமிழ்நாடு ஒரு மாடல் என்று கூறியிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பற்றி அவர்களுக்குத் தெரியும்.

ஜோதிசிவஞானம்
ஜோதிசிவஞானம்

ஜீன் டிரெஸ்ஸை எடுத்துக்கொண்டால் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், சுகாதாரம் தொடர்புடைய திட்டங்கள், சமூகநலத் திட்டங்கள், கல்வி, பெண்கள், குழந்தைகள், உணவு, ஊட்டச்சத்து என நிறைய ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர். ஏற்கெனவே அவர், விழுப்புரம் வந்து 100 நாள் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்று மதிப்பீடு செய்துள்ளார். வறுமை ஒழிப்பு உபட பல அம்சங்களில் டஃப்லோ ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோரால் ஒட்டுமொத்த பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் எப்படிச் செல்ல வேண்டும் என்பது பற்றி சிறப்பாக வழிகாட்ட முடியும். எஸ்.நாராயண் சென்னையைச் சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், 1965 முதல் 2004 வரை மாநில அளவிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் உயர்பதவி வகித்தவர்.

நிதி, தொழில் மற்றும் வர்த்தகத்துறை, எரிபொருள், விவசாயம், கப்பல் போக்குவரத்து, சாலை வசதி போன்ற பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். திராவிட ஆட்சிக் காலத்தில் அரசியல் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் அடிப்படையாக ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு திட்டம் வெற்றியடைவதற்கான பின்னணியை அதன் மூலம் புரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, சமத்துவபுரத் திட்டம். அனைத்துச் சமுதாயத்தினருக்கும் ஒரே இடத்தில் குடியிருப்புகளை உருவாக்கும் திட்டம் அது. அது வெற்றியடைந்த ஒரு திட்டம். அதேநேரத்தில், இந்திரா அவாஸ் யோஜனா என்கிற மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டமும் இருக்கிறது. தேசிய அளவிலான அந்தத் திட்டமானது, சமத்துவபுரம் அளவுக்கு வெற்றியடையவில்லை.

சமத்துவபுரம் வெற்றியடைந்ததற்குக் காரணம், அன்றைய முதல்வர் கருணாநிதி மிகவும் விரும்பி உருவாக்கிய திட்டம் அது. எனவே, அந்தத் திட்டத்தின் மீது முதுல்வர் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து அதிகாரிகள் வேகமாகச் செயல்படுவார்கள். அந்தத் திட்டம் எப்படி நடந்தது என்றெல்லாம் அந்தப் புத்தகத்தில் நாராயண் விவரித்துள்ளார். அரசியல் முடிவுகளைச் செயல்படுத்துவதில் அதிகாரிகளின் பங்கு எந்த அளவுக்கு முக்கியம் என்பது அவருக்கு நன்கு தெரியும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் நிபுணத்துவம் இருக்கிறது. இவர்களெல்லாம் சேர்ந்து ஒரு திட்டத்தைக் கொடுக்கும்போது, அது மிகவும் சிறப்பான ஒரு திட்டமாக இருக்கும். மேலும், அந்தப் பொருளாதார நிபுணர்களுடன் மாநில வளர்ச்சிக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜெயரஞ்சன், விஜயபாஸ்கர், சீனிவாசன் ஆகியோருக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. இதெல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இந்த ஐவர் குழு நியமனம் பெரிய அளவுக்கு உதவும்” என்றார் ஜோதிசிவஞானம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தி.மு.க ஆட்சியில் ஒவ்வோர் அறிவிப்பும் செயல்பாடும் மாநிலத்தில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. அந்த வரிசையில் பொருளாதார ஆலோசனைக்குழு தொடர்பான அறிவிப்பு தேசிய அளவில் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது. மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கிய உலகப் புகழ்பெற்ற நிபுணர்களையெல்லாம் தன் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் அரசு நினைக்கிறது. இவர்களைப் போன்ற சிறந்த பொருளாதார நிபுணர்கள் யாரும் மத்திய அரசிடம் தற்போது ஏன் இல்லை?

ரகுராம் ராஜன் ஐ.மு.கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் என்பதால், அவரை பா.ஜ.க ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். ஆனால், மோடி அரசால் நியமிக்கப்பட்ட அரவிந்த் சுப்பிரமணியனின் பனகாரியாவும், உர்ஜித் படேலும் ஏன் ஓடிப்போனர்கள் என்று தெரியவில்லை. நிபுணர்களின் ஆலோசனைகளைக் காதுகொடுத்து கேட்கும் நிலையில் மோடி அரசு இருக்கிறதா என்ற கேள்வியையும் பலர் எழுப்புகிறார்கள்!