Published:Updated:

`ரஜினி, அஜித் கட்சி ஆரம்பித்தால் ஆதரிப்போம்!'- ராஜேந்திரபாலாஜி

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

``தமிழகத்தில், நல்லவர்கள் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதை ஆதரிப்போம்''

K. T. Rajenthra Bhalaji
K. T. Rajenthra Bhalaji ( ஆர்.எம்.முத்துராஜ் )
`ஸ்டாலினுக்கு வெள்ளையறிக்கை அல்ல, வெள்ளரிக்காய்தான் கொடுப்போம்'- ராஜேந்திர பாலாஜி  கிண்டல்

``நடிகர் விஜய்யைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அதை வரவேற்போம்'' என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

K. T. Rajenthra Bhalaji
K. T. Rajenthra Bhalaji
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், அ.தி.மு.க நிர்வாகியின் இல்ல விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,``சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்த நிகழ்வு வருத்தமளிக்கிறது. விதிகளை மீறி பேனர் வைப்பவர்கள்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். ஒரு சில அ.தி.மு.க நிர்வாகிகள் ஆர்வக்கோளாறால் பேனர் வைப்பது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதைத் தடுப்பதுதான் ஸ்டாலினின் குறிக்கோள். தமிழகம் வளர வேண்டும். தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பெருக வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினுக்கு துளிகூட இல்லை.

ரஜினி மீது காவிச்சாயம் பூசப்படுகிறதா? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 18/08/2019

தி.மு.க ஆட்சிக்காலத்தில் உள்கட்டமைப்பு சரியில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததில்லை. தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில்தான் சாலை வசதிபோன்ற உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளன. குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பவர்களை எப்போதும் திருப்திப்படுத்த முடியாது.

வெளிநாட்டு முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்பதால் அவா்களின் மனம் வெள்ளையாகிவிடாது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இன்னும் பல திட்டங்களை வைத்துள்ளன. அ.தி.மு.க அரசு, தமிழ்நாட்டை முற்போக்கான மாநிலமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஸ்டாலின், பிற்போக்கான நிலைக்குக் கொண்டுசெல்ல முயல்கிறார்.

Rajinikanth
Rajinikanth

காங்கிரஸ் கட்சி நாட்டின் பொருளாதாரத்தை 50 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அதைச் சரிசெய்யும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுவருகிறது. தமிழகத்தில், நல்லவர்கள் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதை ஆதரிப்போம். நடிகர் விஜய்யைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ரஜினி, அஜித் போன்ற நல்ல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அவர்களை ஆதரிப்போம்'' என்று தெரிவித்தார்.