Published:Updated:

பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு... எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணியுமா தமிழ்நாடு அரசு?

முதல்வர் ஸ்டாலின்

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பதைத் தொடர்ந்து, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்குமா?

பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு... எதிர்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணியுமா தமிழ்நாடு அரசு?

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்திருப்பதைத் தொடர்ந்து, தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்குமா?

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, சிறிய கால இடைவேளைக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் அதிகரித்துவந்து. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டியது. டீசல் விலையும் 100 ரூபாயைத் தொட்டது.

பெட்ரோல்
பெட்ரோல்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,000 ரூபாயைத் தாண்டியது. அதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்தன. எனவே, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பல மாநில அரசுகளும் வலியுறுத்திவந்தன. இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் தொடர்பாக கடந்த மாதம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, ``பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. இதே போன்று, மாநிலங்களும் உள்ளூர் வரியைக் குறைத்து மக்களுக்கு அந்தப் பலன் போய்ச்சேர உதவ வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சில மாநிலங்கள் வரியை குறைத்தன. சில மாநிலங்கள் மக்களுக்கு எந்தப் பலனையும் வழங்கவில்லை.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

அதனால், அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகமாக இருக்கிற. இது, அந்த மாநிலங்களின் மக்களுக்குச் செய்கிற அநீதி. மத்திய அரசு சொன்னதை மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கேட்கவில்லை. எனவே, அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து சுமையை அனுபவித்துவருகின்றனர்" என்று மோடி குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரதமரின் அந்தக் குற்றச்சாட்டுக்கு சட்டமன்றத்தில் விளக்கமளித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். “மாநில அரசு வரிகளைக் குறைக்காத காரணத்தால்தான் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். இது பற்றி ஒற்றைவரியில் கூற வேண்டுமென்றால், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் தனது கருத்தை பிரதமர் சொல்லியிருக்கிறார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துகொண்டே வந்தது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல விலையை மத்திய அரசு குறைக்காமல், அதன் மூலம் கிடைத்த உபரி வருவாயை தனதாக்கிக்கொண்டது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டிய வரியைக் குறைத்து, மாநில அரசுக்கு தரவேண்டிய வரியைக் குறைக்காமல், கடுமையாக வரியை உயர்த்தி மக்கள் மீது சுமையைத் திணித்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் முழுவதையும் மத்திய அரசு தனதாக்கிக்கொண்டது. பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே யார் முனைப்பு காட்டுகிறார்கள், விலையைக் குறைப்பதுபோல் யார் நடிக்கிறார்கள் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்று ஸ்டாலின் பேசினார்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்பது தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி. அதன்படி, ஆட்சிக்கு வந்த பிறகு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. ஆனால், டீசல் விலையைக் குறைக்கவில்லை. அது குறித்து அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவந்தன. இந்த நிலையில், தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 8 ரூபாயையும் டீசல் விலையை லிட்டருக்கு 6 ரூபாயையும் மத்திய அரசு குறைத்துள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதைத் தொடர்ந்து கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளன. அதனால், தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் என்று என்று பா.ஜ.க., அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மத்திய அரசு இரண்டு தவணைகளாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.13, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.16 என்று குறைத்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த தி.மு.க., பெட்ரோலுக்கு மட்டும் ரூ.3 குறைத்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை.

 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இப்போதாவது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். மத்திய அரசு குறைத்ததுபோல, மாநில வரியில் குறைந்தபட்சம் பெட்ரோலுக்கு 10 ரூபாயையும், டீசலுக்கு 9 ரூபாயையும் உடனடியாகக் குறைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, “பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு 72 மணி நேரம் கால அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் விலையைக் குறைக்கவில்லையென்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க முடியாது என்று கூறும் தமிழ்நாடு அரசு, மேலும் வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று கூறுகிறது. பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெளிவாகக் கூறிவிட்டார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தியபோது, அது தொடர்பாக மாநிலங்களுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இந்த நிலையில், மாநிலங்கள் தங்கள் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதில் நியாயமில்லை என்கிறது மாநில அரசு. எனவே, எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலுக்கு செவிசாய்க்க தமிழ்நாடு அரசு தயாராக இல்லை என்றே தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism