Published:Updated:

`19-ம் தேதி கூடுகிறது அமைச்சரவை... மழை வெள்ள நிவாரணம் குறித்து முடிவெடுக்கப்படுமா?!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மழை பாதிப்புகளை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்
மழை பாதிப்புகளை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படலாம் என்கிறார்கள் விவரமறிந்த அதிகாரிகள்.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு பெய்த கனமழையால், சென்னையிலுள்ள சாலைகள் எல்லாம் மழைநீரில் மூழ்கின. கொளத்தூர், கொரட்டூர், பெரம்பூர், தாம்பரம், ஆழ்வார்பேட்டை என நகரெங்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே மூன்று நாள்களுக்கும் மேலாகத் தண்ணீர் தேங்கியதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேபோல, கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மழை பாதித்த இடங்களைப் பார்வையிட்டு வரும் முதல்வர் ஸ்டாலின், வரும் நவம்பர் 19-ம் தேதி அவசர அமைச்சரவைக் கூட்டம் நடத்த முடிவெடுத்திருக்கிறார்.

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ``மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருக்கிறார். வடகிழக்கு பருவமழையால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை நிவாரணத் தொகையை அரசு அறிவிக்காதது அரசியல்ரீதியாக முதல்வருக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. அதனால், நவம்பர் 19-ம் தேதி நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், நிவாரணத் தொகை வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கவிருக்கிறார் முதல்வர்.

`முதல்வரின் முகவரி' : எப்படி செயல்படப் போகிறது ஸ்டாலின் அரசு உருவாக்கிய புதிய துறை?

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வருவாய்த்துறையினர் மூலம் முழுமையாகக் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. விவசாயிகளிடம் கருத்துக் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் ஆறு அமைச்சர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவும் முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.6,038 மதிப்பிலான இடுபொருள்களை வழங்க உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதோடு, மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள், வடிகால்களைச் சீரமைக்க 300 கோடி ரூபாயை ஒதுக்கியும், முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதிகாரிகள் திரட்டும் தரவுகள், அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், 'பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எவ்வளவு நிவாரணத் தொகை வழங்குவது?' என்பதை அமைச்சரவை முடிவு செய்யும். விரைவிலேயே நிவாரணத் தொகை அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

Tamil News Today: `நவம்பர் 18-ம் தேதி சென்னைக்கு ரெட் அலெர்ட்!' - சென்னை வானிலை ஆய்வு மையம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு