Published:Updated:

'திரிபுரா ஸ்டைல்' அட்டாக்... தமிழகத்தில் பி.ஜே.பி 'பிளான்' எடுபடுமா?

bjp
News
bjp

ஐந்தே வருடங்களில் 34,000 வாக்குகளிலிருந்து பத்து லட்சம் வாக்குகளாக பி.ஜே.பி வளர்ச்சி பெற, திரிபுராவில் அவர்கள் முன்னெடுத்த

பத்து வருடங்களுக்கு முன்னர், ஹரியானா மாநிலத்தில் சிறு கட்சியாக மட்டுமே இருந்தது பா.ஜ.க. 2009-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒன்பது சதவிகித வாக்குகளுடன் நான்கு தொகுதிகளில் மட்டுமே அங்கு வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த ஐந்து வருடங்களில் அமைப்புரீதியாக அங்கு பா.ஜ.க செய்த மாற்றங்களும், ஜாட் சமூகம் அல்லாத பிற சமூகத் தலைவர்களையும் கட்சிக்குள் கொண்டுவந்த 'ஹைஜாக்' நடவடிக்கைகளும் 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை 33.3 சதவிகித வாக்குகளுடன் ஆட்சியைப் பிடிக்கவைத்தன. அக்டோபர் 21-ம் தேதி ஹரியானாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று தெம்பாக நடைபோட்டுக்கொண்டிருக்கிறது பா.ஜ.க! விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2o27vME

modi
modi

இதற்கே பிரமித்தால் எப்படி? ஹரியானாவில் பி.ஜே.பி எடுத்தது சிங்கிள்ஸ் மற்றும் டபுள்தான்... ஆனால், திரிபுராவில்தான் அடித்ததெல்லாம் சிக்ஸர் மட்டுமே! அங்கு நடைபெற்ற 2008, 2013 சட்டமன்றத் தேர்தல்களில் வெறும் 1.5 சதவிகித வாக்குவங்கியை வைத்திருந்த பா.ஜ.க., போட்டியிட்ட 50 தொகுதிகளில் 49-ல் டெபாசிட் இழந்தது. 2013-க்குப் பிறகு கட்சியை அமைப்புரீதியாக பலப்படுத்தியவர்கள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆட்களை இழுத்துக்கொண்டனர். 25 வருட கம்யூனிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, தங்களால் மட்டுமே முடியும் என மக்களிடம் கருத்தை விதைத்தனர். 2018-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 52 மத்திய அமைச்சர்கள் பிரசாரத்துக்காக திரிபுராவுக்கு அனுப்பப்பட்டனர். விளைவு, அந்தத் தேர்தலில் 43.4 சதவிகித வாக்குகளைப் பெற்று பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. ஐந்தே வருடங்களில் 34,000 வாக்குகளிலிருந்து பத்து லட்சம் வாக்குகளாக பி.ஜே.பி வளர்ச்சி பெற, திரிபுராவில் அவர்கள் முன்னெடுத்த தந்திர அரசியல்தான் பிரதான காரணம்.

இதே வழிமுறையைத்தான் தமிழகத்தில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. முதற்கட்டமாக அமைப்புரீதியாகக் கட்சியைப் பலப்படுத்துவது அவர்களின் திட்டம். அம்பேத்கரைப் பற்றி பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் (இதுவரை 18 முறை) புகழ்ந்து பேசியுள்ளார். தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களின் வாக்குவங்கி 17 சதவிகிதமாக உள்ள நிலையில், மோடியின் அம்பேத்கர் புகழுரை அந்தச் சமூகத்தினரிடையே கட்சியின் செல்வாக்கு வேரூன்ற உதவும் என்பது அவர்களின் திட்டம். இதுபோக வன்னியர், நாடார், முத்தரையர் சமூகத்தினரையும் பா.ஜ.க குறிவைத்துள்ளது. அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி பின்னால் கவுண்டர்களும், டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ் பின்னால் முக்குலத்தோரும் அணிதிரளும்பட்சத்தில், அந்தச் சமூகத்தைத் தவிர்த்த, பிற சமூக வாக்குவங்கிகளையும் ஒருங்கிணைக்க நினைக்கிறது பா.ஜ.க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

> பா.ஜ.க.-வின் இந்த திட்டத்தை முழுமையாக அறிய... இங்கே க்ளிக் செய்க...

> '' 'பெரியாரின் மண்' என்றே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படித்தான் திரிபுரா, மேற்குவங்கம் எல்லாம் 'புரட்சி மண்' என்றே பேசிக்கொண்டிருந்தன. தற்போது அங்கெல்லாம் பா.ஜ.க கொடி பறக்கிறது. இங்கேயும் அதுபோன்ற திட்டங்களுடன் களம் இறங்கியிருக்கும் அந்தக் கட்சியை, உங்களால் எதிர்கொள்ள முடியுமா?'' - இப்படியொரு கேள்வியை சில எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கேட்டோம். அவர்களின் பதில்களை அறிய...

modi
modi

- இதோ ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி > தமிழகத்தில் தாமரை... மிஷன் 234 https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-strategy-for-ruling-party-in-tamil-nadu

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான

325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |