Published:Updated:

`நீதிமன்றத்தால் தூக்கிலிடப்படுவோமா?’ - உதய்பூர் கொலையாளிகள் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் கேட்டதாக தகவல்

உதய்பூர் படுகொலை

உதய்பூர் படுகொலையில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் என்ஐஏ அதிகாரிகளிடம் நாங்கள் தூக்கிலிடப்படுவோமா? அல்லது ஆயுள் தண்டனை கிடைக்குமா? என்ற கேள்வியையே எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

`நீதிமன்றத்தால் தூக்கிலிடப்படுவோமா?’ - உதய்பூர் கொலையாளிகள் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் கேட்டதாக தகவல்

உதய்பூர் படுகொலையில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் என்ஐஏ அதிகாரிகளிடம் நாங்கள் தூக்கிலிடப்படுவோமா? அல்லது ஆயுள் தண்டனை கிடைக்குமா? என்ற கேள்வியையே எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published:Updated:
உதய்பூர் படுகொலை

நபிகள் நாயகம் விவகாரத்தில் பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக கூறி, உதய்பூரில், டெய்லர் ஒருவர் இரண்டு நபர்களால் கொடூரமான முறையில் தலைதுண்டித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கொலைக்கு ரியாஸ் அட்டாரி, கௌஸ் முஹம்மது ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும் இருவரும் `இஸ்லாத்தை அவமதித்ததற்காகப் பழிவாங்கினோம்’ எனக் கூறினர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ரியாஸ் அட்டாரிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. எனினும் பாஜக இந்த குற்றச்சாட்டை மறுத்தது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உதய்பூர் படுகொலை
உதய்பூர் படுகொலை

இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில், உதய்பூர் படுகொலையின் கொலையாளிகள் தற்போது என்ஐஏ காவலில் உள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் என்ஐஏ அதிகாரிகளிடம் நாங்கள் நீதிமன்றத்தால் தூக்கிலிடப்படுவோமா? அல்லது ஆயுளுக்கும் சிறையில் அடைக்கப்படுவோமா ? என்ற கேள்வியை எழுப்பியதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் அவர்கள் செய்த குற்றத்துக்காக வருந்தவில்லை என்றும், கிடைக்கப்போகும் தண்டனை குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!