Published:Updated:

``நாங்கள் காளையிடமிருந்து பால் கறந்திருக்கிறோம்" - குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``ஒரே வருடத்தில் நாங்கள் பஞ்சாப்பை வென்றோம். டெல்லி மாநகராட்சியையும் கைப்பற்றியிருக்கிறோம்." - அரவிந்த் கெஜ்ரிவால்

``நாங்கள் காளையிடமிருந்து பால் கறந்திருக்கிறோம்" - குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து கெஜ்ரிவால்

``ஒரே வருடத்தில் நாங்கள் பஞ்சாப்பை வென்றோம். டெல்லி மாநகராட்சியையும் கைப்பற்றியிருக்கிறோம்." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

நடந்து முடிந்த குஜராத் தேர்தலில், மொத்தமிருக்கும் 182 தொகுதிகளில், 156 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது பா.ஜ.க. கடந்த தேர்தலில், 77 இடங்களில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு, இந்த முறை வெறும் 17 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. புதுவரவான ஆம் ஆத்மி, ஐந்து இடங்களில் மட்டுமே வென்றிருந்தாலும், பல இடங்களில் காங்கிரஸின் வாக்குவங்கியைப் பதம் பார்த்திருக்கிறது. ஆம் ஆத்மிக்கு 12.9% வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

இந்த நிலையில், நேற்று (18.12.2022) கபஷேராவிலுள்ள கலிஸ்டா ரிசார்ட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமையேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், "சீனப் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தியாமீது தாக்குதல் நடத்தும் சீனாவிடமிருந்து இறக்குமதியாகும் பொருள்களை, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு ஏன் தொடர்ந்து அனுமதிக்கிறது... ராணுவ வீரர்களின் உயிர்மீது அரசுக்கு அக்கறை இல்லை.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஒரே வருடத்தில் நாங்கள் பஞ்சாப்பை வென்றோம். டெல்லி மாநகராட்சியையும் கைப்பற்றியிருக்கிறோம். கோவாவில் 2 எம்.எல்.ஏ-க்களையும், குஜராத்தில் 13 சதவிகித வாக்குகளுடன் 5 எம்.எல்.ஏ-க்களையும் பெற்றிருக்கிறோம். குஜராத் வெற்றியைக் குறிப்பிடும் வகையில், நான் எருதுக்குப் பால் கறப்பதாக என்னிடம் நண்பர் ஒருவர் கூறினார். எல்லோரும் பசுவில்தான் பால் கறப்பார்கள், ஆனால் நாங்கள் காளையிடமிருந்து பால் கறந்திருக்கிறோம்" எனப் பேசியிருக்கிறார்.