Published:Updated:

``தாவூத்துடன் சேர்ந்து மும்பையில் கலவரத்தை ஏற்படுத்த பெண் எம்.பி நவ்நீத் ராணா சதி” - சிவசேனா

ராணா தம்பதி

சுயேச்சை பெண் எம்.பி., தாவூத் இப்ராகிமுடன் சேர்ந்துகொண்டு மும்பையில் கலவரத்தை ஏற்படுத்த சதிசெய்வதாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

``தாவூத்துடன் சேர்ந்து மும்பையில் கலவரத்தை ஏற்படுத்த பெண் எம்.பி நவ்நீத் ராணா சதி” - சிவசேனா

சுயேச்சை பெண் எம்.பி., தாவூத் இப்ராகிமுடன் சேர்ந்துகொண்டு மும்பையில் கலவரத்தை ஏற்படுத்த சதிசெய்வதாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ராணா தம்பதி

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்துக்கு முன்பு அனுமான் பாடல்களை பாடப்போவதாக சுயேச்சை எம்.பி நவ்நீத் ராணாவும், அவரின் கணவர் எம்.எல்.ஏ ரவி ராணாவும் அறிவித்தனர். இதனால் மும்பையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சிவசேனாவினர் முற்றுகையிட்டனர். தற்போது இருவரும் தேசத்துரோக வழக்கு உட்பட இரு வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, இருவரும் மும்பையில் திட்டமிட்டு வன்முறையை ஏற்படுத்த முயன்றதாக சிவசேனா குற்றம்சாட்டியிருக்கிறது.

சிறைக்குச் செல்லும் ராணா தம்பதி
சிறைக்குச் செல்லும் ராணா தம்பதி

நவ்நீத் ராணா தன்னைச் சிறையில் மோசமாக நடத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதோடு சிவசேனா எம்.பி தன்னை சாதிப் பெயரைச் சொல்லி விமர்சித்ததாகக் கூறி போலீஸில் புகாரும் செய்திருக்கிறார். இந்நிலையில் நவ்நீத் ராணா, தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், பில்டருமான யூசுப் லக்டாவாலாவிடம் ரூ.80 லட்சம் கடன் வாங்கியிருப்பதாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக அவர் கூறுகையில், ``பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட தாவூத் இப்ராகிம் கூட்டாளி யூசுப் லக்டாவாலாவிடமிருந்து நவ்நீத் ராணா ரூ.80 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். மும்பையில் மதப் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் ராணா தம்பதியர் அனுமான் பாடல்களைப் பாடுதல் மற்றும் அது தொடர்பான சம்பவங்களில் ஈடுபட்டனர். 1992-ம் ஆண்டு நடந்தது போன்ற ஒரு கலவரத்தை ஏற்படுத்த தாவூத் இப்ராகிம் கூட்டத்தினரின் நிதியுதவியோடு நடந்த ஒரு சதி. இந்தப் பணப் பரிவர்த்தனை குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் முதல்வரிடம் கொடுத்துள்ளேன். ஒரு சில லட்சங்களுக்காக விசாரணை நடத்தும் அமலாக்கப் பிரிவு, இது குறித்து விசாரிக்க வேண்டும். தேவேந்திர பட்நாவிஸும், பாஜக தலைவர்களும் ஏன் இதில் அமைதியாக இருக்கின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் கூறுகையில், ``நவ்நீத் ராணா எம்.பி.. யூசுப் லக்டாவாலாவிடமிருந்து ரூ.80 லட்சம் வாங்கியது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராணா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில்கூட இந்தக் கடன் பற்றித் தெரிவித்திருக்கிறார். கடனைத் திரும்ப க்கொடுத்தாரா என்பது குறித்தும், எந்த அடிப்படையில் கடன் வாங்கினார் என்பது குறித்தும் விசாரிக்கப்படும்” என்று தெரிவித்தார். இதனால் ராணா தம்பதிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவ்நீத் ராணா கடந்த மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் ஆதரவோடுதான் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நடிகையான நவ்நீத் ராணா, `அம்பாசமுத்திரம் அம்பானி’ படத்தில் நடிகர் கருணாஸுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism