Published:Updated:

முதல்வர் பாதுகாப்புப்பணியில் 9 பெண் கமாண்டோக்கள் - தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றவர்கள் எனத் தகவல்!

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புப் பிரிவில் ஒன்பது பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் பாதுகாப்புப்பணியில் 9 பெண் கமாண்டோக்கள் - தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றவர்கள் எனத் தகவல்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புப் பிரிவில் ஒன்பது பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு `Z+' பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், முதல்வர் பயணத்தின்போது சஃபாரி உடையணிந்து, துப்பாக்கி ஏந்திய ஒன்பது பெண் கமாண்டோக்கள் அவரின் பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாகப் பேசிய காவல்துறை உயரதிகாரிகள், ``முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்புப்பணிக்கு, தனிப் பாதுகாப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அந்தப் பிரிவில் தற்போது ஒன்பது பெண் கமாண்டோக்கன் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தலைமைக் காவலர் அந்தஸ்துகொண்ட இந்தப் பெண் கமாண்டோக்கள், சிறப்பு தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சி பெற்று நியமிக்கப்பட்டிருக்கின்றனர். X 95 வகை துப்பாக்கி, ஏகே 47 மற்றும் பாதுகாப்பு உடை, அதற்கு மேல் சஃபாரி சூட் எனத் துடிப்புடன் இவர்கள் வலம்வருகின்றனர். தினமும் முதல்வரின் பணிகள் தொடங்குவதிலிருந்து இரவு அவர் ஓய்வு எடுக்கச் செல்லும் வரை முதல்வரின் பாதுகாப்புப் பணிகளை கமாண்டோக்கள் மேற்கொள்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதல்வர்வருடன் செல்வது, அவர் செல்லும் வழியில் பாதுகாப்பை உறுதி செய்வது, கூட்டத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் இவர்கள் முதல்வர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். காவல்துறையில், பல்வேறு பிரிவுகளிலிருந்து இவர்கள் தேர்வு எழுதி கடும் பயிற்சிக்குப் பிறகு முதல்வரின் குழுவில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். துல்லியமாக துப்பாக்கியால் சுடும் திறன், வேகமாக ஓடுதல், கையில் துப்பாக்கி இல்லாமல் ஐந்து பேருக்கும் மேற்பட்டவர்களுடன் சண்டை போடும் திறன், தற்காப்புக்கலை ஆகிய பயிற்சி பெற்றவர்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

காவல்துறை
காவல்துறை

இது தவிர மாநில காவல்துறை சார்பில் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ் தலைமையில் `கோர்செல்', என்ற பெயரில் முதல்வர் பாதுகாப்புப் பிரிவும், வெடிகுண்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆயுதப்படை, சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல்துறை எனப் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் தேவைக்கு ஏற்ப முதல்வர் பாதுகாப்புப்பணியில், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.